“காட்டுப் புஷ்பங்கள்”
வேலையின்மை. விலைவாசி உயர்வு. வறுமை. பொருளாதார வீழ்ச்சி. இந்த வார்த்தைகள், செய்தி அறிக்கைகளில் அதிகரிக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன. கோடிக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களுக்கு உணவு மற்றும் உடை அளிக்கவும் ஒரு தங்குமிடத்தைக் கொண்டிருக்கவும் முயற்சி செய்வதில் எதிர்ப்படும் கஷ்டங்களை அவை பிரதிபலிக்கின்றன.
விசுவாசிகளும் அவிசுவாசிகளும் ஒரேவிதமாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தப் பிரச்னைகளை எதிர்ப்படுவதற்கு விசுவாசிகள் தனியாக விடப்படவில்லை. முதல் நூற்றாண்டிலிருந்த மனத்தாழ்மையான மக்களிடம் பேசுகையில் இயேசு சொன்னார்: “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”—மத்தேயு 6:26.
இயேசு மேலுமாகச் சொன்னார்: “காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். . . . காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?”—மத்தேயு 6:28-30.
ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்கு வேலை செய்யவேண்டியதில்லை என்று இது அர்த்தப்படுத்துகிறதா? எவ்விதத்திலும் அவ்வாறில்லை! தன்னுடைய செலவுகளைக் கவனிப்பதற்கு ஒரு கிறிஸ்தவன் தேவையான அளவிற்கு கடுமையாக உழைக்கிறான். அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.” (2 தெசலோனிக்கேயர் 3:10) இருந்தாலும், ஒரு கிறிஸ்தவன் கடவுளின் அன்பான அக்கறையை உணர்ந்தவனாகவும் அவனுடைய பரலோக தந்தை அவனைக் கவனிக்கிறார் என்ற விசுவாசத்தைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இவ்வாறாக, வாழ்க்கையின் கவலைகளால் அவன் சமநிலைதவறி தள்ளப்பட்டுவிடுவதில்லை. கஷ்டமான சமயங்களிலும், அவன் முதன்மையான காரியங்களை—ஆவிக்குரிய காரியங்களை—முதலில் வைக்கிறான். அவன் இயேசுவின் வார்த்தைகளை நம்புகிறான்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33. (w93 2/1)