பொருளடக்கம்
டிசம்பர் 31, 2018–ஜனவரி 6, 2019
3 “சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே”
ஜனவரி 7-13, 2019
8 “உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்”
யெகோவா சொல்லித்தருகிற சத்தியத்தை நேசிக்க இந்த இரண்டு கட்டுரைகளும் உதவும். நாம் விட்டுக்கொடுக்கிற எதுவும் சத்தியத்துக்கு ஈடாகாது! சத்தியத்தைத் தொடர்ந்து ஒரு பொக்கிஷம் போல் பார்க்க எது உதவும் என்றும் இந்தக் கட்டுரைகளில் தெரிந்துகொள்வோம். சத்தியத்தை ஒருபோதும் விட்டுவிடாமல் இருக்கவும், வேறு எதற்காகவும் அதை விற்றுவிடாமல் இருக்கவும் இவை உதவும்.
ஜனவரி 14-20, 2019
13 யெகோவாவை நம்புங்கள் என்றென்றும் வாழுங்கள்!
கஷ்டங்களை அனுபவிக்கும்போது நாம் எப்படித் தொடர்ந்து யெகோவாவின் மேல் நம்பிக்கை வைக்கலாம் என்பதை ஆபகூக் புத்தகம் காட்டுகிறது. எவ்வளவுதான் கஷ்டங்களையும் சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்தாலும், கடவுள்மீது நாம் நம்பிக்கை வைத்திருப்பதால், அவர் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரை கொடுக்கும்.
ஜனவரி 21-27, 2019
18 உங்கள் யோசனைகளை வடிவமைப்பது யார்?
ஜனவரி 28, 2019–பிப்ரவரி 3, 2019
23 யெகோவாவைப் போல் நீங்கள் யோசிக்கிறீர்களா?
நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போகப்போக, நம்முடைய யோசனைகளைவிட அவருடைய யோசனைகள்தான் மிக மிக உயர்ந்தவை என்பதைப் புரிந்துகொள்வோம். இந்த உலகத்தின் யோசனைகள் நம்மை வடிவமைக்கும்படி விட்டுவிடாமல் இருப்பது எப்படி என்றும், யெகோவாவைப் போலவே நாம் எப்படி யோசிக்கலாம் என்றும் இந்த இரண்டு கட்டுரைகள் விளக்கும்.