பைபிள் மாணாக்கர் கடவுளுடைய அமைப்போடு தொடர்புகொள்ள உதவுதல்
1 யெகோவா தம்முடைய சித்தத்தை ஒப்பற்றவிதமாக செய்வதற்கு இந்த உலகத்தின் அரசியல், மத மற்றும் வர்த்தக அமைப்புகளிலிருந்து முழுமையாக விடுபட்ட அமைப்பை, ஒரே அமைப்பைக் கொண்டிருக்கிறார். இந்த அமைப்பு, பைபிளின் புரிந்துகொள்ளுதலைப் பெறுவதிலும் கடவுளுடைய நோக்கத்திலுள்ள உண்மையான உட்பார்வையைப் பெறுவதிலும் ஒரு முக்கியமான வேலையை செய்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணாக்கரும் யெகோவா தேவனின் பூமிக்குரிய அமைப்பையும் அதன் வேலையையும் புரிந்துகொள்ளவும் அவர்களை அதனிடமாக வழிநடத்தவும் உத்தரவாதமுள்ளதாயிருக்கிறது.
2 இருப்பினும் கிறிஸ்தவத்தோடு அறிமுகமாகாத மக்களுக்கும் ஓர் ‘அமைப்போடு’ சேருகையில் பேரளவான அழுத்தத்தையும் உத்தரவாதத்தையும் உணருகிறவர்களுக்கும் கடவுளுடைய அமைப்பைப் பற்றி போதிப்பது செய்வதற்கு எளிதான காரியம் அல்ல. அதோடுகூட, அநேக மக்கள் யெகோவாவின் சாட்சிகளை மற்ற புதிய மதத்தினரைப் போன்றவர்களாக நோக்குவதன் காரணமாகவும், இரத்தத்தைப் பற்றிய பிரச்னை உட்பட சாட்சியினுடைய கோட்பாடுகளைப்பற்றிய தப்பெண்ணங்கள் கொண்டிருப்பதாலும், அமைப்பைக்குறித்து விளக்குவதைக் கடினமாகக் காண்கிற பிரஸ்தாபிகள் ஒருவேளை இருக்கலாம். அதன் காரணமாகவே, அமைப்பைப் பற்றி அதிகமாக விளக்கிய பிறகும்கூட இந்த நிலைமை ஏற்படுகிறது. அது பலன்தரத்தக்கதாக இருந்திருக்கவில்லை, மேலும் மாணாக்கர் வெறுமனே கூட்டங்களுக்கு வரவோ நடவடிக்கையெடுக்கவோ மாட்டார்.
3 மாணாக்கரின் முன்னேற்றத்தையும் பின்னணியையும் சிந்தியுங்கள்: பைபிள் மாணாக்கர் மத்தியில், பைபிளையும் கிறிஸ்தவத்தையும்விட, குழந்தைப் பயிற்றுவிப்பையும் குடும்ப வாழ்க்கையையும் பற்றி கற்றுக்கொள்வதில் அக்கறையுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக வீட்டுப் பைபிள் படிப்புக்கு பிரதிபலித்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இந்த ஆட்களுக்கு, இஸ்ரவேல் தேசத்தாரின் வரலாற்றோடு ஆரம்பிக்கிற யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் சிற்றேட்டை உடனடியாக எடுப்பது நியாயமற்ற எதிர்பார்ப்பாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களுடைய விஷயத்தில், மனிதவர்க்கத்தினர் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைக் கொண்டிருக்கும் நோக்கத்தோடு அவர்களைப் படைத்த கடவுளையும், யெகோவா மனிதவர்க்கத்திற்காக பைபிளை ஒரு ‘வழிகாட்டுநூலாக’ கொடுத்தார் என்பதையும் பற்றி விளக்க முதலாவது நேரத்தைச் செலவழிப்பது அதிக பலன்தரத்தக்கதாய் இருக்கும். மறுபட்சத்தில், கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகளில் ஒன்றைச் சேர்ந்த ஆட்களுக்கு, அவர்களுடைய சர்ச்சை யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்போடு ஒப்பிட்டுப் பார்த்து, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையோடு எது அதிகமாக ஒத்திருக்கிறது என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கு உதவிசெய்யலாம்.
4 ஆகவே நடத்துபவர் மாணாக்கரின் மதப் பின்னணியை கவனத்தில் எடுத்துக்கொண்டு, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் சிற்றேட்டை ஆரம்பத்திலேயே பயன்படுத்துவது சிறந்ததா அல்லது குடும்பப் படிப்பு ஆரம்பித்து சிறிது காலத்திற்குப் பிறகு அந்தச் சிற்றேட்டில் தொடங்க தகுதியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பதா என்பதைத் தீர்மானிக்கலாம்.
5 அல்லது, இந்த இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses In The Twentieth Century) சிற்றேட்டை அல்லது நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் “யெகோவாவின் சாட்சிகள்” என்ற தலைப்பின்கீழுள்ள பகுதியை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கையானது உலகளாவிய பைபிள் கல்வி வேலை என்றும், பைபிளைத்தானே அதனுடைய கலப்படமற்ற முறையில் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவிசெய்கிற ஒரு தொகுதியினர் என்றும் உங்களுடைய மாணாக்கர் நம்பிக்கையுடன் மற்றவர்களுக்குச் சொல்லக்கூடும்படிக்கு அவருக்கு உதவிசெய்யுங்கள்.
6 நீங்கள் செய்ய முயற்சிக்கவேண்டிய அடுத்த காரியம், அதன் நோக்கம், பொருளடக்கம், வித்தியாசமான கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் ஆஜராகிறவர்களுக்கு நன்மைகள் ஆகியவற்றை மாணாக்கர் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க முறையில் விளக்கிக்கூறுவதாகும். மாணாக்கர் இப்பொழுது கற்றுக்கொண்டுவருகிற காரியங்கள் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலான சத்தியமாகும்; மேலும் இவற்றை உலகப்பிரகாரமான புத்தகங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது. அதுபோலவே கூட்டங்கள், பைபிளில் அக்கறையுள்ள மக்களுக்கு யெகோவா தேவனுடைய விசேஷித்த பைபிள் கல்வித் திட்டமாக இருக்கின்றன. ஆகவே, கூட்டங்களைப் பற்றிய பொருள் அனைத்தையும் வெறுமனே ஒரே சமயத்தில் மேலெழுந்தவாரியாக சிந்திப்பதுடன் திருப்தியடைந்துவிடாதீர்கள்; ஆனால் கூட்டங்களை, ஆஜராகிறவர்கள், கூட்டங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள் போன்ற வித்தியாசமான கோணங்களிலிருந்து பாருங்கள். இது வரையாக நீங்கள் என்ன கற்றிருக்கிறீர்கள், மேலும் என்ன அனுபவித்திருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையிலான உயிர்த்துடிப்பான கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருங்கள்.
7 கண்ணுக்கு கவர்ச்சி: மாணாக்கரின் கவனத்தை சிற்றேடுகள் மற்றும் பத்திரிகைகளிலுள்ள படங்களுக்குத் திருப்புங்கள், மேலும் நீங்கள் வெளிப்படுத்துவதற்கு முயற்சிசெய்கிற குறிப்பின் ஆழமானப் பதிவை விட்டுச்செல்ல முயற்சிசெய்யுங்கள். படங்களைக் கவனிக்கையில் மாணாக்கர் என்னவெல்லாம் உணருகிறாரோ அவற்றை வெளிப்படுத்துவதற்கு அவரை உற்சாகப்படுத்துங்கள். யெகோவாவின் அமைப்புக்கு அநேகரை வழிநடத்தியிருக்கிற அதிக பலன்தரத்தக்கப் பிரஸ்தாபிகளில் பெரும்பான்மையோர் இந்த நோக்கத்துக்காக அவர்கள் செய்திருக்கிற படத்தொகுப்புகளை (Albums) பயன்படுத்துகிறார்கள்.
8 மாணாக்கர் முடிந்தளவுக்கு சீக்கிரத்திலேயே யெகோவாவின் மக்களை தனிப்பட்ட விதமாகப் பார்ப்பதற்கு ஏற்பாடுசெய்யுங்கள். இராஜ்ய மன்றம் மற்றும் அசெம்பிளிகளில் யெகோவாவின் மக்களுடன் தொடர்புகொள்வதற்கு அவருக்காக ஏற்பாடுசெய்யுங்கள், மேலும் யெகோவாவின் மக்கள் சாதாரண மக்கள், ஆனால் பைபிளில் நம்பிக்கை வைத்து யெகோவாவின் வழிகளுக்குப் போற்றுதல் தெரிவிக்கும் வண்ணமாக நடந்துவருகிற மக்கள் என்பதைக் காணும்படி அவருக்கு உதவிசெய்யுங்கள். இராஜ்ய மன்றத்தைக் கூட்டத்திற்குப் பயன்படுத்தாத சமயத்தில் அவருக்குக் காண்பித்து அது எப்படிப்பட்ட இடம் என்பதை விளக்குவதும்கூட அதிக பலன்தரத்தக்கதாகும். கூடுமானால் பெத்தேலை சென்றுபார்க்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்.
9 இதோடுகூட, நீங்கள் பொருத்தமான தோழர்களை படிப்புக்கு அழைத்துவந்து யெகோவாவின் மக்கள் அனுபவிக்கிற மகிழ்ச்சியைப் பற்றி அவர்கள் பேசும்படி செய்யலாம். உதாரணமாக, யெகோவாவின் அமைப்பால் அளிக்கப்படுகிற கல்வித் திட்டம் எவ்விதமாக உதவியாய் இருந்திருக்கிறது என்பதை ஓர் இளம் பிரஸ்தாபி விளக்கிக்கூறும்படி நீங்கள் கேட்கலாம். கிறிஸ்தவ குடும்பத் தலைவர் ஒருவர் சாட்சியாக ஆவதற்கு முன்பிருந்ததோடு ஒப்பிடுகையில் அவர் எப்படி ஒரு தகப்பனாகவும் கணவனாகவும் மாறினார் என்பதை விவரித்துக்காட்ட கேட்பீர்களானால், அந்த மாணாக்கர் இன்னும் அதிகமாக யெகோவாவின் சாட்சிகளுடனும் அவர்களுடைய அமைப்புடனும் நெருங்கி உணரக்கூடியவராக இருப்பார்.
10 கடந்த காலங்களில் செய்யப்பட்டதுபோல், படிப்புக்கு முன்பாகவும் பின்பாகவும் அனுபவித்துக்களிக்கத்தக்க 10-15 நிமிட கலந்தாலோசிப்பைக் கொண்டிருங்கள். மேலும் யெகோவாவின் அமைப்பை பற்றிய ஒரு முழுமையான காட்சியை கிரகித்துக்கொள்ள அந்த மாணாக்கருக்கு உதவிசெய்யுங்கள். அதோடுகூட, மாணாக்கர் யெகோவாவின் அமைப்பைப் பற்றி அறிந்துகொள்ளவும் அதைப் பற்றிய உணர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், யெகோவாவின் மக்களோடு கூட்டுறவுகொள்வதற்கான சமயங்களைப் படிப்படியாக அதிகரிப்பதற்கு வித்தியாசமான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துங்கள். இந்தக் காரியங்களை நீங்கள் செய்வீர்களானால், மாணாக்கர் யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பையும் அதன் நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டு நம்மோடு கடவுளைத் துதிப்பவராக ஆவார்.