அறிவிப்புகள்
பிரசுர அளிப்புகள்:
ஜூலை: பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புதிய ஆங்கில புத்தகத்தை ரூ10—க்கு அளிக்கவும். (இது இல்லாவிட்டால், விஷேச அளிப்பதாக கொடுக்கப்படும் 192 பக்கங்களைக் கொண்ட பழைய புத்தகங்களின் ஒன்று ரூ-க்கு அளிக்கவும்)
ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷூர் (ஆங்கிலம்) தவிர, 32 பக்கங்களைக் கொண்ட மற்ற புரோஷூர்களில் எதையாகிலும் ரூ 3-க்கு அளிக்கலாம்.
அக்டோபர்: படைப்பு புத்தகத்தை ரூ30-க்கு அளிக்கலாம். சிறிய அளவு புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மற்ற மொழிகளில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் பயன்படுத்தலாம்.)
நவம்பர்: ஓராண்டு சந்தா விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் அல்லது இரண்டு பத்திரிகைகளுக்கும், ஒவ்வொன்றும் ரூ40. ஆறுமாத சந்தாவும் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கும் ஓராண்டு சந்தா ரூ20. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத சந்தா கிடையாது)
டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், திருத்துவம் அல்லது இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் புரோஷூருடன் சேர்த்து ரூ43.
ஜனவரி: இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன் தரும் விடைகளும் புத்தகத்தை ரூ15-க்கு அளிக்கவும். (கையிருப்பில் இல்லாத இடங்களில் 192-பக்க பழைய புத்தகங்கள் இரண்டு ரூ10. ஒன்று ரூ5-க்கு அளிக்கவும்)
இந்த ஆண்டு மாநாடு நான்கு நாட்களுக்கு வியாழன் முதல் ஞாயிறு வரை நடைபெறப்போவதால் அந்த மாநாட்டு வாரத்தின்போது வழக்கமான சபை புத்தகப் படிப்பைக் கொண்டிருப்பதா அல்லது அந்த வாரப்பாடத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை மாநாட்டுக்கு முந்தின வாரத்து பாடத்துடனும் மறுபாதியை மாநாட்டுக்கு மறுவாரப் பாடத்துடனும் சேர்த்து படிப்பதா என்பதை மூப்பர் குழு முடிவு செய்வார்கள்.