உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/90 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • உடையும் தோற்றமும்​—ஏன் கவனம் தேவை?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 9/90 பக். 7

கேள்விப் பெட்டி

● புரூக்லின் பெத்தேல், உவாட்ச்டவர் பண்ணைகள் மற்றும் உலக முழுவதிலுமுள்ள கிளைக் காரியாலயங்கள் ஆகியவற்றிற்கு விஜயம் செய்யும்போது நம் உடை, சிகை அலங்காரம் குறித்து ஏன் விசேஷ கவனம் செலுத்த வேண்டும்?

கிறிஸ்தவர்கள் சரியான சீரொழுங்கை விடாமல் காத்துவர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். நம் உடை மற்றும் சிகை அலங்காரம் எல்லாச் சமயங்களிலும் யெகோவா தேவனின் ஊழியர்களுக்குப் பொருத்தமான தகுதியையும் கண்ணியத்தையும் பிரதிபலிக்க வேண்டும். புரூக்லின் பெத்தேல், உவாட்ச் டவர் பண்ணைகள் மேலும் உலக முழுவதிலுமுள்ள கிளைக் காரியாலயங்களுக்கும் விஜயம் செய்யும்போது இது விசேஷமாக உண்மையாயிருக்கிறது. ஒழுங்கான உடை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கலந்தாலோசிக்கும்போது, நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்குடன் அமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகம் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகும்போதும் வெளி ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போதும் உடல் சுத்தம், அடக்கமான உடை, சிகை அலங்காரம் இவற்றிற்கான தேவையைப் பற்றி குறிப்பிடுகிறது. பிறகு பக்கம் 131 பாரா 2-ல் அது சொல்கிறது: “புரூக்லினில் உள்ள பெத்தேல் வீட்டுக்கு அல்லது சங்கத்தின் எந்தக் கிளைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்யும்போது இதே தான் பொருந்துகிறது. பெத்தேல் என்ற பெயரின் அர்த்தம் ‘கடவுளின் வீடு’ என்பதை நினைவில் வையுங்கள். ஆகையால் நம் உடை, சிகை அலங்காரம், நடத்தை நாம் ராஜ்ய மன்றங்களில் வணக்கத்திற்காக கூட்டங்களுக்கு ஆஜராகும்போது நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதைப் போன்றே இருக்க வேண்டும்.”

“நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (1 கொரி. 4:9) ஆகையால் நம் உடை மற்றும் சிகை அலங்காரம் மற்றவர்கள் யெகோவாவின் உண்மை வணக்கத்தை எவ்வாறு நோக்குகின்றனர் என்பதன் பேரில் சாதகமான விளைவை ஏற்படுத்த வேண்டும். இருந்தபோதிலும், சில சகோதரர்கள், சகோதரிகள் கிளைக் காரியாலயங்களுக்கு விஜயம் செய்யும்போது அவர்களுடைய உடை மட்டுக்கு மீறி முறைமைபடாமலிருப்பதாக கவனிக்கப்பட்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட உடை கிளைக் காரியாலயங்களை விஜயம் செய்யும்போது பொருத்தமற்றதாயிருக்கிறது. இந்த விஷயத்திலும் நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களைப் போல உலகத்திலிருந்து கடவுளுடைய ஜனங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு கடவுளுடைய மகிமைக்கென்றே எல்லாக் காரியங்களையும் செய்வதன் மூலம் அதே உயர்ந்த தராதரங்களை காத்துக்கொள்ள நாம் விரும்புவோம். (ரோமர் 12:2; 1 கொரி. 10:31) நம் பைபிள் மாணாக்கரிடமும் மற்றவர்களிடமும் அவர்கள் ஒருவேளை புரூக்லின் பெத்தேலுக்கு அல்லது சங்கத்தின் கிளைக் காரியாலயங்களுக்கு முதல் தடவையாக விஜயம் செய்வார்களேயானால் ஒழுங்கான உடைக்கும், சிகை அலங்காரத்திற்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் குறித்து ஞாபகப்படுத்தி அவர்களிடம் பேசுவதும் நல்லது.

ஆகையால் கிளைக் காரியாலயங்களுக்கு விஜயம் செய்யும்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் உடையும் சிகை அலங்காரமும் அடக்கமானதாய் இருக்கிறதா? (மீகா 6:8) நான் வணங்கும் கடவுளை நன்றாக பிரதிபலிக்கிறதா? என்னுடைய தோற்றத்தினால் மற்றவர்கள் தடங்கல் அடைகின்றனரா அல்லது புண்பட்டுவிடுகின்றனரா? முதன்முறையாக விஜயம் செய்யும் மற்றவர்களுக்கு நான் சரியான முன்மாதிரியை வைக்கிறேனா?’ “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக” நாம் எப்பொழுதும் நம் உடையிலும் சிகை அலங்காரத்திலும் இருப்போமாக.—தீத்து 2:9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்