மத்திய ஆப்பிரிக்காவில் கடவுளுடைய பெயரை பயன்படுத்துகின்றனர்
மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள பெரும்பான்மையோர் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவரே சர்வத்தையும் படைத்தவர் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. (வெளிப்படுத்துதல் 4:11) ஆனால் மற்ற இடங்களிலுள்ள மக்களைப் போலவே யெகோவா என்ற அவருடைய தனிப்பட்ட பெயரை அவர்களும் அடிக்கடி அசட்டை செய்துவிடுகின்றனர்.
மத்திய ஆப்பிரிக்காவில் வாழ்பவர்கள் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளில் வாழ்பவர்களும் “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என பரமண்டல ஜெபத்தில் சொல்லும்போது கடவுளுடைய பெயரை பற்றி குறிப்பிடுகின்றனர். (மத்தேயு 6:9) ஆனால் நெடுங்காலமாக வெகு சிலரே அந்தப் பெயரை அறிந்திருந்தனர். என்றபோதிலும், காலங்கள் செல்லச் செல்ல, யெகோவாவின் சாட்சிகளுடைய வைராக்கியமான பிரசங்க வேலையால் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதை குறித்ததில் மக்களுடைய மனநிலை மாறிவிட்டது. இன்று, ஜூலு (யூஜஹோவா), யொருபா (ஜெஹோஃபா), ஸோஸா (யூயெஹோவா), ஸ்வாஹிலி (யெஹோஃபா) போன்ற அநேக ஆப்பிரிக்க மொழிகளில் கடவுளுடைய பெயர் பரவலாக அறியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த மொழிகளிலுள்ள பெரும்பாலான பைபிள் மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதை தவிர்க்கின்றன.
கடவுளுடைய பெயரை பயன்படுத்தும் சிறந்த மொழிபெயர்ப்பு சான்டே மொழியிலுள்ள பைபிளாகும்; இந்த மொழி மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சூடான், காங்கோ மக்கள் குடியரசு ஆகிய தேசங்களின் சில பாகங்களில் பேசப்படுகிறது. இங்கு வாழ்பவர்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்துகின்றனர், அதை யெகோவா (Yekova) என தங்களுடைய மொழியில் உச்சரிக்கின்றனர். உள்ளூர் மொழியில் கடவுளுடைய பெயரை எப்படி சொன்னாலும், அதை பயன்படுத்துவதே முக்கியம். ஏன்? ஏனென்றால் ‘[யெகோவாவின்] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.’—ரோமர் 10:13.
[பக்கம் 32-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சூடான்
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
காங்கோ மக்கள் குடியரசு
[படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck