பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்
இங்கிலாந்து, லண்டனில் உள்ள இம்ப்பீரியல் போர் பொருட்காட்சி நிலையத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கடிகாரமும் எலக்ட்ரானிக் எண்காட்டியும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடிகாரம் சுற்றிச் செல்கையில், அந்த எண்காட்டி ஒவ்வொரு 3.31 வினாடிக்கும் ‘கிளிக்’ என்ற ஒலி எழுப்புகிறது. ஒவ்வொரு ‘கிளிக்’ ஒலியோடுகூட மற்றொரு எண் மொத்த எண்ணிக்கையோடு கூட்டிச்சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு ‘கிளிக்’ ஒலியும், ஒவ்வொரு எண்ணும், இந்த நூற்றாண்டின்போது நடைபெற்ற போரின் காரணமாக இறந்துபோன ஒரு ஆண், பெண், அல்லது பிள்ளையை பிரதிநிதித்துவம் செய்கிறது.
அந்த எண்காட்டி அதன் கணக்கிடுதலை ஜூன் 1989-ல் ஆரம்பித்தது, 2000 ஆண்டு முடிவடையும் நள்ளிரவில் அதன் கணக்கிடுதலை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாக எண்காட்டியில் உள்ள எண்ணிக்கை பத்து கோடி என்று பதிவுசெய்யும்—20-ஆம் நூற்றாண்டு முழுவதும் ஏற்பட்ட போர்-சம்பந்தப்பட்ட மரணங்களின் தோராய மதிப்பீடு.
சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு, ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பப்போகும்’ காலத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். அதற்கு இசைவாக, இந்த நூற்றாண்டில் நடைபெற்ற பாழாக்கும் போர்களும் அதோடு சேர்ந்து எண்ணற்ற பூமியதிர்ச்சிகளும், நோய்களும், உணவு பற்றாக்குறைகளும் மற்ற சம்பவங்களும் நாம் “கடைசிநாட்களில்”—1914-ஆம் வருடத்தில் கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக அமர்த்தப்பட்ட சமயத்திலிருந்து பின்தொடர்ந்து வரும் காலப்பகுதி—வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு ஒட்டுமொத்தமாக சாட்சி அளிக்கின்றன என்று யெகோவாவின் சாட்சிகள் வெகுகாலமாக பிரசங்கித்துக்கொண்டு வருகின்றனர்.—லூக்கா 21:10, 11; 2 தீமோத்தேயு 3:1.
ஒடுக்குகிறவர்களை கடவுளுடைய ராஜ்யம் விரைவில் அழித்து பூமியை ஒரு பரதீஸாக மாற்றும் என்ற நற்செய்தியை பைபிளை ஆதாரமாக உபயோகித்து காவற்கோபுரம் அறிவிக்கிறது. போரின் எதிர்காலத்தைப் பற்றியென்ன? பைபிள் குறிப்பிடுகிறது: “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; [போர் ] இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:8, 9.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Clock: By Courtesy of the Imperial War Museum