நம்முடைய பிரசுரங்களின் மதிப்பைப் போற்றுவதற்கு மற்றவர்களுக்கு உதவிசெய்தல்
1 ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது.’ (எபி. 4:12) நம்முடைய பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையிலிருந்து மக்கள் நன்மையடைய உதவுவதால், சந்தர்ப்ப சாட்சிகொடுக்கையிலோ வீட்டுக்கு வீடு சந்திக்கையிலோ பைபிளில் அக்கறையைத் தூண்டுவதற்கு நாம் அவற்றை பயன்படுத்துகிறோம்.
2 ஜனவரி பிரசுர அளிப்பானது கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? அப்படியென்றால், அவர் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? அது எப்போதாவது முடிவுக்கு வருமா? என்ற சிற்றேடாகும். இந்தச் சிற்றேடு முக்கிய இந்திய மொழிகள் அனைத்திலும் இப்பொழுது கிடைக்கிறது, மேலும் சபைகள் அதை இருப்புவைக்கப் பெற்றுக்கொள்வதற்கு காலமிருந்திருக்கிறது. அதை அளிக்கும்போது, வீட்டுக்காரருக்கு நம்முடைய அதிசயிக்கத்தக்க நம்பிக்கையை ஊக்கத்துடன் அளித்து, அவருடைய இருதயத்தைச் சென்றெட்ட முயற்சிசெய்யுங்கள். இதை எவ்வாறு செய்யலாம்?
3 கடவுள் அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? சிற்றேட்டை அளித்தல்: உலகத்தில் இன்றுள்ள பிரச்னைகளை உயர்த்திக்காட்டுகிற அல்லது சமீப எதிர்காலத்தில் இந்தப் பூமி எதிர்ப்படக்கூடிய மோசமான நிலைமைகளைப் பட்டியலிடுகிற செய்திக்குறிப்புக்குக் கவனத்தைத் திருப்புவதன்மூலம் நீங்கள் ஒரு சம்பாஷணையைத் தொடங்குபவர்களாய் இருக்கலாம்.
பின்பு இதுபோன்ற கேள்வியை எழுப்புங்கள்:
◼ “இன்றைய உலகிலுள்ள நிலைமைகளைக் கடவுள் நோக்குவதைக் குறித்து நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] பூமியின் எதிர்காலத்திலும் மனிதவர்க்கத்தின் எதிர்காலத்திலும் அவர் அதிக அக்கறையுள்ளவராய் இருக்கிறார், மேலும் தற்போதிருப்பதாக நாம் காண்கிற மோசமான நிலைமைகளை நீக்குவதற்கு ஏதோவொன்றை சீக்கிரத்தில் செய்யப்போகிறார் என்பதை அறியும்போது அது உங்களை ஆச்சரியப்படுத்துகிறதா?” வீட்டுக்காரருக்குப் பொருளடக்க அட்டவணையைக் காண்பித்து, இப்பொழுது மனிதவர்க்கம் அனுபவித்துவருகிற வேதனை, கடவுளே இல்லை என்பதையோ மனிதர்கள்மீது கடவுள் அக்கறைகொள்வதில்லை என்பதையோ நிரூபிக்கிறதில்லை என்பதைச் சுருக்கமாக விளக்குங்கள். மாறாக, ஒரு காலப்பகுதிக்கு வேதனையிருக்கும்படி கடவுள் அனுமதித்திருக்கிறபோதிலும், இந்தப் பூமி ஒரு பரதீஸாகி, வேதனை மற்றும் துயரத்திலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ்கிற மக்களால் நிரப்பப்படுவதே அவருடைய நோக்கம் என்பதை விளக்குங்கள். பொருளடக்க அட்டவணைக்கு மேலே உள்ள படத்தைச் சுட்டிக்காண்பித்து, இப்படிப்பட்ட நிலைமைகள் சீக்கிரத்தில் வரவிருக்கின்றன என்பதற்கான நம்பத்தக்க எதிர்பார்ப்பை நாம் கொண்டிருக்கிறோம் என்பதைக் குறிப்பிடுங்கள்.
4 இந்தச் சிற்றேடு கிடைக்காத, அல்லது அவ்விதமாகச் செய்வதற்கு அதிகப் பொருத்தமாய் இல்லாத இடங்களில், ஜனவரியில் 192-பக்க பழைய பிரசுரங்களில் ஒன்றை நாம் விசேஷ அளிப்பாக அளித்துக்கொண்டிருப்போம். இதை எவ்வாறு அளிக்கலாம்? முதலாவதாக, உங்களுடைய பிராந்தியத்திலுள்ள நேர்மை இருதயமுள்ள மக்களைக் கவருகிற ஒரு கூற்றை நீங்கள் பயன்படுத்துகின்ற புத்தகத்திலிருந்து தெரிந்தெடுத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக, நீங்கள் தெரிந்தெடுத்திருக்கிற அச்சடிக்கப்பட்ட கூற்றுக்கு கவனத்தைத் திருப்புவதற்கு முன்பாக, வீட்டுக்காரரோடு நீங்கள் சுருக்கமாக கலந்தாலோசிக்கக்கூடிய தற்கால சம்பவத்தை அல்லது பொதுவாக அக்கறைகாட்டுகிற ஒரு பொருளைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள். உங்களுடைய செய்திகளுக்கு ஆதாரம்கொடுத்து பின்பு அந்தப் புத்தகத்தை அளிப்பதற்கு, ஒருவேளை பைபிளிலிருந்து அல்லது அந்தப் புத்தகத்திலிருந்து நேரடியாக நீங்கள் வாசிக்கக்கூடிய இடக்குறிப்புச் செய்யப்பட்ட அல்லது மேற்கோள் காட்டப்பட்ட வசனமிருக்கிறது. கடைசியாக, நீங்கள் ஒரு மறுசந்திப்புக்கு அடிப்படையாக பயன்படுத்தக்கூடிய ஒரு கேள்வி அல்லது எண்ணத்துடன் அவரை விட்டுவர முயற்சிசெய்யுங்கள்.
5 அநேக சபைகள் தங்களுடைய கையிருப்பில் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? அல்லது பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் பிரதிகளை வைத்திருக்கின்றன. இத்தகைய புத்தகங்கள் கிடைக்குமானால், நீங்கள் இந்தப் பிரசுரங்களில் சம்பாஷணையை ஆரம்பிப்பதற்குத் தயார்செய்து, இந்தச் சிறந்த பிரசுரங்களில் ஒன்றை வீட்டுக்காரர்கள் வாசிப்பதற்கு ஏன் உற்சாகப்படுத்தக்கூடாது. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை அளிப்பீர்களானால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையைப் பயன்படுத்தி, இந்த மிகச் சிறந்த பைபிள் படிப்பு ஏதுவில் சொல்லப்பட்டுள்ள எத்தனையோ அடிப்படை பைபிள் கோட்பாடுகளைக் கலந்தாலோசிப்பதற்குத் தயார்செய்யலாம்.
6 சிலசமயங்களில் பத்திரிகைகளையோ ஒரு துண்டுப்பிரதியையோ அளிப்பது அதிகப் பொருத்தமாக இருக்கலாம். இந்தப் பிரசுரங்களை வாசிப்பதற்கு மற்றவர்களை உற்சாகப்படுத்துவதைக் குறித்து நாம் ஊக்கமுள்ளவர்களாயும் வைராக்கியமுள்ளவர்களாயும் இருப்பதற்கு நாம் எல்லா காரணத்தையும் கொண்டிருக்கிறோம். இப்படியாக கடவுளுடைய வார்த்தையின் வழிநடத்துதலுக்குப் பிரதிபலிப்பதன்மூலம் தங்களுடைய வாழ்க்கையில் அதன் வல்லமையை அனுபவிப்பதற்கு அவர்களை ஆயத்தமாக்கலாம்.