மறுசந்திப்புகள் செய்தல்சந்தா மற்றும் பத்திரிகை ஏற்றோரிடம்
1 சீஷராக்குவதில் உழைக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினோரை ஊக்குவித்தார். (மத். 28:19) இது புத்தகங்களை வெறுமனே விட்டுவருவதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது; ஆட்கள் ஆவிக்குரிய முறையில் படிப்படியாய் முன்னேறும்படி உதவிசெய்ய நாம் விரும்புகிறோம். இதைச் செய்ய, அக்கறை காட்டுவோருக்கு மேலுமான உதவியை அளிப்பதற்கு நாம் மறுசந்திப்பு செய்யவேண்டும்.
2 உங்கள் முதல் சந்திப்பில், பத்திரிகைகள் ஒன்றில் ஒரு கட்டுரையை முனைப்பாய் எடுத்துக் காட்டினபின்பு ஒரு சந்தாவை அளித்திருந்தால், நீங்கள் மறுசந்திப்பு செய்கையில் அதே விஷயத்தைக் கலந்துபேசுவது நலமாயிருக்கும்:
◼ “முன்பு நான் வந்தபோது, காவற்கோபுர (அல்லது விழித்தெழு!) பத்திரிகையில் ஒரு கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தேன், அது பைபிளை ஆராய்ந்து பார்க்கும்படியானத் தேவையை மதித்துணரும்படி நமக்கு உதவி செய்தது. மனிதவர்க்கத்துக்கு மேம்பட்ட எதிர்காலத்தை அளிக்கும் கடவுளுடைய நோக்கம் அவருடைய ராஜ்ய அரசாங்கத்தின்பேரில் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராஜ்யம் எல்லா போர்களுக்கும் முடிவைக் கொண்டுவருமென்ற அவருடைய வாக்கு மீகா 4:3, 4-ல் பதிவுசெய்துள்ளது.” இந்த வசனத்தை வாசித்தப்பின்பு, “இதோ!” சிற்றேட்டை அறிமுகப்படுத்தத் தெரிந்துகொள்ளலாம், மேல் அட்டையிலுள்ள படத்தைக் காட்டுங்கள். முதல் பாராவையும் அந்தப் பத்தியில் இடக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களையும் சிந்தியுங்கள், அவற்றில் ஒன்று மீகா 4:3, 4 என்பதையும் கவனிக்கச் செய்யுங்கள். இந்தக் கலந்தாலோசிப்பை 2-ம் பாராவிலிருந்து தொடருவதற்கு ஒரு மறுசந்திப்புக்காக ஏற்பாடுசெய்யுங்கள்.
3 வீட்டுக்காரர் பத்திரிகைகளின் தனிப் பிரதிகளை மட்டுமே ஏற்றிருந்து சிறிதே அக்கறையுடையவராகத் தோன்றினால் அல்லது உரையாட அவருக்கு நேரமில்லையென்றால், அவருடைய பெயரை வெறுமனே உங்கள் பத்திரிகை மார்க்கத்தோடு சேர்த்துக்கொள்ளும்படி நீங்கள் தீர்மானிக்கலாம்:
◼ “முன்பு நான் உங்களுடன் விட்டுச்சென்ற பத்திரிகைகளில் நீங்கள் அக்கறையை வெளிப்படுத்தினதால், கடைசியாக வந்த புதிய பிரதிகளை வாசிப்பதில் மகிழ்ச்சியடைவீர்களென்று நான் எண்ணினேன். முக்கியமாய் இந்தக் கட்டுரையை அக்கறைக்குரியதாக நீங்கள் காண்பீர்களென நான் நம்புகிறேன்.” அவருக்கு விருப்பமாயிருக்குமென நீங்கள் உணரும் ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். அடுத்தப் பிரதிகளோடு மறுபடியும் வருவதாகக் கூறுங்கள்.
4 தனிப் பிரதிகளை வீட்டுக்காரர் வாசித்திருந்து அவற்றிற்கு மதித்துணர்வை வெளிப்படுத்தினால், சந்தாவை ஏற்கும்படி நீங்கள் அளிக்கலாம்:
◼ “காவற்கோபுரம் (அல்லது விழித்தெழு!) பத்திரிகை உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகத் தோன்றுவதால், அதற்கு (காவற்கோபுரம், அல்லது விழித்தெழு! அல்லது இரண்டுக்குமே) சந்தாவை ஏற்கும்படி நான் ஆலோசனை கூறுகிறேன். இவ்வாறு அதை (அல்லது அவற்றை) தபால் மூலம் ஒழுங்காகப் பெற முடியும், தவறாமல் ஒவ்வொரு வெளியீட்டையும் பெறுவதில் நிச்சயமாயிருக்கலாம்.” அவர் சந்தாவை ஏற்றால் அல்லது அக்கறை காட்டினால் மறுசந்திப்புக்கு ஏற்பாடுசெய்யுங்கள்.
5 முதல் சந்திப்பிலேயே நேரடியாக சந்தாக்களை அளிப்பதைப்பற்றி நம்பிக்கையான மனநிலையுடையவராக இருங்கள். அந்த நபர், பத்திரிகைகளின் தனிப் பிரதிகளை மாத்திரமே ஏற்றால், நீங்கள் மறுசந்திப்பு செய்கையில் சந்தாவை அளியுங்கள். சந்தா சீட்டுகளை முழுமையாகவும் தெளிவாகவும் விவரம் எழுதி நிரப்புங்கள், மூன்று பிரதிகள் எடுக்கவேண்டும்—ஒரு பிரதியைப் பற்றுச்சீட்டாக வீட்டுக்காரரிடம் விட்டுவாருங்கள், மற்ற இரண்டு பிரதிகளையும் உங்கள் சபையில் சந்தாக்களைக் கையாளும் சகோதரரிடம் அந்த நன்கொடையோடு சேர்த்துக் கொடுங்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப் பரவச் செய்வதில் நமக்கு உதவி செய்யும் சிறந்த கருவிகளாக காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு பத்திரிகைகள் இருக்கின்றன. உள்ளார்ந்த அக்கறையுள்ளவர்கள் இயேசு கட்டளையிட்ட காரியங்களைப்பற்றி மேலுமதிகம் கற்றுக்கொள்ள ஊக்கமூட்டுவதற்கு இவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்துவோமாக.—மத். 28:20.