உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/92 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 8/92 பக். 3

அறிவிப்புகள்

◼பிரசுர அளிப்புகள்: ஆகஸ்ட்: இந்த புரொஷூரைப் பயன்படுத்துங்கள்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? இது கிடைக்காவிடில் பின் குறிப்பிட்டுள்ள 32-பக்க புரொஷூர்களில் எதையாவது பயன்படுத்துங்கள்: நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீகப் பெயர் (ஆங்கிலத்திலுள்ளது), பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” மற்றும் பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், ஒவ்வொன்றும் ரூ3-க்கு. செப்டம்பர்: என்றும் வாழலாம் புத்தகம் ரூ40-க்கு. (சிறியது ரூ20.) அக்டோபர்: சிருஷ்டிப்பு (ஆங்கிலம்) புத்தகம் ரூ40. (சிறியது ரூ20.) கிடைக்காவிடில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகத்தைப் பயன்படுத்துங்கள். நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். மாதத்துக்கு இருமுறை வரும் வெளி யீடுகளுக்கு முழு ஆண்டின் சந்தா ரூ60 மற்றும் ஆறு மாத சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு முழு ஆண்டின் சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. டிசம்பர்: நியு உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன் பைபிள் (ஆங்கிலம்) மற்றும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்). (இந்திய மொழிகளில் அளிப்பு: பழைய பிரசுரங்கள், விசேஷ அளிப்பு விலையில்.) கவனியுங்கள்: மேல் குறிப்பிடப்பட்ட அளிப்புகளுக்குத் தேவைப்படுபவற்றை இன்னும் தருவித்திராத சபைகள் தங்கள் அடுத்த புத்தக ஆர்டர் பாரத்தில் (S-14) அவ்வாறு செய்ய வேண்டும்.

◼ மாநாட்டுக்கு வருவதற்கு முன்னால் 2 இராஜாக்கள் 22:1–23:23-லும் 2 நாளாகமம் 34:1–35:19-லும் பதிவுசெய்யப்பட்டுள்ள தேவாவியால் ஏவப்பட்ட சரித்திர விவரங்களை வாசிப்பதால் “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டில் நடிக்கும் சமயோசிதமான நாடகத்திலிருந்து எல்லாரும் மேலும் முழுமையாகப் பயன் பெறுவர்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

நேப்பாலி மற்றும் பெங்காலி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறியது).

◼ கையிருப்பில் இராத பிரசுரங்கள்:

ஆங்கிலம்: நியு உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன் பெரிய அச்சு பைபிள் (Rbi8); மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு உதவிசெய்ய அல்லது தீங்குசெய்ய முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? மலையாளம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்