நினைவுகூர வேண்டிய நாள்
இயேசு கிறிஸ்து தாம் இறப்பதற்கு முந்தைய மாலையில், புளிப்பில்லாத அப்பத்தை எடுத்து அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்; அவ்வாறே சிகப்பு திராட்சரசத்தையும் எடுத்துக் கொடுத்து அதை குடிக்கச் சொன்னார். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றும் அவர்களிடம் கூறினார்.—லூக்கா 22:19.
வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 4-ம் தேதி சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நடைபெறும். இந்த நினைவு ஆசரிப்பை இயேசு கட்டளையிட்ட முறையில் அனுசரிப்பதற்கு உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் அந்த நாள் இரவில் ஒன்றுகூடி வருவார்கள். இதில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெறும் சரியான நேரத்தையும் இடத்தையும் தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.