உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 8/1 பக். 32
  • இனவெறியும் மதமும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இனவெறியும் மதமும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 8/1 பக். 32

இனவெறியும் மதமும்

நான் 1978-⁠ல் அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது, ரொம்ப காலத்துக்கு முன்னாடியே இனப் பிரச்சினைகளை அமெரிக்கா தீர்த்துவிட்டது, கறுப்பர்கள் சரிசமமான பிரஜைகள் என நம்பினேன்.” டைம் பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது தென் ஆப்பிரிக்க எழுத்தாளர் மாற்கு மாட்டாபானே இப்படி சொன்னார். “அநேக அம்சங்களில் அது உண்மையாகத்தான் எனக்குப் பட்டது. தென் ஆப்பிரிக்காவைவிட அமெரிக்கா ரொம்பவே முன்னேறிவிட்டது மாதிரி தோன்றியது. ஆனால் மக்களின் மனதில் அதிக மாற்றமில்லை என்பதை நான் கண்டபோது அதிர்ச்சியடைந்தேன்.” அதிர்ச்சியூட்டும் இந்தக் கண்டுபிடிப்புக்கு அவரை வழிநடத்தியது எது?

“அமெரிக்காவில் பொதுவாக ஆராதனைகள் நடைபெறும் நேரம் ஞாயிறு காலை 11.00 மணி” என்று சொன்னார் மாட்டாபானே. சர்ச்சிலும்கூட மக்கள் மற்ற இனத்தவரோடு சேர்ந்து வழிபட மனமில்லாமல் இருக்கிறார்கள் என்று கூறினார். “மற்ற நாட்களில் அவர்கள் எப்படி இருப்பார்கள்?” என்று கேட்டார். மாற்றத்திற்கு கல்வியே உதவும் என குறிப்பிட்டு மாட்டாபானே இவ்வாறு சொன்னார்: “மனித சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள கல்வியே வழி.”

கல்வியே வழி என்பதை யெகோவாவின் சாட்சிகள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் முக்கியமாக, கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலான கல்வியையே அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஆம், இன தப்பெண்ணம் எனும் தடைகளை தகர்த்தெறிய பைபிள் அவர்களுக்கு உதவுகிறது. இனப் பகைமை தலைவிரித்தாடும் நாடுகளிலும்கூட இது உண்மையாக இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சட்டங்களாலும் நியமங்களாலும் போதிக்கப்படுவதற்கு ஒவ்வொரு வாரமும் ராஜ்ய மன்றங்களில் பல்வேறு இனத்தவரும் தேசத்தவரும் ஒன்றுகூடி வருகிறார்கள். இந்தக் கூட்டங்களில் காணிக்கை வாங்குவதில்லை. நீங்களும் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்