பிரசுர அளிப்புகள்
ஏப்ரல், மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தரப் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கான ஆறுமாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தரப் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தாக்கள் கிடையாது. சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப் பிரதிகள் ஒவ்வொன்றையும் 4.00 ரூபாய்க்கு அளிக்க வேண்டும். பொருத்தமான சந்தர்ப்பத்தில், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார் என்ற சிற்றேட்டை 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.
சந்தாக்களைப் பெறுகையில், பஞ்சாபி, உருது (மாதாந்தர வெளியீடு) தவிர, இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் காவற்கோபுரம் மாதம் இருமுறை வெளிவரும் இதழ் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
விழித்தெழு! மலையாளத்திலும் தமிழிலும் மாதம் இருமுறை வெளிவரும் இதழ், ஆனால் இந்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, நேப்பாளி, மராத்தி ஆகிய மொழிகளில் மாதாந்தர இதழ். உருது, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளில் விநியோகஸ்தருக்கான காலாண்டு விழித்தெழு! பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கும், ஆனால் இந்த மூன்று மொழிகளிலும் தனிப்பட்ட சந்தாக்கள் கிடையாது.
ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. வீட்டு பைபிள் படிப்புகள் நடத்துவதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.
ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் எதையாவது 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஆகியவை.
குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட அளிப்பு திட்டத்திற்கான பிரசுரங்களில் எவற்றையேனும் இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த புத்தகத் தருவிப்பு நமூனாவில் ஆர்டர் செய்ய வேண்டும்.