உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 38 பக். 188-192
  • உங்கள் முன்னேற்றம் வெளிப்படுவதாக

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் முன்னேற்றம் வெளிப்படுவதாக
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • இதே தகவல்
  • முன்னேற விரும்புங்கள்—வளர்ச்சி அடையுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இளைஞர்களே, உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • உங்களுடைய முன்னேற்றத்தை விளங்கப்பண்ணுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • உங்களுடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியட்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 38 பக். 188-192

படிப்பு 38

உங்கள் முன்னேற்றம் வெளிப்படுவதாக

1 இந்தப் புத்தகத்தில் எல்லா பாடங்களையும் கவனமாக படித்து பொருத்திய அனுபவத்துக்குப் பின்பு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நீங்கள் இப்பொழுது பட்டம்பெற தயாராக இருக்கிறீர்களா? இல்லை, ஏனென்றால் இது ஊழியப் பயிற்சியின் தொடர்ச்சியான ஒரு நிகழ்ச்சிமுறையாகும். தெய்வீக அறிவை சேமித்து வைத்து நீங்கள் கற்றவற்றை அப்பியாசிப்பது என்பது வருகையில் முழுத் திறமைக்குரிய தகுதி பெறுவது எதுவும் இல்லை. மாறாக, ஊக்கமுள்ள ஒரு மாணாக்கராக, உங்களோடு பரிச்சயமானவர்களால் கவனிக்கமுடிகிறபடி நீங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கலாம்.

2 அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய இளம் உடன் வணக்கத்தானாகிய தீமோத்தேயுவை, ‘வாசித்துக்காட்டுவதிலும், அறிவுரை கூறுவதிலும், போதிப்பதிலும் கருத்தாய் இருந்து, கற்றுக்கொண்ட காரியங்களில் கவலையாயிருந்து, அவருடைய முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியும்படி இவற்றிற்கே முழுவதும் தன்னை ஒப்படைத்துவிடும்படியாக’ துரிதப்படுத்தினார். (1 தீ. 4:13, 14, கத்.பை.) நீங்களும்கூட அதே கடவுளுடைய வணக்கத்தானாக, மற்றவர்களுக்கு உங்கள் முன்னேற்றத்தை வெளிப்படுத்தலாம். முன்னேறுவதற்கு இனிமேலும் வாய்ப்பில்லை என்ற ஒரு கட்டத்தை எப்போதும் சென்றெட்டாமலே அவ்விதமாகத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம். யெகோவா எல்லா மெய்யறிவின் ஊற்றுமூலராக இருக்கிறார், அந்த ஊற்றுமூலர் ஆழங்காணமுடியாத புத்துயிரளிக்கும் தண்ணீரின் மூல ஊற்றைப் போல இருக்கிறார். அதன் ஆழங்களை நாம் ஒருபோதும் முழுமையாக ஆழம்பார்க்க முடியாவிட்டாலும், நித்திய காலத்துக்குமாக அதிலிருந்து ஜீவனையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொண்டே இருக்கலாம். (ரோ. 11:33, 34; ஏசா. 55:8, 9) அப்படியென்றால், உங்கள் முன்னேற்றம் எவ்விதமாக பார்வையாளர்களுக்கு வெளிப்படமுடியும்?

3 முன்னேற்றம் வெளிப்படும் வழிகள். உங்கள் முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிற ஒரு வழி உங்கள் ஊழியப் பள்ளி பேச்சுக்களில் ஆகும். அதிகமாக ஒன்றும் முன்னேறிவிடவில்லை என்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்களைவிடவும்கூட மற்றவர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கவனிக்கலாம். இந்த விஷயத்தில், வளருவதற்கு இத்தனை நீண்ட காலம் ஆகாதிருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைக்கும் ஒரு குழந்தையைப் போல நாமனைவரும் இருக்கிறோம், ஆனால் உறவினர்கள் வரும்போது, அவர்கள் “ஓ, நீ எப்படி வளர்ந்துவிட்டாய்!” என்று வியந்து கூறுகின்றனர். நீங்கள் பள்ளியில் கொடுத்த முதல் பேச்சைப் பற்றி யோசித்துப்பாருங்கள். உங்களுக்கு அது நினைவில் இருக்கிறதா? அதை சமீபத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் பேச்சுக்களோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அப்போது முதற்கொண்டு நீங்கள் அதிகம் கற்றுக்கொண்டு மதிப்புள்ள அனுபவத்தைச் சம்பாதித்துமிருக்கிறீர்கள், அல்லவா? அப்படியென்றால் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருங்கள்.

4 முன்னேற்றமானது ஊழியப் பள்ளியில் கொடுக்கும் பேச்சுக்களில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அது சபை கூட்டங்களிலும்கூட கவனிக்கப்படுகிறது. நீங்கள் கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள், நம்முடைய ஆவிக்குரிய சுகநலத்திற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைப் போற்றுகிறீர்கள் என்பதை அது காட்டுகிறது. மேலுமாக, கூட்டங்களில் கொடுக்கப்படும் குறிப்புகளின் தரம் முன்னேற்றத்திற்கு அத்தாட்சியை அளிக்கலாம். வெறுமனே வாசிப்பதற்குப் பதிலாக தங்களுடைய சொந்த வார்த்தைகளில் குறிப்புகளைச் சொல்பவர்கள் முன்னேற்றத்தைக் காட்டுகின்றனர். அதேவிதமாகவே, நம்முடைய வாழ்க்கையில் படிக்கப்படும் தகவலின் அர்த்தத்தையும் மதிப்பையும்பற்றி குறிப்பு சொல்லுகிறவர்கள் பகுத்துணர்வை தாங்கள் வளர்த்துக்கொள்வதைக் காண்பிக்கின்றனர். இவ்விதமாக, கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராயிருப்பதும் அவற்றில் ஒருவருடைய தனிப்பட்ட பங்கெடுப்பின் தரமும், என்ன முன்னேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைச் சிந்திக்கையில் கவனிக்கப்பட தகுதியுள்ளதாய் இருக்கிறது.

5 வெளி ஊழியத்தில் நீங்கள் செய்திருக்கும் முன்னேற்றத்தைப் பற்றி என்ன? ஊழியத்தை ஆரம்பிக்கையில் அந்த முதல் கதவண்டை நெருங்கும்போது நீங்கள் எவ்விதமாக உணர்ந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? கதவண்டையில் இப்பொழுது உங்கள் திறமையோடு அதை ஒப்பிட்டுப்பாருங்கள். முன்னேற்றமிருக்கிறது, அல்லவா? இருந்தபோதிலும், பிரசங்கிக்கும்போதும் போதிக்கும்போதும் பலன்தரத்தக்க தன்மையில் மேலுமாக முன்னேறுவதற்கு வாய்ப்பிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதைக் குறித்து எந்தச் சந்தேகமுமில்லை. மேலுமாக, ஊழியத்தில் உங்களுக்குச் சாத்தியமான எல்லா அம்சங்களிலும் முழுமையாகப் பங்குகொள்ள முடியுமா? அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார்: ‘நீங்கள் எவ்வாறு நடக்கவேண்டும், கடவுளுக்கு உகந்தவர்களாக எவ்வாறு வாழவேண்டும் என்ற படிப்பினையை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். அதன்படியே நடந்து வருகிறீர்கள்; அதைத் தொடர்ந்து அதிக முழுமையாக செய்துகொண்டிருங்கள்.’ (1 தெ. 4:1, கத்.பை.) யெகோவாவின் சேவையில் ஒரு முழுமையான பங்கை கொண்டிருந்து நீங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கையில், உங்களுடைய பிரசங்கிப்பும் போதிப்பும் அதிக பலன்தரத்தக்கதாக இருப்பதோடில்லாமல், யெகோவாவைச் சேவிக்கும் உங்களுடைய சிலாக்கியத்துக்கான போற்றுதல் ஆழமாகும். வீட்டுக்காரர்களின் பிரதிபலிப்பு நல்லதாக இல்லாவிட்டாலும்கூட, மக்களுக்கு அவருடைய செய்தியைத் தாங்கிச்செல்வதற்கு யெகோவாவால் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒரு சிலாக்கியமாக நீங்கள் இன்னும் கருதுவீர்கள்.

6 ஒருவருடைய முன்னேற்றம் சம்பாஷணையிலும்கூட வெளிப்படுகிறது. ‘இருதயத்தின் நிறைவினால் ஒருவருடைய வாய் பேசும்,’ என்பதாக இயேசு சொன்னார். (லூக். 6:45) ஒருவருடைய சம்பாஷணை அதிகமான அளவு யெகோவாவின் மீதும் அவருடைய நோக்கங்களின் மீதும் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தால், முன்னேற்றம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த நபர் யெகோவாவுக்கான போற்றுதலில் வளர்ந்துகொண்டிருப்பதையும், அவர் கடவுளிடமாக நெருங்கி வருவதையும் அது காண்பிக்கிறது. அவரிடம் அதிகமாக நெருங்கி வருகையில், நமக்கு அது அதிக பாதுகாப்பாக சேவிக்கும்.

7 தினசரி வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்துவதிலும்கூட முன்னேற்றம் வெளிப்படுகிறது. யெகோவாவின் வார்த்தையோடு பரிச்சயமாவதற்கு முன்பாக செய்ததைவிட இப்பொழுது காரியங்களை வித்தியாசமாகச் செய்வதை நீங்கள் காண்பது உண்மையில்லையா? காரியங்களை யெகோவாவின் வழியில் செய்வதில் இந்த முன்னேற்றம் எல்லா இடங்களிலும் உங்கள் செயல்நடவடிக்கையில் பிரதிபலிக்கப்படுகிறது. அது உங்கள் வீட்டில், உங்கள் குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினர்களோடு உங்களுடைய செயல்தொடர்புகளில் தெளிவாக தெரியும்படி இருக்கிறது. உத்தரவாதங்களை நீங்கள் தாங்கும் விதத்தில் அது பிரதிபலிக்கப்படுகிறது. நீங்கள் வேலைசெய்யுமிடத்தில் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிக்க அதிக கவனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள். இவை அனைத்துமே நீங்கள் ஓரளவு முன்னேற்றம் செய்திருப்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. ஆனால் இங்கேயும்கூட, பைபிள் நியமங்களை அதிக முழுமையாக பொருத்திப் பிரயோகிக்க நாடி, முன்னேற்றத்துக்காக நாம் அனைவருமே வேலைசெய்யலாம்.

8 உதவியாயிருக்க உங்களையே அளியுங்கள். முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு மற்றொரு வழி யெகோவாவின் சேவைக்காக அதிகமான அளவு உதவியாயிருக்க நம்மையே அளிப்பதாகும். சங்கீதம் 110:3 சொல்கிறது: ‘உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் தங்களை மனமுவந்து அளிப்பார்கள்.’ அது உங்களைப் பற்றியதில் உண்மையாக இருக்கிறதா? எதிர்காலத்தில் இன்னும் அதிகமான அளவில் இது உங்களுடைய விஷயத்தில் உண்மையாக இருக்கக்கூடுமா?

9 மற்றவர்களுக்கு உண்மையான அக்கறையைக் காட்டி, உதவிசெய்ய உங்களை அளிப்பதன் மூலம், விருப்ப ஆர்வத்தை நீங்கள் காண்பிக்கலாம். சபையிலுள்ள மூப்பர்கள் சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவுமாறு உங்களை கேட்டுக்கொள்ளலாம். கூட்டங்களுக்கு வர இவர்களுக்கு உதவி தேவைப்படலாம். உதவிசெய்வதற்கு நீங்கள் இருக்கிறீர்களா? உங்கள் உதவிக்காக எவராவது ஒருவர் உங்களைக் கேட்கும் வரையாகவும்கூட நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உதவி தேவைப்படுவதாக காணப்படுவோருக்கு உதவி அளித்து ஏன் முன்வரக்கூடாது? எவராவது வியாதிப்பட்டு அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாரா? இதை மூப்பர்கள் நம்முடைய கவனத்துக்குக் கொண்டுவரும்வரையாக நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நீங்கள் முன்முயற்சி எடுத்து அவர்களைச் சென்று சந்தித்து அல்லது தேவையிருப்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் வேறு ஏதாவது ஒரு வழியில் உதவிசெய்யலாம். உங்களுடைய வீட்டில் ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு படிப்பைக் கொண்டில்லாத புதிதாக கூட்டுறவுகொள்ளும் ஒரு குடும்பத்தை அவ்வப்போது இந்தப் படிப்பில் உங்கள் வீட்டாரைச் சேர்ந்துகொள்ள நீங்கள் அழைப்பீர்களேயானால் அது உதவியாக இருக்குமா? அல்லது வெளி ஊழியத்தில் நீங்கள் தனியாகச் செல்வதாய் இருந்தால், உங்களோடு அழைத்துச் செல்ல முன்வந்தால் உங்களோடு வரக்கூடிய மற்றவர்கள் இருக்கிறார்களா? உங்களோடு மற்றொரு பிரஸ்தாபியை வரும்படியாக அழைக்க ஏன் முன்கூட்டியே திட்டமிடக்கூடாது? ஆம், யெகோவாவின் ஊழியர்கள் இந்த நாட்களில் அதிக சுறுசுறுப்பாய் இருக்கின்றனர், ஆனால் மற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்காக நம்மை அளிக்க முன்வருவது நம்முடைய முன்னேற்றத்திற்கு அளவுகோலாகும். “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.”—கலா. 6:10.

10 நீங்கள் ஒரு சகோதரராக இருந்தால், சபையில் முன்நின்று நடத்துகிறவர்களுக்கு கடவுளுடைய வார்த்தை குறிப்பிடும் தகுதிகளைப் பூர்த்திசெய்ய வேலைசெய்வதன் மூலம் உதவிசெய்ய உங்களை அளிக்கலாம். ஒன்று தீமோத்தேயு 3:1 கண்காணிகளாக தகுதிபெற நாடுகிறவர்களைப் பாராட்டுகிறது. கவனிக்கப்படுவதற்காக முன்னால் தன்னை தள்ளிக்கொண்டு முன்செல்லும் அல்லது மற்றவர்களோடு போட்டிப்போடும் ஒரு விஷயமாக இது இல்லை. இது தன்னை முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக, தேவைப்படும் எந்த ஒரு செயல்நிலையிலும் சேவை செய்ய தகுதியுள்ளவராயும் மனமுள்ளவராயும் இருக்கும் ஒரு ‘மூப்பராக’ தன்னை நிரூபிக்க வேலைசெய்யும் ஒரு விஷயமாகும். போதிப்பதிலும், பிரசங்கிப்பதிலும் சபை பொறுப்புக்களைக் கவனிப்பதிலும் முன்நின்று நடத்துவதற்கு ஒவ்வொரு சபையிலும் அநேக ‘மூப்பர்கள்’ மற்றும் ‘உதவி ஊழியர்களுக்கு’ தேவை இருக்கிறது.

11 விருப்ப ஆர்வமுள்ளவர்கள் சபையில் அநேக சிலாக்கியங்களை அனுபவிக்க முடியும். ஊழியக் கூட்டத்தில் நடிப்புகளில் இருக்கும்படியாக அல்லது அவர்கள் மனவிருப்பத்தைக் காண்பித்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எந்த ஒரு வேலையையும் செய்வதில் தங்களைப் பொறுப்புள்ளவர்களாக காண்பித்திருக்கும் காரணத்தால் மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்களுக்கு உதவிசெய்யுமாறு அவர்கள் கேட்கப்படலாம். தேவை எழும்போது, அவர்களுடைய விருப்ப ஆர்வமும் முன்னேற்றமும் ஊழியர்களாக சிபாரிசு செய்யப்படக்கூடிய சகோதரர்களாக அவர்களை குறியிடும். அவர்கள் ஏன் நியமனம் செய்யப்படுகின்றனர்? ஏனென்றால் அவர்கள் விருப்ப ஆர்வத்தைக் காட்டியிருக்கின்றனர் மற்றும் முன்னேறியிருக்கின்றனர், இப்பொழுது யெகோவா தம்முடைய வார்த்தையில் குறிப்பிட்டிருக்கும் தகுதிகளைப் பூர்த்திசெய்கின்றனர். ஊழியர்களாக நியமிக்கப்படுகிறவர்கள் சபை விஷயங்களைக் கையாளுவதற்கு கூடுதலான பயிற்றுவிப்புக்காக அவ்வப்போது ராஜ்ய ஊழியப் பள்ளிகளுக்கு அழைக்கப்படுகின்றனர்.

12 மனமுள்ளவர்களாக இருந்து, அவர்களுடைய சூழ்நிலை அனுமதிக்கும் பட்சத்தில் அனைவருமே அனுபவித்து மகிழக்கூடிய கூடுதலான சிலாக்கியங்கள் இருக்கின்றன. மற்ற ஆயிரக்கணக்கானோர் செய்திருப்பது போல, அவ்வப்போது ஒரு துணைப்பயனியராக உங்களை அளிக்கமுடியுமா? ஒருவேளை நீங்கள் ஓர் ஒழுங்கான பயனியராகி அவர்களுடைய வளர்ந்துவரும் எண்ணிக்கையில் சேர்ந்துகொள்ளலாம். உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளும் யெகோவாவின் சேவையிடமாக உங்கள் நோக்குநிலையும், தேவைப்படுவது அதுவாக இருக்குமானால், சேவை செய்வதற்கு மற்றொரு இடத்துக்கும்கூட மாறிச் செல்வதற்கு மனமுள்ளவர்களாக இருக்கும் அளவுக்கு இருக்கிறதா? அநேகர் விசேஷித்த பயனியர்களாக, அல்லது கிலியட் பள்ளிக்கும் பின்னர் மிஷனரி வேலைக்கும் செல்வதன் மூலமாக, அல்லது தேவை அதிகமாக இருக்கும் இடத்தில் சேவைசெய்ய இடம் மாறி சென்றிருக்கும் பிரஸ்தாபிகளாக இதைச் செய்திருக்கின்றனர். ஒருசிலர் உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பெத்தேல் வீடுகளில் சேவையை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் யெகோவாவுக்குத் தங்களை மனமுவந்து அளித்திருப்பதன் காரணமாக வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்.

13 உயிர்வாழ்வதற்கு இவை கிளர்ச்சியூட்டும் காலங்களாக இருக்கின்றன. இந்த “கடைசி நாட்களில்” யெகோவா பூமியில் மகத்தான ஒரு பிரசங்க மற்றும் போதிக்கும் வேலை செய்யப்படும்படிச் செய்து வருகிறார். யெகோவா தம்முடைய அமைப்பின் மூலமாக ஊழியத்தின் ஏதாவது ஓர் அம்சத்திற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கையில், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: “இது யெகோவா என்னிடமாகச் சொல்லும் ஏதோவொரு காரியமா?” உங்கள் சொந்த சூழ்நிலைகளை, உங்கள் சொந்த இருதயத்தை ஆராய்ந்துபாருங்கள். ஓரளவான முன்னேற்றத்தை ஏற்கெனவே செய்து ஓரளவு விருப்ப ஆர்வத்தையும் நீங்கள் காண்பிக்கக்கூடும் என்பது மிகவும் சாத்தியமே, அது நல்லது. ஆனால் முழுமையான அளவு உதவுவதற்கு உங்களை அளிப்பதன் மூலம், உங்களுடைய முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு மற்ற வழிகள் இருக்கின்றனவா? யெகோவாவின் வழிகாட்டுதலுக்குப் போற்றுதலில் வளர்ந்து அவருடைய வழிநடத்துதலுக்கு உங்களையே ஒப்படைத்துவிடும்போது, நீங்கள் வெகுவாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் மனமுவந்த ஊழியர்கள் அனைவரும் இது இவ்வாறு இருப்பதற்கு சான்றளிக்க முடியும். ஆம், நம்முடைய முன்னேற்றத்தின்பேரில்தானே, கடவுளுடைய புதிய உலகில் நித்திய வாழ்க்கை என்ற எல்லாவற்றுக்கும் மேலான மிகப் பெரிய ஆசீர்வாதம் சார்ந்திருக்கிறது. அதன் காரணமாகவே கடவுளுடைய வார்த்தை இவ்வாறு துரிதப்படுத்துகிறது: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைக்கொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”—1 தீ. 4:15, 16.

[கேள்விகள்]

1, 2. நாமனைவருமே ஏன் முன்னேற்றத்தின் சம்பந்தமாக யோசிக்க வேண்டும்?

3, 4. ஊழியப் பள்ளியிலும் மற்ற சபை கூட்டங்களிலும் முன்னேற்றம் எவ்விதமாக காண்பிக்கப்படுகிறது?

5. ஒருவருடைய வெளி ஊழியத்தில் முன்னேற்றத்துக்கு எது அத்தாட்சியைக் கொடுக்கிறது?

6. ஒருவருடைய சம்பாஷணை எவ்விதமாக ஆவிக்குரிய வளர்ச்சியைப் பிரதிபலிக்கக்கூடும்?

7. பைபிள் நியமங்களைப் பொருத்துவதில் எங்கே முன்னேற்றம் தெளிவாக தெரியும்படி இருக்கும்?

8, 9. மற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவிசெய்ய நம்மைநாமே அளித்தால், இது எதைக் காண்பிக்கிறது, இதற்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

10, 11. ஒன்று தீமோத்தேயு 3:1-க்கு இசைவாக, சகோதரர்கள் எவ்விதமாக உதவுவதற்குத் தங்களையே அளிக்கலாம்?

12, 13. விருப்ப ஆர்வமுள்ளவர்களாகவும் உதவுவதற்கு தங்களையே அளிக்க முடிகிறவர்களாகவும் இருக்கும் அநேகருக்கு வேறு என்ன சிலாக்கியங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்