ஏப்ரலில் “நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாக” இருங்கள்!
1 சென்ற வருடம் ராஜ்ய செய்தி எண் 34-ன் லட்சக்கணக்கான பிரதிகள் உலகம் முழுவதுமாக விநியோகிக்கப்பட்டபோது, முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் சாட்சி கொடுக்கப்பட்டது. சபை பிரஸ்தாபிகளும் பயனியர்களும் ஊக்கம் ஊட்டுகிற இந்த வேலையில் ஒரேவிதமாக வைராக்கியமாய் பங்குகொண்டனர். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தீர்களா? அவ்வாறு இருந்தீர்களென்றால், அந்தத் தனிச்சிறப்புக்குரிய அளிக்கும் ஏற்பாட்டில் பங்குகொண்டதை சந்தேகமில்லாமல் முழுமையாக அனுபவித்திருப்பீர்கள். இந்த வருடம் எந்த ‘நற்கிரியை’ நமக்கு காத்திருக்கிறது? என்பதாக நீங்கள் ஒருவேளை யோசித்துக்கொண்டிருக்கலாம்.—தீத். 2:14.
2 ஏப்ரல் மாதத்திலும் மே மாதத்தின் ஆரம்பப் பகுதியிலும், “இனி போர்களே இல்லாமல் போகையில்” என்பதை சிறப்பித்துக் காண்பிக்கும் விழித்தெழு! பத்திரிகையின் ஒரு விசேஷ பதிப்பான ஏப்ரல் 22, 1996 பிரதியை விநியோகிக்கும் சந்தோஷத்தை நாம் பெற்றிருப்போம். இந்தத் தலைப்பு பெரும்பாலான வீட்டுக்காரர்களை கவரும் என்ற காரணத்தால், இந்தப் பத்திரிகையை முடிந்தளவு விரிவாக விநியோகிக்க நாம் பெருமுயற்சி எடுப்போம். அதில் இருக்கும் தகவலின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, கையிருப்பில் இருக்கும் அனைத்துமே தீர்ந்துபோகும்வரை, விழித்தெழு! பத்திரிகையின் இந்தப் பிரதி ஏப்ரல், மே மாதங்களின்போது சிறப்பித்துக் காண்பிக்கப்பட வேண்டும்.
3 நம் இலக்கு—எல்லா பிரஸ்தாபிகளும் பங்கேற்றல்: இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஏப்ரல் மாதத்தின்போது பிரசங்க வேலையில் பங்குகொண்டால் அது உண்மையிலேயே உற்சாகமூட்டுவதாய் இருக்கும். கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு இன்னும் மனதில் மங்காமல் இருக்க, வெளி ஊழியத்தில் ஒரு நேரடியான “ஸ்தோத்திரபலியை” செலுத்துவதன்மூலம் கடவுளுடைய நற்குணத்திற்கு போற்றுதலைக் காண்பிக்க நாம் நிச்சயமாகவே விரும்புவோம்.—எபி. 13:15.
4 ஏப்ரலின்போது எல்லாருமே ஊழியத்தில் ஒரு வைராக்கியமான பங்கைப் பெற்றிருக்கும்படி, சபையின் ஒவ்வொரு அங்கத்தினரின் தேவைகளையும் பகுத்துணருவதற்கு ஊக்கமான முயற்சி எடுக்கப்பட வேண்டும். (ரோ. 15:1) சபை புத்தகப் படிப்பை நடத்துபவர்கள் தங்களுடைய பிரிவில் உள்ளவர்களின் சூழ்நிலைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலுமாக தேவைப்படும்போது நடைமுறையான உதவியை அளிக்க வேண்டும். எவருக்காவது போக்குவரத்து வசதி தேவைப்படுகிறதா? அதை எவரால் அளிக்கமுடியும்? சிலர் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவோ அல்லது தன்னுணர்ச்சியுள்ளவர்களாகவோ இருக்கிறார்களா? அதிக அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் அவர்களோடு வேலை செய்ய முடியுமா? முடங்கிக்கிடப்பவர்களை அல்லது சுகவீனமுள்ளவர்களை பற்றியது என்ன? அவர்கள் தொலைபேசிமூலம் சாட்சி கொடுப்பதிலோ, கடிதம் எழுதுவதிலோ, அல்லது வேறு ஏதாவது பலன்தரும் நடவடிக்கைகளிலோ பங்குகொள்ள முடியுமா?
5 செயலற்றவர்களாக ஆகியிருக்கும் சிலர் இடைவிடாத ஆவிக்குரிய உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர், அவர்கள் மறுபடியுமாக பிரசங்க வேலையில் பங்குகொள்வதற்கு ஒருவேளை உந்துவிக்கப்பட்டிருக்கலாம். விசேஷ விழித்தெழு! பத்திரிகையின் அளிப்பு ஏற்பாடு, மறுபடியுமாக செயல்படுபவர்களாக ஆவதற்கு அவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை அளிக்கும்.
6 பங்குகொள்வதற்கு இளைஞர்களை பயிற்றுவியுங்கள்: யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளில் அநேகர், இன்னும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக சேவிக்காதபோதிலும்கூட, பல வருடங்களாக தங்கள் பெற்றோருடன் வீட்டுக்குவீடு சென்றிருக்கிறார்கள். அவர்கள் துவங்குவதற்கு இதுதான் சமயமா? அவர்கள் இருதயத்திலிருந்து தூண்டப்பட்டும், வீட்டுக்குவீடு வேலையில் ஒரு அர்த்தமுள்ள பங்கை வகிப்பதற்கு தயாராகவும் இருக்கிறார்களா? ஒவ்வொருவருடைய வயதுக்கும் திறமைக்கும் ஏற்றபடி அமைக்கப்பட்டிருக்கும் பிரசங்கத்தை தகுதியுள்ள தங்களுடைய பிள்ளைகள் தயாரிக்க உதவுவதற்கு, குடும்பத் தலைவர்கள் குடும்ப பைபிள் படிப்பின்போது நேரத்தை பயன்படுத்த வேண்டும். வீட்டுக்காரருடைய அக்கறையை எழுப்பும், சிந்தனையைத் தூண்டுகிற ஒரு கேள்வியை வயதானவர்கள் தேர்ந்தெடுத்து, பின்பு பத்திரிகையில் அதற்கான பதிலை சுட்டிக்காண்பிக்கலாம். சிறிய பிள்ளைகள் வெகுசில வார்த்தைகளிலேயே திறம்பட்ட சாட்சியைக் கொடுக்கலாம். உதாரணத்திற்கு, “இந்த மாதத்தில் உலகம் முழுவதுமாக அளிக்கப்படும் ஒரு விசேஷ பத்திரிகையை வாசிக்குமாறு” வீட்டுக்காரரை அவர்கள் உற்சாகப்படுத்தலாம். உங்கள் குடும்பத்தினுடைய தயாரிப்பின் ஒரு பாகமாக, அடிக்கடி எதிர்ப்படும் மறுப்புகளை மேற்கொள்வதற்கு ஆலோசனைகளை உட்படுத்த தவறாதீர்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் அநேக நல்ல ஆலோசனைகளை நீங்கள் காண்பீர்கள். உணவு வேளைகளிலும் மற்ற பொருத்தமான வேளைகளிலும், வெளி ஊழியத்தில் குடும்ப அங்கத்தினர்கள் பெற்றிருக்கும் அனுபவங்களை விவரிக்குமாறு அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
7 இயேசு செய்த வேலையை தகுதிபெற்றிருக்கும் பைபிள் மாணாக்கர்கள் தொடர்வார்கள்: கோட்பாடு சம்பந்தமான காரியங்களின்பேரில் அறிவூட்டலை அளிப்பதோடு இயேசு தம்முடைய போதனையை வரையறுக்கவில்லை. ஊழியத்தில் தம் மாணாக்கர்களுடன் சென்று எவ்வாறு பிரசங்கிப்பது என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (லூக். 8:1; 10:1-11) இன்று உள்ள நிலைமை என்ன? இந்தியாவில் பதிமூன்றாயிரத்திற்கும் அதிகமான பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. சந்தேகமில்லாமல், தகுந்த உற்சாகத்தோடு இந்த மாணாக்கர்களில் அநேகர் தங்களுடைய பயிற்றுவிப்பில் அடுத்த படியை எடுத்து, ஏப்ரலில் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக சேவை செய்ய தகுதிபெறக்கூடும்.
8 நீங்கள் ஒரு பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்தால், இந்தக் கேள்விகளை சிந்தியுங்கள்: மாணாக்கர் தன்னுடைய வயதுக்கும் திறமைக்கும் ஏற்ப முன்னேற்றம் காண்பிக்கிறாரா? மற்றவர்களோடு தன் விசுவாசத்தை சந்தர்ப்பவசமாக பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாரா? “புதிய ஆள்தன்மையை” தரித்துக்கொள்கிறாரா? (கொலோ. 3:10, NW) நம் ஊழியம் புத்தகத்தில் 97-லிருந்து 99 வரை உள்ள பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும், முழுக்காட்டுதல் பெறாத பிரஸ்தாபிகளுக்கான தகுதிகளை அவர் பெற்றிருக்கிறாரா? அவர் தகுதிபெற்றிருக்கிறார் என்று நீங்கள் நம்பினால், காரியத்தை அவருடன் ஏன் கலந்துபேசக்கூடாது? சில மாணாக்கர்களுக்கு ஊழியத்தில் பங்குகொள்வதற்கு ஒரு நேரடியான அழைப்பு மாத்திரமே தேவைப்படுகிறது. சந்தேகமில்லாமல், மாணாக்கர் விரும்பினால், எப்போதும்போல இரண்டு மூப்பர்களோடு கலந்துபேசுவதற்கு ஏற்பாடு செய்வது நடத்தும் கண்காணிக்கு முதலில் அவசியமாயிருக்கும். மறுபட்சத்தில், ஒருவேளை ஏதோவொன்று மாணாக்கரை தடுத்து நிறுத்தலாம். ஒருவேளை மூப்பர்களில் ஒருவர் உங்களோடு பைபிள் படிப்புக்கு வந்து, சத்தியத்தின் பேரில் மாணாக்கர் கொண்டுள்ள உணர்ச்சிகளை வெளிக்கொணர செய்யலாம். மாணாக்கர் சொல்வதைக் கேட்ட பின்பு, வேதாகமத்தின் உதவியோடு நடைமுறை ஆலோசனைகளை மூப்பரால் ஒருவேளை அளிக்க முடியும்.
9 துணைப் பயனியராக சேவிக்க ‘நேரத்தை விலைக்கு வாங்குங்கள்’: ஒவ்வொரு வருடமும் நினைவு ஆசரிப்பு காலத்தின்போது, மீட்கும் பொருளுக்கான நன்றியுணர்வு, துணைப் பயனியர்களாக சேவிக்க நேரத்தை ‘விலைக்கு வாங்கும்படி’ ஆயிரக்கணக்கானோரை உந்துவிக்கிறது. (எபே. 5:15-17, NW) சில தியாகங்கள் தேவைப்பட்டாலும்கூட, வெகுமதிகள் மிகப் பெரியவை. இளைஞர்களில் போற்றத்தக்க எண்ணிக்கையானோர் துணைப் பயனியராக சேவிக்க பள்ளி விடுமுறையை பிரயோஜனப்படுத்திக் கொள்கின்றனர். முழுநேர வேலை செய்யும் வயதுவந்தவர்கள் மாலை வேளைகளையும் வாரத்தின் இறுதி நாட்களையும் இதே நடவடிக்கைக்காக முழுவதும் பிரயோஜனப்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு, முழு குடும்பங்களும் ஒன்றுசேர்ந்து துணைப் பயனியர் ஊழியம் செய்யும் வாய்ப்பை பயன்படுத்தியிருக்கின்றனர்! சில சபைகளில் பெரும்பான்மையான மூப்பர்களும், உதவி ஊழியர்களும், அவர்களுடைய மனைவிகளும் துணைப் பயனியர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய வைராக்கியமான முன்மாதிரியினால் தூண்டப்பட்டவர்களாக, மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றியிருக்கிறார்கள். இதனால் சபையிலுள்ள பெரும் சதவீதத்தினர் ஏப்ரலில் துணைப் பயனியர்களாக சேவிக்கின்றனர்.
10 நீங்கள் துணைப் பயனியராக சேவிக்கமுடிந்தாலோ அல்லது முடியாவிட்டாலோ, ஏப்ரலில் வெளி ஊழியத்தில் உங்கள் சேவையை அதிகரிப்பதற்கான வழிகளை கண்டறியுங்கள். உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட இலக்கை வையுங்கள், எட்டுவதற்கு முயற்சியைத் தேவைப்படுத்துகிற ஒன்றாகவும் அதே சமயத்தில் அடையத்தக்க ஒன்றாகவும் அது இருக்க வேண்டும். தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கேற்ப யெகோவாவின் சேவையில் “செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும்” உங்களுக்கிருக்கும் விருப்பம், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கும்.—2 கொ. 12:15.
11 வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்: விழித்தெழு! அளிப்பு ஏற்பாட்டின் ஒவ்வொரு தினத்தின்போதும், ஊழியத்தை சீக்கிரமாகவே ஆரம்பிக்க ஏதுவாயிருக்கும் ஒரு நேரத்தில், வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மாலைநேர ஊழியமும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அநேக பிரஸ்தாபிகள் வார இறுதிநாட்களில் வெளி ஊழியத்தில் பங்குகொள்வார்கள், ஆகவே சபைகள், விசேஷ விழித்தெழு! விநியோகிப்பு நீடிக்கும் காலம்வரை, சனிக்கிழமையன்று வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை காலையிலும் பிற்பகலிலும் அட்டவணையிட வேண்டும்.
12 வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை நடத்துபவர்கள், மிகுதியான பிராந்தியம் கையிருப்பில் இருக்கிறதென்பதை நிச்சயித்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் வேலை செய்யப்படாத பிராந்தியம் முதலில் முடிக்கப்பட வேண்டும். எனினும், சங்கத்தின் மேற்பார்வையில் இருக்கும் நியமிக்கப்படாத பிராந்தியம் சங்கத்தின் அனுமதியின்றி வேலைசெய்யப்படக் கூடாது. சமீபத்தில் செய்துமுடிக்கப்படாத ஓரிரண்டு தனிப்பட்ட பிராந்தியங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? அளிப்பு ஏற்பாட்டின்போது அவற்றில் வேலை செய்ய உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், ஊழியக் கண்காணியிடமோ அல்லது பிராந்தியத்தைக் கவனித்துக்கொள்ளும் சகோதரரிடமோ பேசுங்கள், நீங்கள் உதவியை பெறுவதற்கு ஏற்பாடு செய்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
13 நீங்கள் எவ்வளவு பத்திரிகைகளை அளிப்பீர்கள்? ஒவ்வொரு நபரும் பதில் சொல்லவேண்டிய ஒரு கேள்வி அது. அளிப்பு ஏற்பாட்டின்போது எவ்வளவு பத்திரிகைகளை அளிக்கலாம் என்று தீர்மானிக்கையில், நீங்கள் வேலை செய்யப்போகும் பிராந்தியம் எப்படிப்பட்டது என்பதையும், உங்கள் வயதையும், உங்கள் ஆரோக்கியத்தையும், ஊழியத்திற்கு உங்களால் ஒதுக்கமுடிகிற நேரத்தையும், மற்ற காரணக்கூறுகளையும் சிந்தியுங்கள். எனினும், ஜனவரி 1, 1994, காவற்கோபுரம் பத்திரிகை பிரதியில் கொடுக்கப்பட்டிருந்த நினைப்பூட்டுதலை கவனியுங்கள்: “ஓர் ஆலோசனையாக, பிரஸ்தாபிகள் அவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு மாதத்திற்கு 10 பத்திரிகைகள் என்ற இலக்கை வைத்துக்கொள்ளலாம்; பயனியர்கள் 90 பத்திரிகைகள் கொடுக்க கடும்முயற்சிசெய்யலாம்.” உங்கள் விஷயத்தில் அதேவிதமான இலக்கு நடைமுறையானதாக இருக்குமா?
14 மூப்பர்கள்—கவனமான திட்டமிடுதல் தேவைப்படுகிறது: ஏப்ரல் அளிப்பு ஏற்பாட்டிற்கான சபை முன்னேற்பாடுகள் மூப்பர் குழுவால் மேற்பார்வையிடப்படும். விழித்தெழு!-ன் விசேஷ பிரதியைக்கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சபையின் பிராந்தியம் செய்து முடிக்கப்படுவதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். சபையின் பிராந்தியத்திற்குள் இருக்கும் வியாபார இடங்களில் வேலை செய்வதைக் குறித்ததில் கருத்துள்ள கவனம் செலுத்தப்பட வேண்டும். அங்கே ஊழியம் செய்பவர்கள் நன்கு தயாரித்திருக்க வேண்டும், சுத்தமாக உடுத்தியிருக்க வேண்டும். ஒரு விரிவான பிரசங்கம் தேவையில்லை. வர்த்தகர்களை வீட்டில் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை என்பதாகவும், ஆகவேதான் அவருடைய கடையிலோ அல்லது வர்த்தக இடத்திலோ அவருக்கு நிச்சயமாகவே அக்கறையூட்டும் ஒரு கட்டுரையை அளிக்க சந்திக்கிறீர்கள் என்பதாகவும், ஒரு வர்த்தகரையோ அல்லது ஒரு கடைக்காரரையோ அணுகும்போது நீங்கள் சொல்லலாம். பின்பு அந்தப் பத்திரிகையிலிருந்து ஒரு குறிப்பான விஷயத்தை சுருக்கமாக பகிர்ந்துகொள்ளலாம். பத்திரிகைகளைக்கொண்டு செய்யப்படும் தெரு ஊழியமும் சபை பிராந்தியத்திற்குள் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். தெரு ஊழியத்தில் பங்குகொள்வதற்கான மிகப் பலன்தரும் வழி என்னவென்றால், வழியில் செல்பவர்கள் உங்களை அணுகும்படி காத்திருப்பதற்கு பதிலாக நீங்களே முன்முயற்சி எடுத்து அவர்களை அணுகுவதாகும். நீங்கள் பொதுமக்கள் பார்வையில் இருப்பீர்களென்பதால், ஒரு கண்ணியமான தோற்றத்தைப் பெற்றிருப்பதில் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். அளிப்பு ஏற்பாட்டின்போது, விமான நிலையங்களின் வெளிப்புறம், பஸ் ஸ்டான்டுகள், மருத்துவமனைகள், இரயில் நிலையங்கள், அல்லது கடைத்தெருக்கள், வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்கள், அல்லது பூங்காக்கள் போன்ற மற்ற இடங்கள், பொருத்தமாயிருக்கும் சமயங்களில் வேலை செய்வதற்கு உங்கள் பிராந்தியத்தில் இருக்கலாம். உங்கள் சபையின் பிராந்தியத்தில் உள்ள இப்படிப்பட்ட இடங்களில் சாட்சி கொடுப்பதற்கு என்ன பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.
15 யெகோவா சோர்வின்றி வேலை செய்பவர். (யோவா. 5:17) அவர் வானத்தையும் பூமியையும், செடிகளையும் மிருகங்களையும்கூட சிருஷ்டித்தார்; ஆனால் பூமியிலே தம்முடைய வெற்றிகரமான சாதனையை—மனிதனை—படைக்கும்வரை அவர் தொடர்ந்து வேலை செய்தார். நாம் உயிரைப் பெற்றிருக்கிறோம் என்ற உண்மைதானே, வேலை செய்வதற்கு கடவுளுக்கிருக்கும் மனமுவந்த ஆர்வத்தின் நேரடியான விளைவாகும். ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாக,’ அவர்மீதுள்ள அன்பினால் “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாக” இருக்க நாம் தூண்டப்பட வேண்டும். (எபே. 5:1; தீத். 2:14) நம்முடைய மிகச் சிறந்த முயற்சியை பெற்றுக்கொள்ள யெகோவா பாத்திரராய் இருப்பதன் காரணமாகவும், பலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வைராக்கியமுள்ளவருக்கு அடையாளமாய் இருப்பதன் காரணமாகவும், ஊழியத்தில் தரமுள்ள வேலையை செய்வதற்கு நாம் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். சந்தேகமில்லாமல், அவருக்காக நாம் செய்யும் எந்த விதமான தியாகத்தையும் யெகோவா போற்றுகிறார், மேலுமாக நம் பிரயாசம் எப்போதுமே விருதாவாயிராது. (1 கொ. 15:58) ஆகவே, நன்றியுள்ள இருதயத்தோடு, யெகோவாவின் அங்கீகாரம் மற்றும் அவருடைய ஆசீர்வாதம், அபார வெற்றி ஆகியவற்றின்பேரில் நம்பிக்கையுடன் ஏப்ரலில் வைராக்கியமான நடவடிக்கைக்கு நம்மைநாமே அளிப்போமாக!