தேவராஜ்ய செய்திகள்
◆ ஆஸ்திரேலியா அக்டோபரில் 51,152 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை அறிக்கை செய்வதில் மகிழ்ச்சியடைகிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததைக் காட்டிலும் இது 5.3 சதவிகித அதிகரிப்பு. கடந்த அக்டோபரில் பெற்ற 2,981 சந்தாக்களோடு ஒப்பிடுகையில் மிகச் சிறந்த மொத்த எண்ணிக்கையாக 5,422 சத்தாக்களைப் பெற்றார்கள்.
◆ ஹாங் காங் அக்டோபர் மாதத்தில் 2,032 பிரஸ்தாபிகளின் ஒரு புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது. அவர்கள் பெற்ற 4,511 மொத்த சந்தாக்கள் சந்தா அளிப்பு மாதத்திலேயே எப்போதுமிருந்திராத மிகச் சிறந்த ஒன்றாக இருந்தது. ஒரே மாதத்தில் முன்பு பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகம்.
◆ ஐமேய்க்கா அக்டோபரில் 8,701 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது.
◆ நைஜீரியா அக்டோபரில் 1,39,150 பிரஸ்தாபிகளை அறிக்கை செய்தது. இது புதிய ஊழிய ஆண்டிற்கான அவர்களுடைய இரண்டாவது உச்சநிலையாகும். அவர்கள் ஒழுங்கான பயனியர்களில் 9,244 புதிய உச்சநிலையையும் வீட்டு பைபிள் படிப்புகளில் 1,83,701 புதிய உச்சநிலையையும் கொண்டிருந்தனர்.
◆ சாலமோன் தீவுகளில் 2,339 பேர் மாவட்ட மாநாட்டுக்கு வருகை தந்தனர். 37 பேர் முழுக்காட்டப்பட்டனர். பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கை 777.
◆ தாய்வான் அக்டோபரில் ஊழியத்தில் கலந்துகொண்ட 1,594 பிரஸ்தாபிகளோடு 7 சதவிகித அதிகரிப்பை அறிக்கை செய்தது. இது ஒழுங்கான பயனியர்கள் மற்றும் துணைப்பயனியர்களிலும் புதிய உச்சநிலைகளை உட்படுத்தியது. மணிநேரங்கள், மறுசந்திப்புகள், சந்தாக்கள், மற்றும் பத்திரிகைகள் இவையனைத்திலுமே உச்ச நிலைகள். சபை பிரஸ்தாபிகள் சராசரியாக 12.2 மணிநேரங்களை எட்டினார்கள். இதிலும் புதிய உச்சநிலை.