இரத்தமேற்றுதல்கள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன
இந்த இருண்ட எய்ட்ஸ் சகாப்தத்தில் ஒரு மருத்துவமனை நோயாளியின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அறுவைசிகிச்சை அறையின் ஒரு மறைவில் பதுங்கிக்கொண்டிருக்கலாம். “இரத்தமேற்றுதல்களுக்காக பயன்படுத்தப்படும் இரத்தத்தை நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற இரத்தமாக மாற்றுவதற்கு எந்த வழியும் இல்லை,” என்று மருத்துவர் ரிச்சர்ட் ஸ்பென்சர் சொல்கிறார். அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நியூ ஜெர்ஸி, அ.ஐ.மா., கேம்டன்-ல் கூப்பர் மருத்துவமனை-பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உள்ள இரத்தமற்ற அறுவைசிகிச்சை மையத்துக்கு இயக்குநராக இருந்துவந்திருக்கிறார்.
யெகோவாவின் சாட்சிகள் பைபிள் அடிப்படையில் இரத்தமேற்றிக்கொள்வதை மறுப்பவர்கள் என்று நன்கு-அறியப்பட்டிருப்பதன் காரணமாக அந்த மருத்துவ மையம் யெகோவாவின் சாட்சிகளில் அநேகருக்கு சிகிச்சையளிப்பது ஆச்சரியமாயில்லை. (லேவியராகமம் 17:11; அப்போஸ்தலர் 15:28, 29) இருந்தபோதிலும், சாட்சிகளாய் இல்லாத நோயாளிகள் இரத்தமேற்றிக்கொள்வதனால் வரக்கூடிய எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி, மற்றும் வேறு நோய்களால் பீடிக்கப்படுவது போன்ற அபாயங்களைக் குறித்து கவலைப்படுவதால் அநேகர் சிகிச்சைக்காக அந்த மையத்துக்கு வருகின்றனர். “எய்ட்ஸ் அதிகரித்து வருவதானது இரத்தத்தை ஆய்வு செய்வதற்கான தேவையை காண்பித்திருக்கிறது,” என்று கூரியர்-போஸ்ட் வீக்லி ரிப்போர்ட் ஆன் சையன்ஸ் அண்ட் மெடிசன் குறிப்பிடுகிறது. “ஆனால் சிலருடைய விஷயங்களில், இரத்தத்தை ஆய்வுசெய்யும் இந்த வழிமுறையில் விஷக்கிருமிகள் கண்டுபிடிக்கமுடியாமல் போய்விடும், ஏனென்றால் வேறு யாரோ ஒருவர் அந்த விஷக்கிருமிகள் சோதனையில் காணப்படுவதற்கு முன்பாகவே அந்த விஷக்கிருமியால் தொற்றப்பட்டிருக்கலாம்.”
அப்படிப்பட்ட ஆபத்துக்களின் காரணமாக, இரத்தமின்றி அறுவைசிகிச்சை செய்யும் மையம் இரத்தமேற்றுவதற்கு பதிலாக மாற்று சிகிச்சைமுறைகளை பயன்படுத்துகிறது, அது நோயாளியின் சொந்த இரத்தத்தை மறுபடியும் ஏற்றுவதை உட்படுத்துகிறது—சில குறிப்பிட்ட சூழ்நிலைமைகளின் கீழ் சில சாட்சிகள் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு முறையாகும்.a நோயாளியின் இரத்த உற்பத்தியை தூண்டுவிக்கும் மருந்துகளை பயன்படுத்துவதை மற்றொரு சிகிச்சைமுறை உட்படுத்துகிறது. கூடுதலாக, இரத்தமேற்ற வேண்டிய தேவை இல்லாமல், உயிர்வளி வழங்கப்படுவதற்கு உதவிட ஒரு செயற்கை இரத்த மாற்றீடு எப்போதாவது பயன்படுத்தப்படுகிறது. “யெகோவாவின் சாட்சிகள் சிறந்த மருத்துவ சிகிச்சையை கேட்கின்றனர், ஆனால் இரத்தமேற்றுதல்களுக்கு மாற்றீடுகளை விரும்புகின்றனர்,” என்று டாக்டர் ஸ்பென்ஸ் கூறுகிறார்.
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மரியாதை காண்பிக்கும் மருத்துவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஒத்துழைப்புக்காகவும் உதவிக்காகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர். அதன் காரணமாக அவர்கள் உண்மையிலேயே “சிறந்த மருத்துவ சிகிச்சை” பெற்றிருக்கின்றனர், யெகோவா தேவனுக்கு முன்பாக ஒரு சுத்தமான மனச்சாட்சியை காத்து வந்திருக்கின்றனர்.—2 தீமோத்தேயு 1:3.
[அடிக்குறிப்புகள்]
a இந்த முறையைப் பற்றி விவரமான கலந்தாலோசிப்பையும், ஒரு தனிப்பட்ட மற்றும் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட தீர்மானம் எடுப்பதில் உட்பட்டிருக்கும் காரணக்கூறுகளையும் பற்றி ஒரு விவரமான கலந்தாலோசிப்பு ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 1, 1989, பக்கங்கள் 30-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.