ரஷ்ய பாடலில் கடவுளுடைய பெயர்
மோ டெஸ்ட் முஸார்ஸ்கீ என்ற புகழ்பெற்ற ரஷ்ய பாடலாசிரியர் 1877-ஆம் ஆண்டில், பைபிள் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து ஒரு பாடலை இயற்றினார். அதைப்பற்றி தன் நண்பனுக்கு இவ்வாறு எழுதினார்: “ஜீசஸ் நாவினஸ் [ஜோஷுவா] என்ற தலைப்பில் பைபிள் சம்பவம் ஒன்றை அதில் உள்ளபடி அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறேன்; கானான் தேசத்தில் நாவினஸ் கைப்பற்றிய ஊர்களைப் பற்றியும் அதில் எழுதியிருக்கிறேன்.” “சனகெரிப்பின் அழிவு” என்ற ரஷ்ய பாடல் உட்பட மற்ற பாடல்களிலும் பைபிள் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், “ஜீசஸ் நாவினஸ்” என்ற பாடலிலும் “சனகெரிப்பின் அழிவு” என்ற பாடலின் 1874-ஆம் வருட பதிப்பிலும் கடவுளுடைய பெயரை ரஷ்ய மொழியில் உச்சரிக்கப்படும் விதமாகவே முஸார்ஸ்கீ உபயோகித்திருந்தார். எபிரெய வேதாகமத்தில் கிட்டத்தட்ட 7,000 தடவை காணப்படும் கடவுளுடைய பெயர், நான்கு மெய்யெழுத்துக்களில், அதாவது ய்ஹ்வ்ஹ் (YHWH [יהוה]) என்ற எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனவே, முஸார்ஸ்கீயின் இந்தப் பாடல்களிலிருந்து, யெகோவா என்று பைபிளில் குறிப்பிடப்படுகிற கடவுளுடைய பெயரை 20-ஆம் நூற்றாண்டு ஆரம்பமாவதற்கு முன்பே ரஷ்யர்கள் அறிந்திருந்தார்கள் என்பது தெரிகிறது. அப்படி அவர்கள் அறிந்திருந்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில், மோசேயிடம் யெகோவாவே இவ்வாறு சொன்னார்: “இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!”—யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 3:15, பொது மொழிபெயர்ப்பு.
[பக்கம் 32-ன் படம்]
1913-ல் செ. பீட்டர்ஸ்பர்க் கன்சர்வேட்டரி; இங்கே முஸார்ஸ்கீயின் இசைக் குறியீட்டு தாள்கள் வைக்கப்பட்டுள்ளன
[பக்கம் 32-ன் படங்களுக்கான நன்றி]
Sheet music: The Scientific Music Library of the Saint-Petersburg State Conservatory named after N.A. Rimsky-Korsakov; street scene: National Library of Russia, St. Petersburg