‘மத சுதந்திரத்திற்காக யெகோவாவின் சாட்சிகளுக்கு நன்றி’
“யெகோவாவின் சாட்சிகள் உங்களுடைய வாசற்படி வருகையில் படாரென்று கதவை அடைப்பதற்கு முன்பு, சில காலத்திற்குமுன் அவர்கள் பட்ட அவமானத்தையும் துன்புறுத்துதலையும், முதல் திருத்த மசோதாவால் (First Amendment) நாம் அனைவரும் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கையும் சற்று யோசித்துப் பாருங்கள்” என USA டுடே என்ற செய்தித்தாளில் ஒரு கட்டுரை சொல்கிறது. கொடி வணக்கம் செய்யாததற்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் 1940-கள் முழுவதும் ஐக்கிய மாகாணங்களில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டார்கள்.—யாத்திராகமம் 20:4, 5.
1938-க்கும் 1943-க்கும் இடைப்பட்ட வருடங்களில் ஐ.மா. உயர்நீதி மன்றத்திற்கு யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தப்பட்ட சுமார் 30 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அந்தக் கட்டுரை இவ்வாறு சொல்கிறது: “[யெகோவாவின்] சாட்சிகள் முதல் திருத்த மசோதா சம்பந்தப்பட்ட அடிப்படை விவாதங்களை அடிக்கடி எழுப்பினார்கள்; அதனால் நீதிபதி ஹார்லன் ஃபிஸ்க் ஸ்டோன் இவ்வாறு எழுதினார்: ‘யெகோவாவின் சாட்சிகள் சிவில் உரிமைகள் பற்றிய சட்ட பிரச்சினைகளை தீர்க்க உதவுவதற்காக அவர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும்.’”
எனவே, கடைசி வரிகளில் அந்தக் கட்டுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “[மத] சுதந்திரத்தை விரிவாக்கியதற்காக யெகோவாவின் சாட்சிகளுக்கு எல்லா மதத்தினரும் நன்றி தெரிவிக்க வேண்டும்.”
[பக்கம் 32-ன் படங்களுக்கான நன்றி]
பின்னணி, கட்டிடம்: Photo by Josh Mathes, Collection of the Supreme Court of the United States; கீழே இடது, நீதிபதிகள்: Collection of the Supreme Court of the United States