உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/95 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 6/95 பக். 3

அறிவிப்புகள்

◼ புத்தக அளிப்புகள் ஜூன்: உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்திய மொழிகளில் 192-பக்க புதிய புத்தகங்கள் எவற்றையேனும் வழக்கமான 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகள் எதையாகிலும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவிசெய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் ஆகியவை. செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் (பெரிய அளவு 45.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம். வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.

◼ அநேக சபைகள் தங்களுடைய தபால்களைப் பெறுவதில் பிரச்சினைகள் இருப்பதாக அறிக்கை செய்வதால், மூப்பர்கள் தங்களுடைய சூழ்நிலைமையை உள்ளூரில் மறுபார்வை செய்து பார்க்கலாம். பத்திரிகை பண்டில்கள் உட்பட, ஒரு சபை பெறுகிற தபாலின் அளவு அசாதாரணமாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, உள்ளூர் அஞ்சல் அலுவலகத்துடனும் தபால்காரர்களுடனும் நல்ல உறவுகளைக் காத்துக்கொள்வதை மூப்பர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அஞ்சல் துறை அதிகாரிகளுடன் தவறாமல் பேச்சுத் தொடர்பும் ஆலோசனைத் தொடர்பும் வைத்துக்கொள்ளும்படிக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள சகோதரர்களை நியமிப்பதையும், இந்தக் கூடுதலான தபால்களைக் கையாளுவதற்கும் கொண்டுவருவதற்குமான போற்றுதலின் காரணமாக, உள்ளூரில் ஏற்றதாக கருதப்படுகிறபடி, தபால்காரர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதையும் இது உட்படுத்தலாம்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.

◼ கோவாவில் நடைபெறும் “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டிற்கான இடம் மர்காவ் என்பதிலிருந்து மாபுசாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

◼ இதுமுதற்கொண்டு, மாவட்ட மாநாடுகள், வட்டார மாநாடுகள், விசேஷ மாநாட்டு தினங்கள் ஆகியவற்றில் எளிய சிற்றுண்டிகள் மாத்திரமே கிடைக்கும். கேஃப்டீரியா பாணியில் சாப்பாடுகள் எதுவும் வழங்கப்படமாட்டா. விரும்பினால், ஆஜராகுபவர்கள் சிற்றுண்டிச் சாலைகளில் கிடைக்கக்கூடியதற்கு கூடுதலானதற்கு தங்களுடைய சொந்த உணவைக் கொண்டுவரலாம்.

◼ 1995 மாநாட்டிற்கான பேட்ஜ் கார்டுகள், ஆராய்தல் 1996, 1996 காலண்டர்கள், 1996 வருடாந்தரப் புத்தகங்கள், 1996 நினைவு ஆசரிப்புக்கான அழைப்பிதழ்கள் ஆகியவற்றை இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள், உடனடியாக ஆர்டர் செய்ய வேண்டும். இதன் சம்பந்தமாக, ஏப்ரல் மாத நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள அறிவிப்பை தயவுசெய்து மறுபார்வை செய்யுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்