அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்குச் சந்தா. ஓர் ஆண்டு சந்தாவின் விலை ரூ40. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்தர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ20. மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. சந்தா ஏற்றுக்கொள்ளப்படாத போது இரண்டு பத்திரிகைகளையும் பத்திரிகையளவு புரோஷுரையும் சேர்த்து ரூ7/-க்கு அளிக்கவும். ஜூலை: பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புதிய ஆங்கில புத்தகத்தை ரூ10-க்கு அளிக்கவும். (இது இல்லாவிட்டால், விசேஷ அளிப்பாக கொடுக்கப்படும் 192 பக்கங்களைக் கொண்ட பழைய புத்தகங்களில் ஒன்று ரூ5-க்கு அளிக்கவும்.) ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுர் (ஆங்கிலம்) தவிர, 32 பக்கங்களைக் கொண்ட மற்ற புரோஷுர்களில் எதையாகிலும் ரூ3-க்கு அளிக்கலாம். அக்டோபர்:படைப்பு புத்தகத்தை ரூ30-க்கு அளிக்கலாம். சிறிய அளவு புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மற்ற மொழிகளில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் பயன்படுத்தலாம்.) நவம்பர்: ஓராண்டு சந்தா விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைகளுக்கு அல்லது இரண்டுக்கும், ஒவ்வொன்றும் ரூ40. (ஆறுமாத சந்தா மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓராண்டு சந்தா ரூ20. மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத சந்தா கிடையாது.)
.● நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரோ சபை கணக்குகளை ஜூன் 1, அல்லது அதற்குப் பின் விரைவில் தணிக்கை செய்ய வேண்டும்.
● ஞாபகார்த்த அறிக்கை அட்டையை (S-7) இதுவரை சங்கத்துக்கு அனுப்பாத எல்லாச் சபைகளும் சீக்கிரமாக அனுப்பிவிடவும்.
● ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின்போது குஜராத்தி, ஹிந்தி, கன்னடா ஆகிய மொழிகளிலிருக்கும் விழித்தெழு! புரோஷுர்கள் மட்டும் விசேஷ அளிப்பாக கொடுக்கப்படும். மூன்று புரோஷுர்கள் சேர்த்து ரூ1.50-க்கு அளிக்கப்படும். இதற்கு நல்ல ஆதரவு கொடுக்கப்பட்டால் நலமாக இருக்கும். அப்பொழுது இந்தப் பழைய பிரசுரங்கள் பொதுமக்களின் கைகளில் கிடைக்கும்படிச் செய்யலாம். இந்த விசேஷ ஏற்பாட்டில் மட்டுமே விநியோகிக்கப்படும் இப்படிப்பட்ட புரோஷுர்களுக்குக் கிரெடிட் கோருவதற்கு தயவுசெய்து இரண்டு தனிப்பட்ட வரிகளை S-20 நீல நிற பாரத்தின் இடது பக்கத்தில் ஏற்படுத்திக்கொண்டு, முதல் வரியில் “Pioneer special campaign brochures” என்றும் இரண்டாவது வரியில் “Publisher special campaign brochures” என்றும் குறிப்பிடவும். பத்திரிகை இலாக்காவில் பிரஸ்தாபிகள் அந்தப் புரோஷுரை 50 பைசாவுக்கும், பயனியர்கள் 40 பைசாவுக்கும் வாங்குவதால், சபையானது பயனியர்களுக்கு ரூ.1.35 என்ற விலையிலும் பிரஸ்தாபிகளுக்கு 1.25 என்ற விலையிலும் கிரெடிட் கோர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்த ஏற்பாடு மேற்சொல்லப்பட்ட அந்த மூன்று மொழி புரோஷுர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விசேஷ அளிப்பு சமயத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்டபடி, இந்தப் புரோஷுர்கள் விநியோகிக்கப்படுகையில் பத்திரிகைகளாக கருதப்பட வேண்டும். கிளைக் காரியாலயத்தில் கையிருப்பில் குறைந்த எண்ணிக்கை மட்டுமே இருப்பதால் இந்தப் பழைய புரோஷுர்கள், ‘முதல் ஆர்டர் செய்பவர்களுக்கு முதல் வழங்கப்படும்’ என்ற அடிப்படையில் கையாளப்படும்.
• கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா? —கன்னடா, குஜராத்தி, லூஷாய்