உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g04 7/8 பக். 32
  • “ஜெபத்திற்கு கிடைத்த பதில்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “ஜெபத்திற்கு கிடைத்த பதில்”
  • விழித்தெழு!—2004
விழித்தெழு!—2004
g04 7/8 பக். 32

“ஜெபத்திற்கு கிடைத்த பதில்”

அயர்லாந்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டபோது ஒன்பது வயது சிறுவனின் அம்மா சொன்ன வார்த்தைகளே அவை. “அதைப் பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்து விட்டது!” என அவர் வியந்து கூறினார். “இது மிகப் பெரிய பரிசாக இருந்தது; ஏனென்றால் போன வாரம்தான், என் மகனோடு சேர்ந்து எந்த புத்தகத்திலிருந்து படிக்கப் போகிறேனென்று ஒரே கவலையாக இருந்தேன்.

“ஆழமான பைபிள் சத்தியங்களை எளிய முறையில் அதே சமயம் சுவாரஸ்யத்துடன் அவனுக்கு கற்றுக்கொடுக்க உதவி கேட்டு யெகோவாவிடம் நான் ஜெபம் செய்திருந்தேன். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆகவே படங்களோடு விளக்கப்பட்டுள்ள இந்த அழகான புத்தகம் வந்திருப்பது என் ஜெபத்திற்கு கிடைத்த பதில்தான்” என அவர் கூறினார்.

அமெரிக்காவில், ஐந்து பிள்ளைகளுக்கு தாயான ஒருவர் கலிபோர்னியாவிலிருந்து இதேவிதமாக எழுதினார். “மாநாடு நடந்த இடத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் செல்லும் வழியில் என்னுடைய கடைசி மூன்று பிள்ளைகளும் பெரிய போதகரிடமிருந்து கற்றுக்கொள் புத்தகத்தை வாசிப்பதையும் பார்ப்பதையும், அதில் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொள்வதையும் நான் கவனித்தேன்” என அவர் அதில் எழுதியிருந்தார்.

“யெகோவாவிடமிருந்து இந்தப் பரிசை பெற்றபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை; பிறப்பு, திருமணம், முழுக்காட்டுதல் ஆகிய நிகழ்ச்சியின்போதும், இப்பிரபஞ்சத்தின் படைப்பாளரிடமிருந்து மதிப்புமிக்க சிலாக்கியத்தைப் பெறும்போதும் அடையும் சந்தோஷத்தைப் போல அது இருந்தது. சில சமயங்களில் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றை ஆனந்த கண்ணீர் மூலம் நமது அன்பு தகப்பனாகிய யெகோவாவிடத்தில் தெரிவித்துவிடுகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பத்திரிகையின் அளவிலேயே அழகிய படங்களுடன் விளக்கப்பட்டுள்ள இந்த 256 பக்க புத்தகத்தை ஆராய்ந்து படிக்கையில் ஒருவேளை நீங்களும் இது போலவே உணரலாம். கூடுதலான தகவல் பெற வேண்டுமென்றால் இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g04 4/22)

□ பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்