“எனக்கு உற்சாகமூட்டுதலும் நம்பிக்கையும் தேவை”
நீங்கள் எப்போதாவது அவ்வாறு உணர்ந்ததுண்டா? பலர் இன்று அவ்வாறு உணருகின்றனர். அர்கன்ஸாஸைச் சேர்ந்த ஃபோர்ட் ஸ்மித்திலிருந்து ஒரு பெண், நியூ யார்க்கைச் சேர்ந்த புரூக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்துக்கு இவ்வாறு எழுதி, விளக்கினார்:
“நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற உங்கள் புத்தகம் மிகவும் தகவல் நிறைந்ததாயும் பகுத்துணர உந்துவிப்பதாயும் இருக்கிறது. நான் அந்தப் புத்தகம் முழுவதையும் இரண்டே நாட்களில் வாசித்தேன். வாக்குக்கொடுக்கப்பட்ட, இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின்கீழுள்ள புதிய உலகம் சீக்கிரத்தில் இங்கு வரப்போகிறது என்ற நம்பிக்கையை அது எனக்குத் தருகிறது. அந்த நாளுக்காக நான் ஏங்குகிறேன்.
“அதுவரையில், அது சம்பவிக்க நான் காத்திருக்கையில், இந்த உலகில்தான் வாழ்ந்துதீர வேண்டியுள்ளது. நிலையில்லாத, சலிப்பூட்டுகிற, விசேஷமில்லாத இவ் வாழ்க்கையால் நான் மிகவும் உற்சாகமிழக்கிறேன். எனக்கு உற்சாகமூட்டுதலும் நம்பிக்கையும் தேவை. எங்களுக்கு ஆர்வம் இருந்தால், உங்களுடைய அமைப்பின் மூலமாக எங்களுக்கு ஓர் இலவச பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இதை ஏற்பாடு செய்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று தயவுசெய்து எனக்குத் தெரிவிப்பீர்களா? இந்த வீட்டு பைபிள் படிப்பு என்னை உற்சாகமூட்டுவதற்கு உதவும் என்று நான் நினைக்கிறேன்.”
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற நீங்கள் விரும்பினால், அல்லது எவராவது ஒருவர் உங்களுடன் ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்த நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 5-ல் உள்ள உங்களுக்கு மிக அருகிலுள்ள விலாசத்துக்கு எழுதுங்கள்.