“என் முகத்தில் கண்ணீர் வடிந்தது”
“மார்ச் 8, 1995, விழித்தெழு! பத்திரிகையை சும்மா திறந்து, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டை அளிக்கிற அதன் பின்பக்க அட்டையில் இருந்த கட்டுரையை வாசித்தேன். ‘அவரில்லாமல் வளர்ந்துவருவது அத்தனை கடினமாக இருந்திருக்கிறது’ என்பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு. பத்து வருடங்களுக்குமுன் தகப்பனை இழந்த ஆஸ்திரியாவைச் சேர்ந்த அந்த வாலிபன் எழுதியிருந்ததை வாசிக்கையில் என் முகத்தில் கண்ணீர் வடிந்தது. எனக்கு வயது 50 ஆகிறது. நான் 7 வயதாயிருந்தபோது என் தகப்பனை இழந்தேன். தன்னுடைய 39-ம் வயதில் புற்றுநோயின் காரணமாக அவர் இறந்துபோனார். ஆறு வருடங்களுக்குமுன் தீவிர மன இறுக்கத்தின் காரணமாக நான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது அவருடைய மரணத்தை நினைத்து அப்படியே துக்கிக்க ஆரம்பித்துவிட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சிகிச்சை பெற்றுவருகிறேன், ஆகவே மிகவும் கடினமான சில பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பது எவ்வாறு என்று நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.
“ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்தக் கடிதத்தை நான் வாசித்ததுவரை, என்னிடமோ அல்லது என்னுடைய விசுவாசத்திலோ என்னமோ பெரிய கோளாறு இருந்துவந்ததாக நினைத்திருந்தேன். நான் மட்டும்தான் மனதின் ஆழத்தில் இவ்வளவு வெறுமையாக உணர்ந்தேன் என்றும் என் அப்பாவுக்காக ஏங்கி தனிமையில் அதிக வேதனையை அனுபவித்தேன் என்றும் யோசித்தேன். இவ்வாறு உணர்வது நான் மட்டுமல்ல, மற்றவர்களும் இப்படித்தான் உணருகிறார்கள் என்று அறிவது எனக்கு மிகவும் உற்சாகத்தைக் தருவதாக இருக்கிறது.
“நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டை தொடக்கம் முதல் கடைசிவரை வாசித்துவிட்டேன். என்னுடைய அபிப்பிராயத்தில், என் தேவைகளுக்காக இதுவரை எழுதப்பட்ட பிரசுரங்களிலேயே மிகச் சிறந்தது இதுவாகத்தான் இருந்தது.”—திருமதி ஏ. ஜி., கன்னெக்டிக்கட், அ.ஐ.மா.
நீங்கள் நேசிக்கும் ஒருவரை மரணத்தில் இழந்துவிட்டீர்களா? பைபிள் அளிக்கும் மெய்யான ஆற்றலைப் பெற விரும்புகிறீர்களா? ஆம் என்றால், Watch Tower, H-58, Old Khandala Road, Lonavla 410 401, Mah., என்ற விலாசத்துக்கோ அல்லது இப்பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதி, இந்த 32-பக்க சிற்றேட்டின் பிரதி ஒன்றை கேட்கத் தயங்காதீர்கள்.