மறைவானப் பொக்கிஷத்தை நாடித்தேடுதல்
தங்கம், 1848-ல், அ.ஐ.மா.-வின் கலிபோர்னியாவிலுள்ள சட்டரின் அறுப்புமில்லில் கண்டுபிடிக்கப்பட்டது. சீக்கிரத்தில் பணக்காரனாக ஆகவேண்டும் என்ற நம்பிக்கையுடன் 1849-க்குள்ளாக ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தில் குவிந்துகொண்டிருந்தனர். மேலும் ஐக்கிய மாகாணங்களின் சரித்திரத்தில் மிகப்பெரிய தங்கவயல் முன்னேறிக்கொண்டிருந்தது. ஒரு வருட காலப்பகுதிக்குள், மிக அருகிலுள்ள துறைமுகமாகிய சான்பிரான்ஸிஸ்கோ, ஒரு சிறிய பட்டணமாக இருந்தது 25,000 பேர்கொண்ட ஒரு நகரமாகியது. திடீர் செல்வத்தின் எதிர்பார்ப்பு ஒரு சக்திவாய்ந்தக் கவர்ச்சிப்பொருளாக நிரூபித்தது.
மறைவான பொக்கிஷத்திற்காக மனிதர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாகத் தோண்டுகின்றனர் என்பதைப் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் அறிந்திருந்தார். மேலும் அவர் பின்வருமாறு எழுதியபோது இதைக் குறிப்பிட்டார்: “ஞானத்தை [புரிந்துகொள்ளுதலை, NW] வா என்று கூப்பிட்டு, புத்தியைச் [பகுத்துணர்வை, NW] சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.”—நீதிமொழிகள் 2:3-5.
தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டு நீங்கள் அநேகக் காரியங்களைச் செய்யமுடியும், ஆனால் புரிந்துகொள்ளுதலையும் பகுத்துணர்வையுங் கொண்டு நீங்கள் அதிகத்தைச் செய்யமுடியும். இவை உங்களுக்குச் சரியானத் தீர்மானங்களைச் செய்வதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் திருமணத்தில் வெற்றிபெறுவதற்கும் மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கும் உதவிசெய்யும். (நீதிமொழிகள் 2:11, 12) அதைப்போலவே, உண்மையான அறிவும் ஞானமும் உங்களுடைய சிருஷ்டிகரை அறிந்துகொள்வதற்கும், அவருடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பிரியப்படுத்துவதற்கும் உதவிசெய்யும். தங்கம் இவற்றில் எதையுமே உங்களுக்குக் கொடுக்கமுடியாது.
பைபிளின் வார்த்தைகள் உண்மையாய் இருக்கின்றன: “பணம் அடைக்கலமாய் இருப்பதுபோல் ஞானம் ஓர் அடைக்கலமாய் இருக்கிறது, ஆனால் அறிவின் அனுகூலம் இதுவாகும்: ஞானம் அதை உடையவருடைய ஜீவனைப் பாதுகாக்கிறது.” (பிரசங்கி 7:12, நியூ இண்டர்நேஷனல் வெர்ஷன்) பலர் திடீர் பணக்காரர்களாய் ஆவதைக்குறித்து கனவுகண்டுகொண்டிருக்கையில், பைபிளைத் திறந்து உண்மையான செல்வமாக இருக்கிற பகுத்துணர்வுக்காகவும் புரிந்துகொள்ளுதலுக்காகவும் அறிவிற்காகவும் ஞானத்திற்காகவும் தோண்டுவது எவ்வளவு அதிக ஞானமானது.