நீங்கள் வாசிப்பதை மனக்கண்களால் காண முடிகிறதா?
நீங்கள் ஏதேனும் சம்பவங்களை பற்றி வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அவற்றில் சில இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கலாம்; அந்த இடங்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தால்தான் சம்பவங்களை மனக்கண்களால் மிக நன்றாக பார்க்க முடியும். உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் மேற்கொண்ட மிஷனரி பயணங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இது பைபிளிலுள்ள அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய முதலாம் மிஷனரி பயணத்தை அந்தியோகியாவில் தொடங்கினார். அங்குதான் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலில் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்பட்டனர். அங்கிருந்து சாலமி, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா மற்றும் தெர்பை போன்ற இடங்களுக்கு பயணித்தார். இந்த இடங்கள் எங்கிருந்தன என்பதை உங்கள் மனக்கண்களால் பார்க்க முடிகிறதா?
உங்களிடம் ஒரு வரைபடம் இல்லையென்றால் ஒருவேளை அதைப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட வரைபடம், ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற 36-பக்க புதிய சிற்றேட்டில் காணப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள மான்டானா நகரைச் சேர்ந்த ஒரு வாசகி இந்தச் சிற்றேட்டிற்கு போற்றுதல் தெரிவித்து இவ்வாறு எழுதினார்: “பவுலின் மிஷனரி பயணங்களை என் மனக்கண்களால் பார்க்க முடிகிறது. அவர் எப்படி பயணம் செய்தார் என்பதையும், அவரும் மற்ற பூர்வ கிறிஸ்தவர்களும் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு செய்த காரியங்களையும் நான் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்கிறேன். இப்படிப்பட்ட அழகிய வரைபட புத்தகத்திற்காக நன்றி.”
பவுலின் மிஷனரி பயணங்களைச் சித்தரிக்கும் வரைபடத்தைப் போல் இன்னும் அநேக வரைபடங்கள் இச்சிற்றேட்டில் உள்ளன. பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளதை கண்முன் கொண்டுவர இவை உதவும். ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதலான தகவல் பெற கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு தயவுசெய்து அனுப்புங்கள்.
◻ ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டைப் பற்றி எந்தவித நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.