உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/93 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 1/93 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: ஜனவரி 1993: பழைய 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, ஒரு புத்தகம் ரூ. 6. மலையாளத்திலும் தமிழிலும்: மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து? (பழைய பதிப்பு). குஜராத்தியில்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம், இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? ஹிந்தியிலும் கன்னடத்திலும்: உங்களை மகிழ்ச்சியாக்கும் நற்செய்தி, “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” தெலுங்கில்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மராத்தியில்: பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? பெங்காலியிலும் நேப்பாளியிலும்: நம்முடைய பிரச்னைகள் புரோஷர், ரூ. 3. பிப்ரவரி: என்றும் வாழலாம் புத்தகம் ரூ. 40. (சிறியது ரூ. 20.) மார்ச்: இளைஞர் கேட்கின்றனர் புத்தகம் ரூ. 20. இந்தப் புத்தகம் கிடைக்காத மொழிகளில் என்றும் வாழலாம் புத்தகம் ரூ. 40. (சிறியது ரூ. 20.) ஏப்ரல், மே: காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் இதழ்களுக்கு ஒரு வருட சந்தா ரூ. 60. மாதம் இருமுறை வரும் இதழ்களுக்கு ஆறு-மாத சந்தாக்களும் மாதாந்தர இதழ்களுக்கு ஒரு வருட சந்தாக்களும் ரூ. 30. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறு-மாத சந்தாக்கள் கிடையாது.) கவனிக்கவும்: மேற்குறிப்பிடப்பட்டிருக்கிற அளிப்பிற்குரிய பிரசுரங்களை இதுவரை ஆர்டர் செய்யாத சபைகள், அடுத்த பிரசுர ஆர்டர் நமுனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும்.

◼ உலகமுழுவதும் 1993 நினைவு ஆசரிப்பு நாளையொட்டி கொடுக்கப்படும் விசேஷ பொதுப் பேச்சு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 28-ந் தேதி கொடுக்கப்படும். “கடவுளுடைய செயல்கள்—நீங்கள் அவற்றை எப்படி கருதுகிறீர்கள்?” என்பதே அந்தப் பேச்சின் பொருளாகும். குறிப்புத்தாள் கொடுக்கப்படும். அந்த வார இறுதியில் வட்டார ஊழியருடைய சந்திப்பையோ வட்டார மாநாட்டையோ விசேஷ மாநாட்டுத் தினத்தையோ கொண்டிருக்கும் சபைகளில் அதற்கு அடுத்த வாரத்தில் அந்த விசேஷ பேச்சுக் கொடுக்கப்படும். மார்ச் 28-ம் தேதிக்கு முன்பு எந்தச் சபையும் அந்த விசேஷ பேச்சைக் கொடுக்கக்கூடாது.

◼ ஜனவரி 1, 1993 முதல் காவற்கோபுரம் மாதாந்தர பத்திரிகையாக லித்துவேனிய மொழியிலும் கிடைக்கும், இந்தப் பத்திரிகை பிரசுரிக்கப்படும் மொழிகளின் எண்ணிக்கை 112-ஆக ஆகிறது. மேலும் ஜனவரி முதல், தெலுங்கு காவற்கோபுரம் மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிகையாகும்.

◼ ஸ்கூல் கெய்ட்புக்-ல் (ஆங்கிலம்) தற்போதுள்ளவாறு கொண்டுவருவதற்குக் கூற்றுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிற முறைகளிலும் மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். பக்கங்கள் 100-லிருந்து 102 வரை செய்யப்பட்டுள்ள மாற்றம் கவனிக்கப்படத்தக்கது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியைப் பாதிக்கிறது. வருடாந்தர தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் அச்சடிக்கப்பட்டிருக்கிற அறிவுரைகளோடு இணக்கமாக இருக்கும் முறையை உடையதாயிருக்கிறது. மாற்றம் செய்யப்பட்ட இந்த ஸ்கூல் கெய்ட்புக் ஆங்கிலத்தில் இப்போது கிடைக்கிறது. தேவைப்படும்போது சபைகள் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

◼ ஜனவரி 1, 1993 முதல் புத்தக விலையில் மாற்றம் இருக்கிறது. அதிகரிக்கப்பட்ட விலைகளுக்குண்டான பணத்தொகை சபையுடைய கணக்கில் காட்டப்படும். டிசம்பர் 31, 1992 தேதியிடப்பட்ட புத்தக கையிருப்பு பட்டியலின்பேரில் (Literature Stock Inventory) மாற்றங்கள் செய்யப்படும். பத்திரிகைகளின் விலையிலோ பத்திரிகைகளுக்குரிய சந்தாக்களின் விலையிலோ எந்த மாற்றமும் கிடையாது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்