உங்களுடைய கூட்ட நேரங்கள் மாறுமா?
ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்திவருகிற இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சபைகளோ கூட்டங்களை சுழற்சிமுறையில் நடத்துவதற்கு அல்லது கூட்ட நேரங்களை மாற்றிக்கொள்வதற்கு ஒத்துக்கொண்டிருக்கிற சந்தர்ப்பங்களில், ஜனவரி ஆரம்பத்தில் இது செய்யப்படவேண்டும். ஸ்தாபிக்கப்பட்ட ஏற்பாட்டுடன் ஒத்துழைப்பதற்கான மனவிருப்பம் பரஸ்பர அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. பெரும்பாலும் கூட்ட நேரங்களில் மாற்றமானது உங்களுடைய தனிப்பட்ட அனுகூலத்திற்காக இருக்கும்; இது கூட்டத்திற்கு ஆஜராவதை உங்களுக்கு அதிக செளகரியமாக்கும்.
மறுபட்சத்தில், இந்த ஆண்டில் ஏற்படுகிற மாற்றம் உங்களுடைய வேலை அட்டவணையோடு நன்கு பொருந்தாததாக இருக்கலாம். இது வழக்கமான வேலை முறையில் சரிப்படுத்துதல்களைத் தேவைப்படுத்தலாம்; இவ்வாறு செய்வது வேலைக் கிரமத்தைக் குலைப்பதாக இருக்கலாம். ஒத்துழைப்பதற்கான ஒவ்வொருவருடைய மனவிருப்பமானது, உட்பட்டிருக்கிற அனைவரின் பரஸ்பர நன்மைக்காக செயல்படுகிற எல்லாவற்றையும் உள்ளிட்ட ஏற்பாட்டிற்கான போற்றுதலை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
நிச்சயமாகவே, கூட்ட நேரத்தின் அடுத்த சுழற்சி உங்களுடைய விருப்பத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கலாம். இதற்கிடையில், சபையினால் தீர்மானிக்கப்பட்ட அட்டவணைக்கேற்ப வாராந்தர கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் ஆஜராகும்படிக்கு, அவசியமான தனிப்பட்ட சரிப்படுத்துதல்களைச் செய்வதற்கு நீங்கள் உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள். “[யெகோவாவுடைய, NW] ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்,” என்று சொன்ன சங்கீதக்காரனாகிய தாவீதினுடைய நோக்குநிலையைக் காத்துக்கொள்ள பிரயாசப்படுங்கள்.—சங். 122:1.