அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ அளிக்க சங்கம் பட்டியலிட்டிருக்கும் 192 பக்க பழைய புத்தகங்களில் ஏதாவது ஒன்று. (ஜூலை 1997, நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ஐயும் ஏப்ரல் 14, 1997 என தேதியிட்ட சங்கத்தின் கடிதத்தையும் காண்க.) உள்ளூர் மொழியில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லையென்றால், அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 20.00 ரூபாய்க்கு அளிக்கலாம். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம், 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரியது 45.00 ரூபாய்க்கு) அல்லது பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ அளிக்க சங்கம் பட்டியலிட்டிருக்கும் 192 பக்க பழைய புத்தகங்களில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம். உள்ளூர் மொழியில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லையென்றால், அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 20.00 ரூபாய்க்கு அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-க்கான சந்தாக்கள்.
◼ ஜனவரி 5-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்தில் ஆஜராகும் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவரும் மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையையும் தங்களுடைய பிள்ளைகளுக்கு அடையாள அட்டையையும் புத்தக கெளண்ட்டரிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
◼ இந்த வருடம் ஏப்ரல் 11, சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் வசதியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னதாகவே பேச்சு ஆரம்பமானாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களை சுற்றி அனுப்புவது சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்படக்கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது நிகழும் என்பதை தீர்மானிக்க உள்ளூர் மூலங்களைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு சபையும் தனிப்பட்ட விதமாக நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது விரும்பத்தக்கதாக இருந்தாலும் அது எப்போதுமே சாத்தியமாவதில்லை. சாதாரணமாக ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் உபயோகிக்கையில் அந்த மாலை நிகழ்ச்சிக்காக வேறொரு இடத்தை உபயோகிக்க ஓரிரு சபைகள் ஏற்பாடு செய்யலாம். புதிதாக அக்கறை காட்டும் ஆட்கள் கலந்துகொள்வதற்கு வசதிப்படாதபடி வெகு தாமதமாக நினைவு ஆசரிப்பு ஆரம்பிக்கக்கூடாது. ஆசரிப்புக்கு முன்போ பின்போ, வருபவர்களை வரவேற்கவும், அக்கறை காட்டுபவர்களுக்கு தொடர்ந்து ஆவிக்குரிய உதவி அளிக்க ஏற்பாடுகளைச் செய்யவும், அல்லது பொதுவான உற்சாகப் பரிமாற்றத்தை அனுபவிக்கவும் முடியாதபடிக்கு நேரத்தைத் திட்டமிடக்கூடாது. எல்லா அம்சங்களையும் முற்றிலுமாக சீர்தூக்கிப் பார்த்த பிறகு, நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்பவர்கள் அந்த நிகழ்ச்சியிலிருந்து முழுமையாக பலனடைய என்ன ஏற்பாடுகள் செய்வது மிகச் சிறந்த உதவியாக இருக்கும் என்பதை மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும்.
◼ 1998-ன் நினைவு ஆசரிப்பு கால விசேஷ பொதுப் பேச்சு, மார்ச் 29 ஞாயிறு அன்று கொடுக்கப்படும். ஒரு குறிப்புத்தாள் கொடுக்கப்படும். அந்த வார இறுதியில், வட்டாரக் கண்காணியின் சந்திப்பு, வட்டார மாநாடு அல்லது விசேஷ மாநாட்டு தினம் போன்றவற்றை உடைய சபைகளில் அதற்கு மறுவாரத்தில் விசேஷப் பேச்சு கொடுக்கப்படும். மார்ச் 29, 1998-க்கு முன்பாக எந்தச் சபையும் விசேஷப் பேச்சைக் கொடுக்கக்கூடாது.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (T-21)—கொங்கனி (ஆங்கில எழுத்து வடிவில்), பஞ்சாபி
நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (T-22)—கொங்கனி (ஆங்கில எழுத்து வடிவில்), பஞ்சாபி
மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (T-20)—கொங்கனி (ஆங்கில எழுத்து வடிவில்), பஞ்சாபி
◼ கையிருப்பிலிராத பிரசுரங்கள்:
இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? —தெலுங்கு
“உம்முடைய ராஜ்யம் வருவதாக” —ஆங்கிலம், கன்னடம், தமிழ்
ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்—தமிழ்
பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?—ஆங்கிலம்