இந்தியா சீனா புகையிலையால் புகைகிறது
இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
மேலை நாடுகளில் புகையிலை விளம்பரத்திற்குத் தடைகள் மலைபோல் குவிகின்றன; சிகரெட்டுகள் உடல்நலத்தை ‘சுட்டுவிடும்’ என்ற விழிப்புணர்வு எங்கும் ஊட்டப்படுகிறது. ஆகையால் பிரபல புகையிலை கம்பெனிகள் கிழக்கத்திய நாடுகளை குறிவைத்துள்ளன. உலக வங்கியின் நிதி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுகள் எதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன? சீனாவில் 2010-ம் ஆண்டுக்குள் புகையிலை வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை பதம்பார்த்துவிடுமாம். அங்கு, 29 வயதிற்கு உட்பட்ட இளவட்டங்களில் சுமார் 10 கோடி பேர் புகைபிடிக்கும் பழக்கத்தினால் கல்லறைக்குள் குடிகொள்ள நேரிடும் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் குறிப்பிட்டது.
கிட்டத்தட்ட 100 கோடி பேரை சுமக்கும் இந்தியாவையும் சீனாவுக்கு இணையாக குறிப்பிடுகிறது உலக சுகாதார அமைப்பு. எப்படியென்றால், “புகையிலை முத்தமிடுவதால் வரும் நோய் ‘பூதாகர’ அளவிலும் ராக்கெட் வேகத்திலும் அதிகரிக்கும்” இடங்களில் இவை முதலிடம் பிடிக்கப்போவதாய் குறிப்பிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு கோடி பொடிசுகள் புகையிலையை “தொட்டுப் பார்க்க” ஆரம்பிப்பதாய் அறிக்கைகள் உறுதி செய்கின்றன. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பல்லாண்டுகளாக ‘செயின் ஸ்மோக்கர்’ பட்டம் பெற்றுவந்தார். அந்தப் பட்டத்தை திடீரென துறந்துவிட்டார். எப்படி? விழித்தெழு! பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரைதான் அவர் கையில் ஏந்தும் சிகரெட்டை ஒரே தட்டாக “தட்டிவிட்டது.” இவரோ நன்றிப்பெருக்கால் மடலொன்றை இப்பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு வரைந்தார். டிசம்பர் 8, 1998 இதழில் வெளிவந்த, “எங்களால் முடிந்ததே—உங்களால் முடியாதா என்ன?” என்ற கட்டுரையே இந்த அற்புதத்தைச் செய்தது.
புகைப்பதற்கு ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்? இன்னின்ன காரணத்திற்காக என்னும் சிந்தைக்கினிய விஷயங்களை கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32 பக்க சிற்றேட்டில் பக்கம் 25-ல் அள்ளிப் பருகலாம். நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் இப்பிரசுரத்தை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் விரும்பினால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசங்களில் ஒன்றிற்கோ அனுப்புங்கள்.
□ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
□ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.