இரத்தத்திற்கு மாற்று மருந்துகளை நிபுணர்கள் ஆழ்ந்து பரிசீலிக்கின்றனர்
மருத்துவ துறைக்கு ஆர்வம் அதிகரித்துவரும் செய்தி: இரத்தமில்லா மருந்து மற்றும் அறுவை மருத்துவம். இதன்பேரில் கலந்தாலோசிப்பதற்காக ஐக்கிய மாகாணம் முழுவதிலிருந்தும் சுமார் 200 நிபுணர்கள் கிளீவ்லாண்டிலுள்ள ஒஹாயோவில் அக்டோபர் 7, 1995 சனிக்கிழமை கூடிவந்தனர்.
பல இக்கட்டான சூழ்நிலைமைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. உதாரணத்திற்கு, நோயாளி ஒருவர் தீவிர இரத்தச் சோகையினால் அவதிப்படுவாரேயானால், அவரைப் பற்றியது என்ன? மிதமிஞ்சிய குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு இரத்தமின்றி எவ்வாறு சிகிச்சை அளிப்பது? இரத்தமேற்றுதல் இன்றி இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்யமுடியுமா? அக்கறைக்குரியவிதத்தில், இந்தச் சூழ்நிலைகள் அனைத்திலும் நல்ல விளைவுகளோடு, இரத்தமில்லா அறுவை மருத்துவம்—உடலில் சுயமாக இரத்தம் ஊறுதலை அதிகரிக்க உதவும் தொழில்நுட்பங்களை அடிக்கடி பயன்படுத்தும் மருத்துவம்—உபயோகிக்கப்பட்டிருக்கிறது.a
இரத்தமேற்றுதல்களுக்கு பதிலாக மாற்று மருந்துக்கான தேவை ஏன் உள்ளது? “இரத்தமேற்றுதல்கள் அடிக்கடி நோய்களைக் கூடவே கடத்துகின்றன, விசேஷமாக ஹெபடைட்ஸ் பி-ஐ கடத்துகின்றன என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம்” என்று கிளீவ்லாண்டிலுள்ள செ. வின்சென்ட் சாரிட்டி ஹாஸ்பிட்டலின் இரத்தமில்லா மருந்து மற்றும் அறுவை மருத்துவ மையத்தின் இயக்குநரான ஷேரான் வர்னான் கூறுகிறார். அவர் தொடர்ந்து கூறியதாவது: “இரத்தம் நோயைக் கடத்தாவிட்டாலும்கூட, நோயாளியின் நோய்த்தடுப்பாற்றல் அமைப்பை அது ஒடுக்கிவிடலாம்.” இரத்த பரிசோதிப்பின் மூலம் எய்ட்ஸ் பரவுதல் குறைக்கப்பட்டாலும், அத்தகைய பரிசோதனைகளால் கண்டுபிடிக்கப்படாத பல நோய்கள் இன்னும் இருக்கின்றன. இரத்தமில்லா அறுவை மருத்துவத்திற்கு பெரியளவில் தயாரிப்பு செய்யவேண்டிய தேவை இருப்பினும் மருத்துவமனைக்கு அது குறைந்த செலவுள்ளதாகவே நிரூபிக்கிறது, ஏனென்றால், நோயாளி தூய்மை கெட்டுப்போன இரத்தத்தை ஏற்றிக்கொள்ளும்போது வரக்கூடிய சட்டப்பூர்வமான பிரச்சினைகளை அது தவிர்த்துவிடுகிறது.
இரத்தத்தைத் தவிர்க்க யெகோவாவின் சாட்சிகளுக்கு இன்னும் முக்கியமான காரணமிருக்கிறது: அதைக் கடவுளுடைய சட்டம் தடை செய்கிறது. (அப்போஸ்தலர் 15:29) இருப்பினும், கூடுமானவரை சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவே அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறாக, இரத்தமில்லா மருத்துவ சிகிச்சை ஆராய்ச்சியில் முனைந்துள்ள மருத்துவர்களுடன் அவர்கள் ஒத்துழைத்துள்ளனர். அத்தகைய சிகிச்சை யெகோவாவின் சாட்சிகளுக்கு மாத்திரமல்ல, ஆனால் இரத்தமேற்றுதலின் அபாயங்களைக்குறித்து அக்கறையுள்ள மற்ற அநேகருக்கும் பயன்விளைவிக்கிறது.
[அடிக்குறிப்பு]
a விழித்தெழு! இதழ்கள் மார்ச் 8, 1994, பக்கங்கள் 26-29-ஐயும், ஜனவரி 22, 1996, பக்கம் 31-ஐயும் பார்க்கவும்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
WHO photo by P. Almasy