அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: ஏப்ரல்: ஒரு புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் என்ற ஆங்கில புத்தகம் நன்கொடை ரூ10. (இந்தப் பிரசுரம் இல்லாத இடங்களில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கவும்.) இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பாக பழைய 192 பக்க புத்தகம் ஒன்றுக்கு ரூ5. மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ40. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ20. மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. ஜூலை: பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புதிய ஆங்கில புத்தகத்தை ரூ10-க்கு அளிக்கவும். (இது இல்லாவிட்டால், விசேஷ அளிப்பாக கொடுக்கப்படும் 192 பக்கங்களைக் கொண்ட பழைய புத்தகங்களில் ஒன்று ரூ5-க்கு அளிக்கவும்.) ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுர் (ஆங்கிலம்) தவிர, 32 பக்கங்களைக் கொண்ட மற்ற புரோஷுர்களில் எதையாகிலும் ரூ3-க்கு அளிக்கலாம். அக்டோபர்:படைப்பு புத்தகத்தை ரூ30-க்கு அளிக்கலாம். சிறிய அளவு புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மற்ற மொழிகளில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் பயன்படுத்தலாம்.)
● ஞாபகார்த்த தினத்திற்கு பின்பு, ஞாபகார்த்த அறிக்கை (S–7) அட்டையை தயவுசெய்து உடனடியாக பூர்த்திசெய்து சங்கத்துக்கு அனுப்பிவிடுங்கள்.
● விசேஷ அளிப்பாக பயன்படுத்தப்படக்கூடிய 192 பக்க பழைய புத்தகங்களைப் பற்றிய நினைப்பூட்டுதல். அவை பின்வருமாறு: ஆங்கிலம்: தெரிவு, நித்திய நோக்கம், பரிணாமம், பரிசுத்த ஆவி, சமாதானமும் பாதுகாப்பும் (பழைய பதிப்பு), இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?, சத்தியம். இந்திய மொழிகளில், மலையாளத்தில்: நற்செய்தி, பெரியபோதகர், பொய்ச் சொல்லக்கூடாத காரியங்கள், இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?; தமிழ்: பெரிய போதகர், சமாதானம், இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?; பெங்காலி: நற்செய்தி, சத்தியம்; குஜராத்தி: நற்செய்தி, ராஜ்யம் வருவதாக, சத்தியம்; ஹிந்தி: நற்செய்தி, இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?; கன்னடம்: நற்செய்தி, பொய்ச் சொல்லக்கூடாத காரியங்கள்; மராத்தி: குடும்ப வாழ்க்கை, பெரிய போதகர், ராஜ்யம் வருவதாக; பஞ்சாபி: சத்தியம்; தெலுங்கு: நற்செய்தி, சத்தியம்.
● கிளை அலுவலகத்தில், சொற்ப எண்ணிக்கையில் விழித்தெழு! புரோஷுர்கள் இருக்கின்றன. அவற்றை விசேஷ அளிப்பாக மூன்று பிரதிகள் ரூ.1.50-க்கு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பொது மக்களுடைய கைகளில் கிடைக்கச் செய்ய விரும்புகிறோம். அவைகள் குஜராத்தி, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கும். உரிய நேரத்தில் அவை உங்கள் கைகளில் கிடைப்பதற்கு இதைச் சீக்கிரமாக ஆர்டர் செய்யுங்கள்.