அறிவிப்புகள்
●பிப்ரவரி மற்றும் மார்ச் மாத விஷேச அளிப்பு: இது நவம்பர் 1986 நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிப்புகளின் கீழ் கொடுக்கப்பட்ட எந்த 192-பக்க புத்தகத்தையும் நன்கொடை ரூ.5-க்கு கொடுக்கலாம். (பிப்ரவரி, மார்ச் அளிப்புக்காக பிரஸ்தாபிகளாலும் பயனியர்களாலும் எடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குச் சபைகள் கிரெடிட் கேட்கலாம். இந்தப் பிரசுர அளிப்பு சமயத்தில் மட்டும் ஒழுங்கான மற்றும் விசேஷ பயனியர்களுக்கு இந்தப் புத்தகத்தின் விலை ரூ.2.50. சபை பிரஸ்தாபிகளுக்கும் துணைப்பயனியர்களுக்கும் ஒரு பிரதியின் விலை ரூ.4.50.) நல்ல தரமான தாளில் அச்சடிக்கப்பட்டிக்கும் புத்தகங்கள் இந்த விலைக்கு அளிக்கப்படமாட்டாது. பழைய புத்தகங்களைக் கொண்டிராத சபைகள் மற்ற 192-பக்க புத்தகங்களை விலை ரூ.10-க்கு அளிக்கலாம். ஏப்ரல்: உயிர் அது இங்கு எப்படி வந்தது பரிணாமத்தின் மூலமா? அல்லது சிருஷ்டிப்பின் மூலமா? நன்கொடை ரூ.30-க்கு. (சிறிய அளவு புத்தகம் ரூ.15-க்கு.) இந்திய மொழிகளில் பிரசுர அளிப்பு இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா! ரூ.5-க்கு. மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு சந்தா. ஏப்ரல், மே மாதங்களுக்குக் கூடுதலான பத்திரிகை ஆர்டர்களுக்கு பக்கம் 4-ஐ பார்க்கவும்.
●மார்ச் ஆரம்பம் முதற்கொண்டு ஏப்ரல் 1-ற்குள்ளாக வட்டார ஊழியர்களுடைய புதிய பொதுப்பேச்சு, “கடவுளுடைய நியாயத்தீர்ப்பு உங்கள் மீது ஒரு கண்ணியைப் போல் வருமா?”
●ஞாபகார்த்த நாளை பின்தொடர்ந்து ஞாயிறு ஏப்ரல் 2, 1989 அன்று உலக முழுவதிலும் ஒரு விசேஷ பொதுப்பேச்சு கொடுக்கப்படும் அந்தப் பேச்சின் தலைப்பு “சத்தியத்துக்காக தாகமுள்ளோரே வாருங்கள்!” குறிப்புத்தாள் வழங்கப்படும் அந்த வாரத்தில் வட்டார ஊழியர் சந்திப்பையோ வட்டார மாநாட்டையோ விசேஷ அசெம்பளி நாளையோ கொண்டிருக்கும் சபைகள் விசேஷ பொதுப்பேச்சை அடுத்துவரும் வாரத்தில் கொண்டிருப்பார்கள். எந்தச் சபையும் விசேஷ பொதுப்பேச்சை ஏப்ரல் 2-ம் தேதிக்கு முன்பு கொண்டிருக்கக் கூடாது.
●ஜனவரி சந்தா விலைகள் ஏறிவிட்டதன் காரணமாக வாராந்தர சந்தா பாரம் (M-203-ஐ) சங்கத்துக்கு அனுப்புகையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள்.