பைபிளின் அபார சக்தியை பாருங்கள்
எப்படி? பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி என்ற ஆங்கில வீடியோவை பார்ப்பதனாலேயே. பைபிள்—உண்மையும் தீர்க்கதரிசனமும் அடங்கிய புத்தகம் (ஆங்கிலம்) என்ற தலைப்பில் உள்ள வீடியோ கேஸட்டுகளின் மூன்றாவது பாகம் இது.
வெற்றிகரமான விவாக வாழ்க்கைக்காக ஏங்குகிறீர்களா? இக்கட்டான காலங்களை சமாளிக்க உதவி தேவையா? இளைஞர் பொறுப்புள்ளவர்களாக எப்படி வளரலாம்? இந்த வீடியோ காட்டுகிறபடி, இவை அனைத்திற்கும் பைபிள் உதவும். தங்களுடைய வாழ்க்கையில் பைபிள் என்னவிதமான நன்மைகளையெல்லாம் பெற்றுத்தந்தது என்பதை மற்றவர்கள் சொல்லக் கேளுங்கள். இன்று வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்ப்பட அதன் நியமங்கள் அவர்களுக்கு எப்படி உதவின என்பதை அவர்கள் விளக்க அதற்கு செவிகொடுங்கள்.
கடவுளுடைய வார்த்தையை வாழ்க்கையில் வழிகாட்டியாக பயன்படுத்துவதால் விளைந்த பயன்கள் அநேகம். அதை புதிதாக ஆர்வம் காட்டும் நபர்கள் பார்க்க உதவும் மதிப்புமிக்க கருவி இந்த வீடியோ. பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி என்ற இந்த வீடியோ சங்கத்திடம் கையிருப்பில் இருக்கிறது. சபை புத்தக இலாகா ஊழியர்மூலமாக இதைக் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.