உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/96 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • சீஷராக்கும் அவசர சேவை வளரும் வேகத்தில் ஒரு கண்ணோட்டம்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 5/96 பக். 7

கேள்விப் பெட்டி

◼ இப்பொழுது நம்மிடம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் இருக்கிறதாகையால், வீட்டு பைபிள் படிப்பு ஒன்று எவ்வளவு காலத்திற்கு நடத்தப்பட வேண்டும்?

இரண்டு புத்தகங்ளைப் படித்து முடிக்கும் வரையாக, அக்கறைகாட்டுகிற புதிய ஆட்களுடன் வீட்டு பைபிள் படிப்பு ஒன்று தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதாக கடந்த காலங்களில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. இப்பொழுது நம்மிடம் அறிவு புத்தகம் இருப்பதனால், ஜனவரி 15, 1996 காவற்கோபுர இதழில், 13, 14 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்தச் செயல்முறையில் மாற்றம் செய்வது உசிதமானதாக தோன்றுகிறது.

‘நித்திய ஜீவனுக்காக சரியாக மனம்சாய்கிறவர்கள்’ யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதற்காக, அவர்கள் அறியவேண்டியதை கற்றுக்கொள்ள உதவிசெய்வதற்கென அறிவு புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. (அப். 13:48, NW) ஆகவே, இந்தப் புதிய பிரசுரத்தை படித்துமுடித்த பிறகு, அதே மாணாக்கருடன் இரண்டாவது புத்தகம் ஒன்றை படிக்கவேண்டியது அவசியமாய் இருக்காது. உங்களுடைய பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமும் பைபிளையும் பல்வகையான கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசிப்பதன் மூலமும் அவர்களுடைய அறிவை நிறைவாக்கிக் கொள்ளும்படி நீங்கள் படிப்படியாக அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், 175 முதல் 218 வரையான பக்கங்களிலுள்ள கேள்விகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்களானால், இது உதவியாக இருக்கக்கூடும். இந்தக் கேள்விகளை நீங்கள் குறிப்பிடவோ அல்லது பைபிள் மாணாக்கருடன் அவற்றை மறுபார்வை செய்யவோ கூடாது. என்றாலும், முழுக்காட்டுதல் பெறவிருக்கிறவர்களுடன் மூப்பர்கள் கேள்விகளை மறுபார்வை செய்யும்போது அடிப்படை பைபிள் சத்தியங்களைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதலை அந்த மாணாக்கர் வெளிப்படுத்துவதற்கு உதவிசெய்யும் குறிப்புகளை அறிவு புத்தகத்தில் வலியுறுத்திக் காண்பிப்பது நல்லதாக இருக்கலாம்.

பைபிள் போதனைகளை ஆதரிப்பதற்கு அல்லது பொய்க் கோட்பாடுகளை தவறென்று நிரூபிப்பதற்கு புத்தகத்திலில்லாத வேறு விஷயத்தை அல்லது கூடுதலான விவாதங்களைக் கொண்டுவந்து, அறிவு புத்தகத்திலுள்ள தகவலுடன் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. இது வெறுமனே அந்தப் படிப்பை நீண்ட காலப்பகுதிக்கு நீடிக்கவே செய்யும். அதற்குப் பதிலாக, ஓரளவு விரைவாக, ஒருவேளை சுமார் ஆறு மாதங்களிலேயே, அந்தப் புத்தகம் படித்து முடிக்கப்படலாம் என்பதாக நம்பப்படுகிறது. விஷயத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் அளிக்கும்படிக்கு, அதை முன்கூட்டியே நாம் முழுமையாக படிக்க வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. அதைப்போலவே மாணாக்கரும், இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வேதவசனங்களை எடுத்துப் பார்த்து, ஒவ்வொரு அதிகாரத்திலும் இந்தப் புத்தகம் எதைக் கற்பிக்கிறது என்பதை தெளிவாக பகுத்துணர முயற்சிசெய்வதற்காக முன்கூட்டியே படிக்கும்படி அவர் உற்சாகப்படுத்தப்பட வேண்டும்.

பலன்தரும் அதிகளவான பைபிள் படிப்புகளை யெகோவாவின் சாட்சிகள் ஒரு குறுகிய காலத்தில் நடத்துவதற்கான அவசியத்தை காவற்கோபுரம் வலியுறுத்தியிருக்கிறது. (ஏசாயா 60:22-ஐக் காண்க.) அறிவு புத்தகத்தை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் அதற்கிசைவாக நடப்பதற்கும் புதியவர்களுக்கு உதவிசெய்ய முடியும்.—யோவா. 17:3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்