அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்
அக்டோபர்: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்கான சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆண்டு சந்தா 90.00 ரூபாய். மாதம் ஒருமுறை வரும் பத்திரிகைகளுக்கான ஆண்டு சந்தாவும், மாதம் இருமுறை வரும் பத்திரிகைகளுக்கான ஆறுமாத சந்தாவும் 45.00 ரூபாய். மாதம் ஒருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் ஒவ்வொன்றும் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும்.
சந்தாக்களைப் பெறும்போது, (மாதம் ஒருமுறை வரும்) உருது மற்றும் பஞ்சாபி தவிர, காவற்கோபுரம் தற்போது எல்லா இந்திய மொழிகளிலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை கிடைக்கிறது என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள்.
தற்போது, விழித்தெழு! தமிழிலும் மலையாளத்திலும் மாதம் இருமுறை வருகிறது, ஆனால் கன்னடம், குஜராத்தி மற்றும் தெலுங்கில் மாதம் ஒருமுறை வருகிறது. விழித்தெழு! பத்திரிகையின் காலாண்டு விநியோகஸ்தர் பிரதிகள், சபைகளுக்கு உருது, நேப்பாளி, பெங்காலி, மராத்தி மற்றும் ஹிந்தியில் கிடைக்கின்றன, ஆனால் தனிப்பட்ட சந்தாக்கள் இந்த ஐந்து மொழிகளிலும் கிடைக்காது.
நவம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். அளிப்பைப் பெற்றுக்கொண்ட அனைவரையும் வீட்டு பைபிள் படிப்புகள் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சந்திக்க விசேஷ முயற்சி எடுக்கப்படும்.
டிசம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 25.00 ரூபாய் (பெரிய அளவு ரூபாய் 45.00) நன்கொடைக்கு கொடுக்கலாம். இதற்குப் பதிலாக, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையோ என்னுடைய பைபிள் கதை புத்தகத்தையோ 45.00 ரூபாய் நன்கொடைக்கு கொடுக்கலாம்.
ஜனவரி: பழைய 192-பக்க புத்தகங்கள் ஒவ்வொன்றும் 10.00 ரூபாய் நன்கொடைக்கு விசேஷ அளிப்பு. (பயனியர்களுக்கு 5.00 ரூபாய்) இன்னும் எங்களிடம் இருக்கிற இந்த வகையைச் சேர்ந்த புத்தகங்களின் பட்டியலுக்கு, ஜனவரி 1996 நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள ‘அறிவிப்புகள்’ பகுதியைப் பாருங்கள். நேப்பாளி அல்லது பெங்காலி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு 32-பக்க சிற்றேடுகளில் எவற்றையாவது அளிக்கலாம். மலையாளம் வாசிக்க விரும்புகிறவர்களுக்கு உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்குக் கொடுக்கலாம்; பஞ்சாபி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். கடைசியாக மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரு புத்தகங்களும் விசேஷ விலைக்குக் கொடுக்கப்படக் கூடாது என்பதைக் கவனியுங்கள்.
◼ நம் ராஜ்ய ஊழயத்தின் இந்தப் பிரதியின் உட்சேர்க்கை, “1997-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” ஆகும்; 1997 முழுவதும் எடுத்துப் பார்ப்பதற்காக அதை வைத்திருக்க வேண்டும்.
◼ எல்லா மொழிகளிலும், குறிப்பாக கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளர்கள் சொஸைட்டியில் இன்னும் தேவைப்படுகின்றனர். பெத்தேல் சேவைக்கு வரத்தக்க சகோதர சகோதரிகள் தங்கள் சொந்த மொழியில் சோதனை தாளுக்காகக் கோரி சொஸைட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
◼ ஜனவரி 8, 1997 பிரதியிலிருந்து, விழித்தெழு! பத்திரிகை, மராத்தியிலும் ஹிந்தியிலும் ஒரு மாதாந்திர பத்திரிகையாகக் கிடைக்கும். இந்த இரு பதிப்புகளுக்காகவும் தங்கள் ஆர்டர்களை மாற்றிக்கொள்ள விரும்பும் சபைகள், உடனே அவ்வாறு செய்யலாம். நவம்பர் 1996 முதற்கொண்டு, இந்த இரண்டு பதிப்புகளுக்கும் ஒரு வருட சந்தா 45.00 ரூபாய்க்கு அளிக்கலாம்; ஜனவரி 8, 1997, தேதியிட்ட இதழ் முதலாவது பிரதியாக இருக்கும் என்பதை வீட்டுக்காரருக்குத் தெரியப்படுத்திவிட்டு அவ்வாறு அளிக்கலாம்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்—தெலுங்கு
விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை—தெலுங்கு
◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்—குஜராத்தி, தமிழ், மராத்தி, மலையாளம், ஹிந்தி
வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!—தமிழ், மராத்தி
விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை—தமிழ், மலையாளம்