உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/95 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 1/95 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: விசேஷ அளிப்பாகிய 192-பக்க பழைய பதிப்புகள் ஒவ்வொன்றும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு. எங்களிடம் கிடைக்கக்கூடிய இவ்வகை புத்தகங்களுக்கான பட்டியலுக்கு, தயவுசெய்து டிசம்பர் 1994 நம் ராஜ்ய ஊழியத்தைப் பாருங்கள். நேப்பாளி, பஞ்சாபி அல்லது பெங்காலி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டையோ வேறொரு சிற்றேட்டையோ அளிக்கலாம். மலையாளத்தில் உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்! புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகம் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதை கவனியுங்கள். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 45.00 ரூபாய் (சிறிய அளவு 25.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகத்தை அளித்த பிறகு மறுசந்திப்புகள் செய்யப்படவேண்டும்; பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம் (இப்புத்தகம் ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது). மற்ற மொழிகளில் 192-பக்க புதிய புத்தகங்கள் எவற்றையேனும் வழக்கம்போல் 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்கு சந்தாக்கள்.

◼ இந்த வருடம் நினைவு ஆசரிப்பை வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 14, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அனுசரிப்பதற்கு வசதியான ஏற்பாடுகளைச் சபைகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு சபையும் அதன் சொந்த நினைவு ஆசரிப்பை நடத்துவது விரும்பத்தக்கதாக இருந்தாலும், இது எப்பொழுதும் சாத்தியமல்ல. சாதாரணமாக அநேக சபைகள் ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துகிற இடங்களில், ஒருவேளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சபைகள் அந்த மாலை நேரத்திற்காக பயன்படுத்துவதற்கு மற்றொரு வசதியான மன்றத்தை எடுத்துக்கொள்ளலாம். புதிதாக அக்கறை காட்டுகிறவர்கள் ஆஜராவதை அசெளகரியமாக காணுமளவுக்கு நினைவு ஆசரிப்பை மிகவும் தாமதமாக ஆரம்பிக்கக்கூடாது. மேலுமாக, வந்திருப்பவர்களுக்கு வாழ்த்துதல் தெரிவிக்க அந்த ஆசரிப்புக்கு முன்பும் பின்பும் நேரமில்லாதளவுக்கு நிகழ்ச்சி மிகக் குறுகிய நேர இடைவெளிகளில் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய உதவியை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கு சிலருக்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் அல்லது வழக்கமான பரஸ்பர உற்சாகத்தை அனுபவித்து மகிழுங்கள். எல்லா அம்சங்களையும் முற்றுமுழுக்க சிந்தித்தப் பிறகு, நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகிறவர்கள் அந்த நிகழ்ச்சியிலிருந்து முழுமையாகப் பயனடைய என்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்த உதவியாயிருக்கும் என்பதை மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும்.

◼ ஜனவரி முதற்கொண்டு வட்டாரக் கண்காணிகளுக்கான புதிய பொதுப் பேச்சு, “யெகோவாவில் அடைக்கலம் புகுவதேன்” என்பதாகும்.

◼ “ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களைக் குறித்து பைபிளின் கருத்து” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புதிய பொதுப் பேச்சுக் குறிப்புத்தாளை சொஸையிட்டி தயார்செய்திருக்கிறது. அது பேச்சு எண் 95 என்பதாக குறிக்கப்படும், மேலும் எல்லா சபைகளுக்கும் இரண்டு பிரதிகள் தரப்படும். இந்தப் பேச்சு வேறெந்த விசேஷ முறையிலும் சிந்திக்கப்படாது. மாறாக, சபைகளால் பயன்படுத்தப்படுகிற நிரந்தர பேச்சுக் குறிப்புத்தாள் வரிசையின் பாகமாக இது இருக்கும்; அவற்றை தங்களுடைய உள்ளூர் சூழ்நிலைமைகளுக்குப் பொருத்தமாயிருக்கிற சமயத்தில் கொடுப்பதற்கு அட்டவணையிடலாம்.

◼ ஏப்ரல் 23, 1995 ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லா சபைகளிலும் விசேஷித்த பொதுப் பேச்சு கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் பொருள், “பொய் மதத்தின் முடிவு சமீபம்.” எல்லா சபைகளுக்கும் பேச்சுக் குறிப்புத்தாளின் இரண்டு பிரதிகள் அளிக்கப்படும், அது பேச்சு எண் 96 என்பதாக குறிக்கப்படும். எதிர்காலத்தில் சபைகளால் பயன்படுத்தப்படுவதற்கு நிரந்தர பேச்சுக் குறிப்புத்தாள் வரிசையின் பாகமாக அது இருக்கும். இந்த வருட நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகிற அனைவரையும் அழைப்பதற்கு நிச்சயமாயிருங்கள். வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்படுகிற லட்சக்கணக்கான மாணாக்கர்களுக்கு உதவிசெய்ய ஒரு விசேஷ முயற்சி செய்யப்படும். அந்த நாள் கூட்டத்திற்குப் பிறகு அளிக்கப்படவிருக்கிற தகவல், ஒரு விசேஷ துண்டுப்பிரதியை வினியோகிப்பதில் பங்குகொள்ள எதிர்நோக்கியிருப்பதற்கு பொதுவாக அவர்களையும் நம்முடைய சகோதரர்களையும் தூண்டுவிக்கும். அதே சமயத்தில், தனிப்பட்ட நபர்கள் எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கிற பிரச்சினைகளையும் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாகத் திடத்தீர்மானமாகச் செயல்படுவதன் அவசியத்தையும் அது சுட்டிக்காட்டும். அந்த வாரக் கடைசியில் வட்டாரக் கண்காணியினுடைய சந்திப்பு, வட்டார மாநாடு அல்லது விசேஷ மாநாட்டு தினத்தைக் கொண்டிருக்கிற சபைகள் அதைத் தொடர்ந்துவருகிற வாரத்தில் விசேஷித்த பேச்சை அனுபவிப்பார்கள். ஏப்ரல் 23-க்கு முன்பாக எந்தச் சபையும் விசேஷித்த பேச்சைக் கொடுக்கக்கூடாது.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 1991-1993 (பயனியர்களுக்கு 11.00 ரூபாய், பிரஸ்தாபிகளுக்கு 18.00 ரூபாய்). யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) என்ற வீடியோகேஸட்களுக்கு இப்பொழுது இந்தியாவில் பிரதிகள் தயாரிக்கப்படுகின்றன, குறிப்பிட்டளவான இருப்பே கிடைப்பதாயுள்ளது. இதை வழக்கமான பிரசுர ஆர்டர் (S-AB-14) நமூனாவில் ஆர்டர் செய்யலாம். ஒரு கேஸட்டிற்கான பயனியர் விலை 150.00 ரூபாய், பிரஸ்தாபிக்கு விலை 200.00 ரூபாய்.

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (பெரிய எழுத்துள்ள பதிப்பு, Rbi8); போரில்லா உலகம் எப்பொழுதாவது சாத்தியமா? (ஆங்கிலம்) (யூதர்களுக்கான சிற்றேடு).

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்