இந்திய மொழிகளில் ஆத்துமா உபயோகிக்கப்படுதல்
ஆத்துமா அழியாமை போதனையைப் பற்றி இந்திய மொழி எழுத்தாளர்களோ பேச்சாளர்களோ குறிப்பிடுகையில், ஆத்மா என்ற வார்த்தையை அவர்கள் எப்போதும் பயன்படுத்துகின்றனர்; அது மரணம் ஏற்படும்போது இறந்து போகாத மனிதனின் பாகம் எனவும் நம்புகின்றனர். ஆனால், நியூமா (ஆங்கிலம்: ஸ்பிரிட், தமிழ்: ஆவி) என்ற கிரேக்க வார்த்தையை மொழிபெயர்க்க கிறிஸ்தவமண்டல பைபிள் மொழிபெயர்ப்புகள் அதே வார்த்தையை பயன்படுத்தியிருக்கின்றன. அவை சிலசமயங்களில் நெஃபெஷ் என்ற எபிரெய வார்த்தையை (ஆங்கிலம்: சோல்) பிராணி அல்லது பிராண் என்பதாக சரியாக மொழிபெயர்த்திருக்கின்றன; அதற்கு சுவாசிப்ப(து)வன் என்பது அர்த்தம். மனிதன், பிராணி (எபிரெயு: நெஃபெஷ்) ஆக இருக்கிறான் என புரிந்துகொண்டாலும் அவனுக்கு ஆத்மா “இருக்கிறது” அல்லது அவனுக்குள் அழியாத ஒன்று இருக்கிறது என பொதுவாக நம்பப்படுகிறது.
மரணத்திற்குப் பின் உடலை பிரிந்து உயிர்வாழும் அழியாத ஒன்று மனிதனுக்குள் இல்லை என்ற பைபிள் சத்தியத்தை தெளிவாக வலியுறுத்த வேண்டிய அவசியமிருந்தது. எனவே மரணத்திற்குப் பின் வாழ்க்கையைப் பற்றி கலந்தாலோசிக்கும் நமது பிரசுரங்களின் சில பகுதிகளில் மாற்றங்களை செய்ய வேண்டியிருந்திருக்கிறது. இதற்கான உதாரணத்தை ஜூலை 1, 1998 காவற்கோபுரத்தின் 3 படிப்புக் கட்டுரைகளிலும் காணலாம்.