உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/94 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 7/94 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூலை: 32-பக்கச் சிறு புத்தகங்கள் ஏதாகிலும் மூன்றை ஒன்றுசேர்த்து 3.00 ரூபாய் நன்கொடைக்கு. பின்வரும் சிறு புத்தகங்கள் நம்மிடம் இன்னும் கிடைக்கக்கூடியவையாக உள்ளன: பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம் ஆங்கிலத்திலும் மராத்தியிலும்; குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, மராத்தி, மற்றும் பஞ்சாபியில்; தகப்பனைத் தேடுதல் (புத்த மதத்தினருக்கு) ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும்; அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கொங்கணி (கன்னடம் மற்றும் கோவன்), மணிப்புரி, மலையாளம், பஞ்சாபி, மற்றும் தமிழில்; விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை ஆங்கிலம், லூஷாய், மலையாளம், மற்றும் தமிழில்; வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது! ஆங்கிலம், ஹிந்தி, லூஷாய், மராத்தி மற்றும் பஞ்சாபியில்; “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி” குஜராத்தி, காஸி, கொங்கணி (கன்னடம் மற்றும் கோவன்), லூஷாய், மணிப்புரி, மராத்தி, மலையாளம், மற்றும் தமிழில்; மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி, நேப்பாளி, மற்றும் பஞ்சாபியில்; உங்கள் மொழியில் சிறு புத்தகங்கள் ஒன்றும் கிடைக்காவிடில், பள்ளி சிற்றேட்டைத் தவிர எந்தச் சிற்றேடுகளையாவது ஒவ்வொன்றையும் 4.00 ரூபாய் நன்கொடைக்கு அளியுங்கள். ஆகஸ்ட்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? 4.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காவிடில், அல்லது மற்றொரு பொருள் அதிக பொருத்தமானதாக இருக்கிறதென்றால், பின்குறிப்பிடப்படும் சிற்றேடுகளில் எதையாவது அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும் (The Divine Name That Will Endure Forever), “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரியது 40.00 ரூபாய்). அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைகளுக்குச் சந்தாக்கள். மாதம் இருமுறைவரும் பதிப்புகளுக்கு ஓர் ஆண்டு சந்தா 60.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஓர் ஆண்டு சந்தாக்களும் மாதம் இருமுறைவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தாக்களும் 30.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தா இல்லை.

◼ அக்டோபர் 3, 1994 தொடங்கி, வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகம் சபை புத்தகப் படிப்பில் சிந்திக்கப்படும்.

◼ மாநாட்டின் தலைமை அலுவலகங்களின் விலாசங்களில் இரண்டு மாற்றங்களைத் தயவுசெய்து கவனியுங்கள்:

பம்பாய் (ஹிந்தி): c⁄o F.G. Dias, Post Bag 17723, Borivili West, Bombay, MAH 400 092.

கோழிக்கோடு: c/o Saji Thomas, Chembukavu House, Kanimangalam P.O., Trichur, KER 680 007.

◼ இதுமுதற்கொண்டு, ஒரு சபை, அடுத்த ஆண்டுக்கான காலண்டர்கள் வருடாந்தர புத்தகங்கள் போன்றபிரசுரம் ஒன்றை ஆர்டர் செய்து, அந்தப் பிரசுரம் தற்காலிகமாக இருப்பில் இல்லையெனில், அல்லது அது இனிமேல் கிடைக்கக்கூடியதாக இருந்தால், சங்கம் அந்த ஆர்டரை ஏற்று அதைக் காத்திருக்கும் ஆர்டராக வைக்கும். அத்தகைய பிரசுரங்களின் விவரிப்பும் அளவும் உங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனா காட்டும், ஆனால் அதற்குரிய பணத்தொகை காட்டப்படாது அல்லது கேட்கப்படாது. ஒரு பிரசுரமும் அதன் அளவும் நமூனாவில் தோன்றி ஆனால் பணத்தொகை காட்டப்படாவிடில், அந்தப் பிரசுரம் தற்போது கையிருப்பில் இல்லை எனக் குறிக்கிறது. ஆகவே அந்தப் பிரசுரத்தை நீங்கள் பெறவில்லையென்று கூறி சங்கத்துக்கு எழுதத் தேவையில்லை, ஏனெனில் அதை அந்த அனுப்புதலில் பெற்றுக்கொள்ள நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. மேலும் சங்கம் உங்கள் ஆர்டரை ஏற்றுக்கொண்டதென்றும் அந்தப் பிரசுரம் கிடைக்கும் வரையில் அதைக் ‘காத்திருப்பில்’ வைத்துள்ளது, அது கிடைத்தவுடன் தானாக அது உங்களுக்கு அனுப்பப்படுமென்றும் குறிக்கிறது. ஆகையால் உங்களுக்கு அந்தப் பிரசுரம் இன்னும் அதிகம் தேவைப்பட்டால் தவிர, அதே ஆர்டரை மறுபடியுமாக அனுப்பாதீர்கள்.

◼ 1995 ஆண்டுக்குரிய வேதவாக்கியங்களை ஆராய்தல், காலண்டர்கள், வருடாந்தர புத்தகங்கள் ஆகியவற்றிற்கு ஆர்டர்களை நாங்கள் இப்போது ஏற்கிறோம். உங்கள் ஆர்டர்களை ஜூலை 6, 1994-க்கு முன்பாக தயவுசெய்து அனுப்புங்கள். இந்தப் பிரசுரங்களைப் பிரசுர ஆர்டர் நமூனாவில் (S–AB–14) நீங்கள் ஆர்டர் செய்கையில், அதே நமூனாவில் வேறு எதையும் தயவுசெய்து சேர்க்காதீர்கள். 1995-ம் ஆண்டுக்கான வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகம் ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், நேப்பாளி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் கிடைக்கும்.

◼ “தேவ பயம்” மாநாட்டு பாட்ஜ் கார்டுகளை இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் உடனடியாகத் தங்களுக்குத் தேவைப்படுவதை ஆர்டர் செய்யும்படி கேட்கப்படுகிறார்கள். பாட்ஜ் கார்டுகள் ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழில் கிடைக்கும்.

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

ஆங்கிலம்: பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்; கன்னடம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்