“எனக்கு என்ன கோளாறு என்பதை கடைசியில் கண்டுகொண்டேன்!”
டிசம்பர் 1, 2000 காவற்கோபுரம் பத்திரிகையில் வெளிவந்த வாழ்க்கை சரிதையை வாசித்தபோது டோக்கியோவைச் சேர்ந்த ஒருவர் இப்படித்தான் உணர்ந்தார். “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே” என்பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு, அதில் முன்னாள் மிஷனரி ஒருவருடைய அனுபவம் பிரசுரிக்கப்பட்டிருந்தது; அந்த மிஷனரி ‘மேனிக் டிப்ரஸிவ் சைக்கோஸிஸ்,’ அதாவது பித்துவெறி சம்பந்தப்பட்ட உளச்சோர்வு நோயால் அவதிப்படுகிறார்.
டோக்கியோவிலுள்ள அந்த மனிதர் இப்பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “அதில் சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் எனக்கும் கச்சிதமாக பொருந்தின. ஆகவே நான் மனநோய் மருத்துவமனைக்குச் சென்றேன், எனக்கு மேனிக் டிப்ரஷன் இருப்பதை தெரிந்துகொண்டேன். என்னை பரிசோதித்த டாக்டர் அப்படியே அசந்துபோனார். ‘இப்படிப்பட்ட வியாதி இருப்பவர்கள் தாங்கள் வியாதியாக இருப்பதாக நினைப்பதே அபூர்வம்’ என்று அவர் சொன்னார். இந்த வியாதி ரொம்ப மோசமாவதற்கு முன்பே அதை கண்டுபிடிப்பதற்கு எனக்கு உதவி கிடைத்தது.”
காவற்கோபுரத்தையும் அதன் துணைப் பத்திரிகையாகிய விழித்தெழு!-வையும் தொடர்ந்து வாசிப்பதால் உலகில் வாழும் கோடிக்கணக்கானோர் பல விதங்களில் பயன்பெறுகிறார்கள். அதிலுள்ள கட்டுரைகள் தகவல் நிறைந்தவையாகவும் திருப்தியளிப்பவையாகவும் இருப்பதை காண்கிறார்கள். இப்பொழுது, காவற்கோபுரம் 141 மொழிகளிலும் விழித்தெழு! 86 மொழிகளிலும் அச்சிடப்படுகிறது. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தவறாமல் வாசிப்பதை நீங்களும் அனுபவித்து மகிழ்வீர்கள்.