“மறைந்துபோன” பறவை மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறது
பெட்டைக்கோழி அளவுள்ள ஒரு பறவை, கிளியைப் போன்று சிவப்புநிற அலகும், நீலம்-நீலங்கலந்த ஊதாநிற இறகுகளையும் கொண்ட பறக்கமுடியாத பறவை 1900-லிருந்து 1948 வரை இல்லாமற் போனது என்று கருதப்பட்டதைப் பற்றியென்ன? மற்றொரு துப்பு: அது நியூஜீலாந்தில் மட்டும் காணப்படுகிறது, அது பழுப்புநிற இனத்தவரின் பெயரைக் கொண்டுள்ளது. அது தான் டாக்காஹீ அல்லது நொட்டோர்னிஸ் மான்ட்டெல்லி ஹோச்ஸ்டெட்டெரி
இப்படிப்பட்ட நழுவிச்செல்லும் பறவைகள் வருடத்தில் பெரும்பாலான சமயம் மர்ச்சஸன் மற்றும் கெப்லர் மலைப்பிரதேசங்களின் மேட்டு நிலத்தில் செலவழிக்கின்றன, அந்த மலைப்பிரதேசங்கள் நியூஜீலாந்தின் தெற்கு தீவுக்கு தென்மேற்கே உள்ள ஃபியார்ட்லேன்டில் அமைந்துள்ளன. என்றாலும் சில பறவைகளைப் பிடித்து வைத்திருக்கின்றனர். டே ஆனவ் என்ற இடத்தில் உள்ள சிறிய பொதுப் பூங்காவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பறவையை இங்கே புகைப்படம் எடுத்திருக்கின்றனர். இந்தப் பெரிய பறவை (ஏறக்குறைய 25 அங்குல நீளம்) “போட்டியின் காரணமாகவும் மற்ற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மிருகங்களின் காரணமாகவும் பெரும் அழிவை அனுபவித்திருக்கிறது,” என்று தி இல்லஸ்ட்ரேட்டட் என்ஸைக்ளோப்பீடியா ஆப் பெர்ட்ஸ் சொல்கிறது. அடைத்து வைக்கப்பட்டு மற்ற மிருகங்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டாலும்கூட, அது இன்னும் ஆபத்திற்குள்ளிருக்கும் இனமாக உள்ளது.
“அது விதைகளின் நுனிகளையும் புற்களின் இளம் தளிர்களையும் உண்கிறது” என்று அதே என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. ஆனால் அது தன் உணவுக்காக “மற்ற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மான்களோடு போட்டியிட வேண்டியிருக்கிறது, அது பொதுவாக அப்போட்டியில் தோல்வியடைந்து விடுகிறது.” இத்தனிச்சிறப்பு வாய்ந்த பறவை நியூஜீலாந்தின் அபூர்வ உயிரினங்களின் பட்டியலிலிருந்து அழிந்து போகாமல் இருக்குமென நாம் நம்புவோமாக.