யெகோவாவின் வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள், ஒவ்வொரு நாளும்!
1 ஒவ்வொரு நாளும் புதிய புதிய சிக்கல்கள் உங்கள் விசுவாசத்தை பரீட்சிக்கின்றன. அவை என்ன? உங்களுக்கு பரிச்சயமான சத்தியத்தில் இல்லாத ஒருவர் காதலிக்கும்படி உங்களை கட்டாயப்படுத்தலாம். உலகப்பிரகாரமான வாழ்க்கைப்பணியை நீங்கள் மேற்கொள்ளும்படி உங்கள் ஆசிரியர் விரும்பலாம். அல்லது ஓவர் டைம் செய்யும்படி உங்கள் அதிகாரி சொல்லலாம். உங்களுடைய உடல்நலம் குன்றிக்கொண்டே போகலாம். எந்த நேரத்திலும் இப்படிப்பட்ட சோதனைகள் உங்களுக்கு வரலாம். என்றபோதிலும், நீங்கள் தனித்து விடப்படவில்லை. அவற்றை சமாளிப்பதற்கான ஞானத்தை யெகோவா நிச்சயம் தருவார். தவறாமல், ஒவ்வொரு நாளும் யெகோவாவின் வார்த்தையை தியானிப்பதற்கான ஒரு வழி வேதவாக்கியங்களை ஆராய்தல் புக்லெட்டில் இருந்து தினவசனத்தையும் அதன் குறிப்புகளையும் சிந்திப்பதே. இந்த ஏற்பாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?
2 உதவி இதோ: ஏசாயா 30:20 (NW) யெகோவாவை “மகத்தான போதகர்” என குறிப்பிடுகிறது. கடவுளுடைய ஜனங்கள் அவரிடம் உதவிக்காக எப்போதும் செல்லலாம். உங்கள் விசுவாசத்தை தகர்க்க வரும் பிரச்சினைகளை நீங்கள் எதிர்ப்பட என்ன தேவையோ அதை அவர் உங்களுக்கு தருகிறார். எப்படி? அடுத்த வசனம் விளக்குகிறது: “வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” இன்று, வசனங்கள் மற்றும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் பிரசுரிக்கும் புத்தகங்கள் வாயிலாக யெகோவா தம் “வார்த்தையை” அளிக்கிறார். (மத் 24:45, NW) காவற்கோபுரம் பத்திரிகையின் பழைய பிரதிகளில் வந்துள்ள கட்டுரைகள் ஞானத்தின் மணிக்கற்கள். கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லா அம்சங்களைப் பற்றியும் அவை தெளிவுபடுத்துகின்றன. வேதவாக்கியங்களை ஆராய்தல் புக்லெட்டில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பிரதிகளை மறுபடியும் சிந்தியுங்கள். எல்லா விதமான சோதனைகளையும் சமாளிக்க தேவையான அரிய குறிப்புகளை தரும் அறிவுப்பெட்டகம் அவை.—ஏசா. 48:17.
3 நேரத்தை ஒதுக்குங்கள்: காலை நேரம் ஹரிபரியான நேரம். என்றாலும், காலை உணவு சாப்பிடும்போது தன் மகனோடு சேர்ந்து தினவசனத்தை வாசித்து, அதை சிந்திக்க ஒரு தாய் நேரத்தை ஒதுக்கினார். அவன் பள்ளிக்கு செல்லும் முன் ஒவ்வொரு நாளும் அவன் கேட்டவை இவையும் ஜெபமுமே. இவைதான், பாலுறவு சம்பந்தமான சோதனைகள் வரும்போது அவற்றை எதிர்க்க அவனை பலப்படுத்தின. நாட்டுப்பற்று பற்றிய பிரச்சினை எழும்பியபோது, சத்தியத்திற்காக விட்டுக்கொடுக்காத நிலை எடுக்க உதவின. மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தைரியமாக சாட்சி கொடுக்க ஊக்கமளித்தன. அந்தப் பள்ளியில் இருந்த ஒரே ஒரு சாட்சி அவன்தான். ஆனாலும், அவன் தனித்து விடப்பட்டவனாக உணரவில்லை.
4 வழிநடத்துதலுக்கும் அறிவுரைக்கும் யெகோவாவையும் அவருடைய வார்த்தையையுமே நாடுங்கள். அப்படி செய்தீர்களானால், நம்பிக்கைக்குரிய உயிர்த்தோழன் போல அவரும் உங்களுக்கு இருப்பார். அவரையே நாடுங்கள், ஒவ்வொரு நாளும்! உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் தினமும் கடவுளுடைய வார்த்தையை கலந்தாராய்கின்றனர். அவர்களோடு சேர்ந்து உங்கள் ‘கண்களும் உங்களுடைய மகத்தான போதகரைக் காணட்டும்.’