உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/93 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1997
  • சபையின் கையிருப்பிலுள்ள பழைய பிரசுரங்களைப் பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • “ஏற்ற வேளையில்” உங்களுக்கு உணவு கிடைக்கிறதா?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • உங்களிடமிருப்பதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1989
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 3/93 பக். 7

கேள்விப் பெட்டி

◼ மற்றவர்களிடம் விநியோகிப்பதற்கு சங்கத்தின் பிரசுரங்களை மறுஅச்சிட்டுத்தருவது சரியானதா?

வருஷக்கணக்காக, சங்கம் பைபிள் அறிவின்பேரில் உள்ள ஒவ்வொரு விஷயம் சம்பந்தமாகவும் உண்மையிலேயே பற்பல பிரசுரங்களை அச்சிட்டுக் கொடுத்திருக்கின்றனர். சமீப வருஷங்களில் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட ஆட்கள் கடந்த காலங்களில் பிரசுரிக்கப்பட்ட விஷயங்களின் நன்மையான காரியங்களை அனுபவிக்க முடியவில்லையே என்றும் அது இனிமேலும் சங்கத்தின் மூலம் பெற முடியாது என்றும் உணரக்கூடும். சிலர் பழைய பிரசுரங்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்குச் சென்றிருக்கின்றனர், மற்றவர்கள் சங்கத்தின் பிரசுரங்களை தாங்களாகவே அச்சிட்டு, பல்வேறு வழிகளில் அதைக் கிடைக்கும்படிச் செய்திருக்கின்றனர். இது உண்மையிலேயே பிரசுரங்களை மறுஅச்சிடுவதையும் கணிப்பொறியில் மறுபிரதிகள் எடுப்பதையும் உட்படுத்தியிருக்கிறது. சிலருடைய விஷயங்களில், இது லாபம் சம்பாதிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கிறது.

உண்மையுள்ள ‘அடிமை’ நம்முடைய ஆவிக்குரிய தேவைகளை அறிந்து “ஏற்றவேளை”க்கு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். (மத். 24:45) கடந்த வருஷங்களில் பிரசுரிக்கப்பட்ட விஷயங்களை மறுவெளியிடவேண்டுமென்ற அவசியமிருக்குமேயானால், சங்கம் அப்படிப்பட்ட ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றனர். உதாரணமாக, 1960 முதல் 1985 வரையான உவாட்ச்டவரின் பவுன்டு புத்தகத் தொகுப்புகள் மறுஅச்சடிக்கப்பட்டு எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டது. என்றாலும், ஆட்கள் தாங்களாகவே மறுஅச்சிட்டு அத்தகைய விஷயங்களை விநியோகம் செய்ய முனைந்தால், அனாவசியமான பிரச்னைகள் எழும்பக்கூடும்.

இந்த விஷயங்கள் மறுஅச்சிட்டு லாபம் சம்பாதிப்பதற்கு விநியோகம் செய்யப்பட்டால், வினைமையான பிரச்னைகள் எழும்புகின்றன. ஜூலை 1977 நம் ராஜ்ய சேவையின் கேள்விப் பெட்டியில் சொல்லப்பட்டது: “ராஜ்ய மன்றங்களிலும், சபை புத்தகப் படிப்புகளிலும், யெகோவாவின் மக்கள் கூடிவருகிற அசெம்பிளிகளிலும் எந்தப் பொருட்களையும் பணிகளையும் முன்நின்று செய்வதனாலோ விற்பனைக்கு விளம்பரப்படுத்துவதனாலோ, தேவராஜ்யம் சம்பந்தமாக இருப்பவற்றை சுயநலத்திற்கு உபயோகிக்காமலிருப்பது சிறந்தது. இது அவர்களுக்குத் தேவைப்படுகிற ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முழு கவனஞ்செலுத்தவும் வியாபார நடவடிக்கையை அதற்குரிய சரியான இடத்தில் வைக்கவும் நமக்கு உதவும்.” ஆகவே, கடவுளுடைய வார்த்தையையோ அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையோ வியாபாரஞ்செய்கையில், நாம் லாபம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்ப்பது முக்கியமாயிருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்