அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: நவம்பர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கு அல்லது இரண்டிற்குமே ஓராண்டு சந்தா, ஒன்றுக்கு ரூ40. ஆங்கிலத்தில் ஆறு மாத சந்தா, மற்றும் மாத பத்திரிகைகளுக்கு ஓராண்டு சந்தாவின் விலை ரூ20. மாத இதழ்களுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் அத்துடன் பத்திரிகையளவு புரோஷூர் ஒன்றும். பைபிள் எண் 12 (ஒத்துவாக்கிய பைபிள்) பயன்படுத்தப்படுகையில் புரோஷூருடன் சேர்த்து நன்கொடை ரூ43. 1971 அல்லது 1981 பதிப்பு பைபிள் அளிக்கையில், புரோஷூருடன் சேர்த்து அதன் நன்கொடை ரூ38. ஜனவரி 1990: மெய்ச் சமதாதானம் பாதுகாப்பு—நீங்கள் அதை எப்படிக் கண்டடையலாம்? (மெய்ச் சமாதானம் புத்தகம் இல்லாத இடங்களில் 192 பக்க இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கலாம்.) பிப்ரவரி, மார்ச்: ஆங்கிலத்தில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்கள் ரூ10. இந்திய மொழிகளில் ஒன்று ரூ5.
● நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் கணக்குகளை டிசம்பர் 1-ல் அல்லது கூடிய அளவு சீக்கிரமாக தணிக்கைச் செய்ய வேண்டும்.
● மறுபதிப்பு செய்யப்பட்ட ஆங்கில காவற்கோபுர புத்தகத் தொகுப்புகள் இப்பொழுது சபைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு புத்தகத் தொகுப்பும் ரூ60. ஐந்து புத்தக தொகுப்புகள் சேர்ந்து ரூ300. இவற்றை கையிருப்பில் வைக்கக்கூடாது. ஆர்டர் செய்தவர்களிடம் இவற்றை உடனடியாக ஒப்படைத்துவிட வேண்டும். இவற்றிற்கான பணத்தைச் சீக்கிரமாக சங்கத்திற்கு அனுப்பிவிட வேண்டும். (கட்டுப்பாட்டு உருப்படிகளைக் குறிப்பாக யாராவது கேட்டிருந்தால் மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும். அதைப் பெற்றவுடன் அதற்கான தொகையை அடுத்த லிட்ரேச்சர் ரெமிட்டன்ஸ் உடன் அனுப்பிவிட வேண்டும்.)
● இலக்கியங்களைச் சபைகளுக்கு அனுப்புகையில் அதிக குறைந்த செலவுள்ள வழிமுறையையே சங்கம் பயன்படுத்துகிறது. அது வழக்கமாக ரயில் மூலமே. உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ ரயில் நிலையம் இல்லாத பட்சத்தில் வேறு வகையைப் பயன்படுத்துகிறது. உங்கள் இலக்கிய ஆர்டர்கள் லாரி டிரான்ஸ்போர்ட் மூலம் அனுப்பப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு ஆகும் கூடுதலான செலவைச் சங்கம் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். ரயில் மூலம் அனுப்பப்படும் செலவைக் காட்டிலும் லாரிசெலவுகள் தோராயமாக இருமடங்கு அதிகமாகிறது. உங்கள் இலக்கியங்களைத் தயவுசெய்து மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் ஆர்டர் செய்யவேண்டாம்.
● சந்தா சீட்டுகள் எல்லா அம்சங்களிலும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் காரியதரிசிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி பூர்த்திச்செய்யாமல் விடப்படும் தகவல்கள் மொழி, சபை எண், மற்றும் பின்கோட் எண் ஆகியவை.