சாப்பாட்டு பொட்டலம் சாட்சி கொடுக்கிறது
ஜப்பானில் உள்ள கோப் என்ற இடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தின்போது, பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்த ஜனங்கள் சாப்பாடு கிடைப்பதற்கு அதிகக் கஷ்டப்பட்டனர். இருந்தபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் சாப்பாடு பெற்றுக்கொள்ளாமல் போய்விடவில்லை, அவர்களுடைய நண்பர்களின் தயவான உதவிக்கு நன்றி. பூகம்பம் ஏற்பட்டு முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, அருகாமையில் இருந்த சபைகள் சோற்று உருண்டைகளைக் கொடுத்தனர். விரைவில் அக்கறை காட்டிய நண்பர்கள் சாப்பாட்டு பொட்டலங்களை கொடுத்தனர். சாப்பாட்டு பொட்டலங்களோடு சேர்த்து அந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு, அநேகர் தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கும் சிறு குறிப்புகளை வைத்திருந்தனர். தங்களுடைய ஒவ்வொரு சாப்பாட்டு பொட்டலமும் கண்ணீரால் உப்பாக்கப்பட்டிருந்தது என்று அந்த சாப்பாட்டு பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் சொன்னார்கள். அந்த அனுதாபக் குறிப்புகளை வாசித்தபோது அவர்களால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.
யெகோவாவின் சாட்சிகள் தேவையில் இருக்கும் மற்றவர்களோடு உணவைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு சாட்சி தன் மதிய உணவை காரில் பிரயாணம் செய்துகொண்டிருக்கையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதே கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்த சாட்சியாக இல்லாத ஒரு நபரும் அவரோடு இருந்தார். ஆகையால் அவர் பெற்றுக்கொண்ட சாப்பாட்டு பொட்டலங்களில் ஒன்றை அவருக்குக் கொடுத்தார்.
“இந்த சாப்பாட்டு பொட்டலத்தை நீங்கள் எங்கிருந்து வாங்கினீர்கள்?” என்று அவரோடு வேலை செய்துகொண்டிருந்தவர் கேட்டார். சாட்சிகளின் நிவாரண பணியைப் பற்றி அந்த சகோதரர் விளக்கினார். “நான் காய்கறிகள் சாப்பிட்டு அநேக நாட்கள் ஆகிவிட்டன. நான் அதைக் கொஞ்சம் மிச்சப்படுத்தி என் குடும்பத்தாருக்காக என் வீட்டிற்கு எடுத்துச்செல்லப் போகிறேன்,” என்று அந்த மனிதர் நன்றியுணர்ச்சியோடு கூறினார்.
அவரோடு வேலை செய்துகொண்டிருந்தவர் மூன்றாவது முறை சாப்பாட்டு பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டபோது, அவர் அந்த சாட்சியிடம் 3,000 யென் (சுமார் $35, ஐ.மா.) கொடுத்து: “நீங்கள் செய்யும் வேலையை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். ஆகையால் நீங்கள் செய்யும் வேலைக்கு இதை நன்கொடையாக அளிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னோடு உங்களுடைய சாப்பாட்டை பகிர்ந்துகொண்டதற்காக நன்றி சொல்கிறேன். உண்மையில் உங்களுடைய நண்பர்கள் எல்லாருமே அருமையான ஆட்கள்.”