பகுதி 14—முன்னுரை
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பூமியின் தொலைதூர இடங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொன்னார்கள். அவர்கள் எங்கே பிரசங்கிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். மக்களின் தாய்மொழியில் பிரசங்கிக்கும் சக்தியை அவர்களுக்கு அற்புதமாகக் கொடுத்தார். யெகோவா அவர்களுக்குத் தைரியத்தையும் பயங்கரமான துன்புறுத்தலைச் சமாளிக்க பலத்தையும் கொடுத்தார்.
ஒரு தரிசனத்தில், யெகோவாவின் மகிமையை அப்போஸ்தலன் யோவானுக்கு இயேசு காட்டினார். இன்னொரு தரிசனத்தில், பரலோக அரசாங்கம் சாத்தானைத் தோற்கடிப்பதையும் அவனுடைய ஆட்சிக்கு நிரந்தரமாக முடிவுகட்டுவதையும் யோவான் பார்த்தார். இயேசு ராஜாவாக ஆட்சி செய்வதையும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்கிற 1,44,000 பேரையும் அவர் பார்த்தார். இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறுவதையும், மக்கள் எல்லாரும் யெகோவாவைச் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வணங்குவதையும்கூட பார்த்தார்.