நினைவுகூர வேண்டிய நிகழ்ச்சி!
ஏப்ரல் 2, திங்கட்கிழமை
அது பொ.ச. 33-ஆம் வருடம், நிசான் மாதம் 14-ஆம் தேதி. அன்று இயேசு, திராட்ச ரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்.—லூக்கா 22:19.
இயேசு கட்டளையிட்டபடியே உலகெங்கிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் வருடத்திற்கு ஒருமுறை அதே நாளில் அவரது மரண நினைவுநாளை ஆசரிப்பதற்குக் கூடிவருகிறார்கள். அது, இந்த வருடம் நிசான் 14-ஆம் தேதி ஏப்ரல் 2, திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தொடங்குகிறது. அன்று மாலை நடக்கவிருக்கும் இந்த நினைவுநாள் ஆசரிப்பில் எங்களுடன் கலந்துகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். கூட்டம் நடைபெறும் இடத்தையும் சரியான நேரத்தையும் உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.