வேதப்படிப்பை ஆரம்பிக்கும் இலக்கோடுதிரும்ப சென்று சந்தித்தல்
1 அக்கறைகாட்டும் ஆளை முதலில் கண்டுபிடித்த பிறகு, காண்பிக்கப்பட்ட இந்த அக்கறை தொடர்ந்திருக்க நம்முடைய பாகத்தில் முழுமையாக செயல்பட வேண்டியது தேவையாக இருக்கிறது. மறுசந்திப்புகள் செய்வது ஜீவனைக் காக்கும் வேதப்படிப்புகளுக்கும், வேத கலந்தாலோசிப்புகளுக்கும் நம்மை நேரடியாக வழிநடத்தலாம். பலன்தரும் மறுசந்திப்புகள் செய்வதற்கு பின்வரும் ஆலோசனைகளை கவனியுங்கள்.
பின்வருமாறு கேட்பதன் மூலம் மறுசந்திப்புக்கான அடித்தளத்தை நீங்கள் முதல் சந்திப்பின் இறுதியில் அமைக்கலாம்:
▪ “பைபிள் கடவுளால் ஏவப்பட்டதா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?” திரும்ப சென்று சந்திக்கும்போது நீங்கள் சொல்லக்கூடும்: “கடந்தமுறை நான் இங்கிருந்தபோது பைபிள் ஏவப்பட்டெழுதப்பட்ட ஒன்றா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அநேக அத்தாட்சிகள் இருக்கின்றன. இந்தக் கேள்வியை ஆராய்ந்தபோது நான் கண்டுபிடித்த அக்கறையைத்தூண்டும் ஒன்றை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்.” பக்கம் 60-க்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைத் திருப்பி “ஏவப்பட்டதற்கான அத்தாட்சிகள்” என்ற உபதலைப்பின்கீழ் உள்ள பகுதியை வாசிக்கவும்.
2 இன்று நமக்கு பைபிள் நடைமுறைக்குரிய ஒன்றா? பைபிள் நடைமுறைக்குரிய ஒன்றாக இருப்பதற்கு அதனால் பயனடைந்ததற்கான ஆதாரத்தை அது கொடுக்கவேண்டும்.
மறுசந்திப்பை ஆரம்பிக்க நீங்கள் பின்வருமாறு கேட்கக்கூடும்:
▪ “ஓர் ஆளின் நடத்தையை பைபிளின் அறிவுரை எப்படி பாதிக்க வேண்டும்? வாழ்க்கையின் மீது எப்படிப்பட்ட சக்திவாய்ந்த பாதிப்பை பைபிள் கொண்டிருக்கக்கூடும் என்பதை நமக்கு எபேசியர் 4:23, 24-ல் பவுல் குறிப்பட்டது காட்டுகிறது.” பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தில் பக்கம் 175 பாரா 1-ன் முடிவில் இருக்கும் வசனத்தை அதிலிருந்தே வாசிக்கவும். பிறகு பக்கம் 163-ல் உள்ள படத்தில் வீட்டுக்காரர் எதைக் காண்கிறார் என்று கேட்கவும். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” அடுத்து பக்கம் 163-ல் உள்ள பாரா 2-ன் கடைசி வாக்கியத்தை வாசிக்கவும். “எந்த மனிதனைக் காட்டிலும் மனிதனுடைய பிரச்னைகளுக்கு மிக அதிக உட்பார்வையை வெளிப்படுத்தும் பைபிளின் காலவரம்பற்ற ஞானம் தானே உன்னத ஊற்றுமூலத்திலிருந்து அது வந்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. பைபிள் ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதற்கான மேலுமான ஆதாரத்தை என்னுடைய அடுத்த சந்திப்பில் நாம் ஒருவேளை கலந்தாலோசிக்கலாம்.”
3 ஏன் நாம் பைபிளை வாசிக்கவேண்டும்? பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்திலிருந்தே இந்தக் கேள்விக்கான பதிலை கலந்தாலோசிப்பது ஒரு வேதப்படிப்புக்கு வழிநடத்தலாம்.
ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்க நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்:
▪ “இப்போது இருக்கும் வண்ணமாகவே அநேக பிரச்னைகளை மக்கள் எதிர்ப்படுவதால் எங்கேயேனும் நம்பகமான வழிநடத்துதலை பெறக்கூடுமோ என அநேகர் யோசிக்கின்றனர். நடைமுறையான உதவியாகவும் உற்சாகத்தின் அளவற்ற ஊற்றுமூலமாகவும் பைபிள் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். பைபிளில் சங்கீதம் 1:1, 2-ல் உள்ள வாக்குத்தத்தத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். [வாசித்து சுருக்கமாக வசனத்தின் பேரில் குறிப்பு சொல்லவும்.] பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகம் பைபிளின் நம்பத்தக்கத்தன்மையில் நம்முடைய விசுவாசத்தை அதிகரிப்பதோடுகூட பைபிளில் காணப்படும் நடைமுறையான புத்திமதிகளை நம்முடைய கவனத்திற்கு கொண்டு வந்து நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு பொருத்துகிறது. உதாரணமாக, பக்கம் 170-ல் பாரா 23-க்கு மேலே உள்ள ‘உண்மையில் பலன்தரும் நியமங்கள்’ என்ற உபதலைப்பைக் கவனிக்கவும்.” பிறகு பாராக்கள் 23-26-ஐ உபயோகித்து வேதப்படிப்பு நடத்தும் முறையை நடித்துக் காட்டவும். “பைபிளிலிருந்து பலனடைய நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை அடுத்த வாரம் வரும் போது கலந்தாலோசிக்க நான் விரும்புகிறேன்.”
4 இப்போது பூமிமுழுவதும் எல்லா தேசங்களிலும் கொடுக்கப்பட்டு வரும் முழுமையான சாட்சி கொடுக்கும் வேலையில் பங்கு கொள்ள எஞ்சியிருக்கும் நேரத்தை ஞானமாக உபயோகிக்கவும். (அப். 20:21 ஒப்பிடவும்.) வேதப்படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்ற இலக்கோடு மறுசந்திப்புகள் செய்வது நாம் பிரசங்கிப்போருக்கு நித்திய ஜீவனை அர்த்தப்படுத்தக்கூடும்.