உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 11/15 பக். 32
  • யூதா பாழாய் கிடந்ததா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யூதா பாழாய் கிடந்ததா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 11/15 பக். 32

யூதா பாழாய் கிடந்ததா?

பாபிலோனியர்கள் யூதா தேசத்தை முற்றிலும் நாசமாக்குவார்கள் என்றும் நாடுகடத்தப்பட்ட யூதர்கள் திரும்பி வரும்வரை அது பாழாய் கிடக்கும் என்றும் பைபிள் முன்னறிவித்தது. (எரேமியா 25:8-11) இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையில் நிறைவேறியது என்பதை நம்புவதற்கு பலமான சான்று உள்ளது; அது, கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட சரித்திரப் பதிவாகும். நாடுகடத்தப்பட்ட யூதர்களில் தங்கள் தாயகத்திற்கு திரும்பிய முதல் தொகுதி வந்து சேர்ந்து சுமார் 75 ஆண்டுகள் கழித்து அது எழுதப்பட்டது. பாபிலோனிய அரசன், யூதர்களில் “பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்” என்று அது குறிப்பிடுகிறது. அதோடு, யூதா தேசத்தைக் குறித்து, “தேசம் . . . பாழாய்க்கிடந்த நாளெல்லாம் . . . ஓய்ந்திருந்தது” என்றும் குறிப்பிடுகிறது. (2 நாளாகமம் 36:20, 21) இதை நிரூபிக்க தொல்பொருள் அத்தாட்சி ஏதேனும் இருக்கிறதா?

எபிரெய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாலஸ்தீன தொல்பொருள் பேராசிரியர் ஈஃபிரேம் ஸ்டர்ன் என்பவர் பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பூர்வ இஸ்ரவேலின் பெரும்பாலான பகுதிகளை அசீரியர்களும் பாபிலோனியர்களும் நாசமாக்கினார்கள்; ஆனால், இத்தேசத்தை அசீரியர்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட நிலையும், பாபிலோனியர்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட நிலையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது என்று தொல்பொருள் அத்தாட்சி கூறுகிறது.” மேலுமாக, அவர் இவ்வாறு விளக்குகிறார்: “பாலஸ்தீனாவை அசீரியர்கள் ஆக்கிரமித்ததற்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன; ஆனால், பாபிலோனியர்கள் அத்தேசத்தை அழித்தபிறகு, அதை ஆக்கிரமித்ததற்கான அத்தாட்சி இல்லை. . . . பெர்சியர்களுடைய காலப்பகுதி வரையிலுமாக அங்கே மக்கள் குடியிருந்ததற்கான எந்த அத்தாட்சியும் இல்லை. . . . அங்கே எவரும் குடியிருந்ததற்கான சிறு தடயமும் இல்லை. அந்தக் காலப்பகுதியில், பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட ஒரு பட்டணத்தில்கூட மக்கள் குடியேறவில்லை.”

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் ஈ. ஸ்டேஜர் இதை ஒப்புக்கொள்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: பாபிலோனிய அரசர்கள், “பெலிஸ்தியா முழுவதிலும், அதைத் தொடர்ந்து யூதா முழுவதிலும் தீக்கிரையாக்கும் கொள்கையை கையாண்டதால் யோர்தான் நதியின் மேற்குப் பகுதி பொட்டல் காடானது.” அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “பாபிலோனியர்களைக் கைப்பற்றி அரசாண்ட பெர்சிய அரசன் மகா கோரேசின் காலத்தில்தான் . . . எருசலேமிலும் யூதாவிலும் மக்கள் மீண்டும் குடியிருந்ததற்கான தொல்பொருள் அத்தாட்சிகள் கிடைத்திருக்கின்றன. ஏனென்றால் அப்போதுதான் நாடுகடத்தப்பட்ட யூதர்கள் அநேகர் தங்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தார்கள்.”

யூதா பாழாய் கிடப்பதைக் குறித்த யெகோவாவின் வார்த்தை உண்மையில் நிறைவேறியது. யெகோவா தேவன் முன்னறிவிப்பது நிச்சயம் நிறைவேறும். (ஏசாயா 55:10, 11) ஆகவே, யெகோவாமீதும் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குறுதிகள்மீதும் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம்.​—⁠2 தீமோத்தேயு 3:⁠16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்