தேவராஜ்ய செய்திகள்
அல்பேனியா: டிசம்பர் 1991 முதல் டிசம்பர் 1992 வரை, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 24 முதல் 107-க்கு அதிகரித்தது. அதே காலப்பகுதியின்போது, பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 4 முதல் 221-க்கு உயர்ந்தது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு: ஜனவரி 20, 1993-ல், யெகோவாவின் சாட்சிகளினால் செய்யப்பட்டுவரும் முழு நடவடிக்கைகளின் புதுத்தொடக்கத்தை அனுமதிக்கிற ஒரு தீர்ப்பாணையை அரசாங்கம் வெளியிட்டது. அங்குள்ள சகோதரர்கள் இப்பொழுது தங்களுடைய ராஜ்ய மன்றங்களைப் பயன்படுத்தக்கூடியவர்களாய் இருப்பதிலும் “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டை யாவரறிய வெளிப்படையாக நடத்தக்கூடியவர்களாய் இருப்பதிலும் களிகூருகிறார்கள். நடத்தப்பட்ட ஆறு மாநாடுகளில் மொத்தமாக 4,739 பேர் ஆஜராய் இருந்தனர், மற்றும் 121 பேர் முழுக்காட்டப்பட்டனர்.